முஸ்லிம் அமைச்சர்கள் தங்களது பதவிகளை இராஜினாமா செய்து ஒரு மாதம் பூர்த்தியடைந்துள்ள நிலையில் தங்களது எதிர்கால அரசியல் தீர்மானங்கள் குறித்து எதிர்வரும் 11 ஆம் திகதி பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் ஒன்றுகூடி ஆராயவுள்ளனர்.
இராஜினாமா செய்து கொண்டுள்ள முன்னாள் அமைச்சர்கள் தங்களது அமைச்சுப் பதவிகளை ஏற்பதா? இல்லையா என்பது பற்றி தீர்மானம் மேற்கொள்வார்கள் என முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தலைமை தாங்கும் சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌஸி தெரிவித்தார்.
கடந்த ஜூன் மாதம் 3 ஆம் திகதி 4 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களும், 4 இராஜாங்க அமைச்சர்களும், ஒரு பிரதியமைச்சரும் என 9 முஸ்லிம் அமைச்சர்கள் 10 அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து தமது அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்து கொண்டனர்.
இராஜினாமா செய்து இரு வாரங்களில் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எச்.ஏ. ஹலீம் மற்றும் கபீர் ஹாஷிம் ஆகிய இருவரும் தங்களது முன்னைய அமைச்சுப் பதவிகளைப் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
11 ஆம் திகதி நடைபெறவுள்ள கூட்டத்தில் முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தில் திருத்தங்கள் கல்முனை தமிழ்ப் பிரதேச செயலக விவகாரம் தொடர்பிலும் ஆராயப்படவுள்ளன.
vidivelli