நிகா­புக்கு தடை விதிக்க கோரும் மனுவை தள்­ளு­படி செய்­தது இந்­திய உயர் நீதி­மன்றம்

0 613

பள்­ளி­வா­சல்­களில் முஸ்லிம் பெண்­க­ளுக்கும் தொழுகை நடத்­து­வ­தற்கு அனு­மதி வழங்­கப்­பட வேண்டும் என்றும் முஸ்லிம் பெண்கள் முகத்தை மறைத்து அணியும் முகத்­தி­ரைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் தாக்கல் செய்­யப்­பட்ட மனுவை இந்­தி­யாவின் உயர் நீதி­மன்றம் தள்­ளு­படி செய்­துள்­ளது.
அகில பாரத இந்து மகா­சபா அமைப்பின் கேரளா கிளையின் தலைவர் சுவாமி தத்­தாத்­ரேய சாயி ஸ்வரூப் நாத் என்­பவர் கேரள மேல் நீதி­மன்றில் இவ்­வ­ழக்கைத் தாக்கல் செய்­தி­ருந்தார்.

இம் மனுவை குறித்த நீதி­மன்றம் தள்­ளு­படி செய்­தி­ருந்­தது. இந் நிலையில் இதற்கு எதி­ராக அவர் இந்­திய உயர் நீதி­மன்­றத்தில் வழக்குத் தாக்கல் செய்தார்.

இந் நிலையில் நேற்று முன்­தினம் இந்­திய உயர் நீதி­மன்ற தலைமை நீதி­பதி ரஞ்சன் கோகாய் தலை­மை­யி­லான அமர்வில் இவ் வழக்கு விசா­ர­ணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே உயர் நீதி­மன்­றம் தள்­ளு­படி செய்­துள்­ளது.
விசா­ரணை தொடங்­கி­யதும், இந்த மனுவை தாக்கல் செய்ய மனு­தா­ர­ருக்கு முகாந்­திரம் ஏதும் இல்லை என்று கூறிய நீதி­ப­திகள், கேரள மேல் நீதி­மன்றம் ஏலவே வழங்கி தீர்ப்பில் இந்த மனு வெறும் விளம்­ப­ரத்­துக்­காக மட்­டுமே தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ள­தாக கூறி­ய­தையும் சுட்­டிக்­காட்­டினர். மேலும், ஒரு முஸ்லிம் பெண்­மணி முன்­வந்து இந்த வழக்கைத் தாக்கல் செய்தால் அந்த மனுவை பரி­சீ­ல­னைக்கு எடுத்து கொள்ளத் தயாராகவுள்ளோம் என்று கூறி மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் அறிவித்தனர்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.