திகன வன்முறைச் சம்பவம் தொடர்பான சந்தேக நபர் மஹசோன் பலகாயத் தலைவர் அமித் ஜீவன் வீரசிங்க உட்பட 13 சந்தேக நபர்களை அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி மீண்டும் தெல்தெனிய நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு தெல்தெனிய நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5 ஆம் திகதி திகன தெல்தெனிய நகரப் பகுதிகளில் இடம்பெற்ற முஸ்லிம்கள் மீதான வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் தெல்தெனிய பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தெல்தெனிய நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டு நீண்ட நாள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மஹசோன் பலகாய தலைவர் அமித் ஜீவன் வீரசிங்க உட்பட 13 சந்தேக நபர்களும் பின்னர் கடுமையான நிபந்தனைகளுடன் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இவர்கள் மீண்டும் தெல்தெனிய நீதிமன்ற நீதிவான் சாணக்க கலன்சூரிய முன்னிலையில் நேற்று முன்தினம் ஆஜராகிய போதே நீதிவான் அமித் வீரசிங்க உட்பட 13 சந்தேக நபர்களையும் 2020 பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி காலை 11 மணிக்கு தெல்தெனிய நீதிமன்றில் ஆஜராகுமாறும் நீதிவான் சாணக்க கலன்சூரிய உத்தரவிட்டுள்ளார்.
இச் சந்தேக நபர்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாகவும் தெரிவித்து அறிக்கை ஒன்றினை மன்றில் மேலதிக அறிக்கை ஒன்றினைச் சமர்ப்பித்த பொலிஸார் சட்டமா அதிபரின் ஆலோசனையை எதிர்பார்த்துள்ளதாகவும் பி. அறிக்கை மூலம் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
vidivelli