மினுவாங்கொடை , குருநாகல் , நாத்தாண்டிய வன்செயல்களினால் 826 சொத்தழிவுகள்

பிரதேச செயலகங்களினூடாக நஷ்டஈடு

0 891

கடந்த மே மாதம் இரண்டாம் வாரம் கம்­பஹா, குரு­நாகல் மற்றும் புத்­தளம் மாவட்­டங்­களில் மேற்­கொள்­ளப்­பட்ட முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ரான வன்­செ­யல்­க­ளினால் 826 சொத்­த­ழி­வுகள் ஏற்­பட்­டுள்­ள­தாக அந்­தந்தப் பிர­தே­சங்­களின் பிர­தேச செய­ல­கங்­க­ளினால் புனர்­வாழ்வு அமைச்சின் கீழ் இயங்கும் இழப்­பீட்டு பணி­ய­கத்­துக்கு அறி­விக்­கப்­பட்­டுள்­ளன.

சேத­மாக்­கப்­பட்­டுள்ள சொத்­து­க­ளுக்­கான நஷ்­டங்­களை மதிப்­பீடு செய்யும் பணிகள் தற்­போது ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும், விரைவில் நஷ்­ட­ஈ­டுகள் வழங்­கப்­ப­டு­மெ­னவும் அதற்­கான அங்­கீ­கா­ரத்தை அமைச்­ச­ரவை வழங்­கி­யுள்­ள­தா­கவும் இழப்­பீட்டு பணி­ய­கத்தின் மேல­திகப் பணிப்­பா­ளரும், இழப்­பீ­டு­களை மதிப்­பீடு செய்யும் குழுவின் உறுப்­பி­ன­ரு­மான எஸ்.எம். பதுர்தீன் விடி­வெள்­ளிக்குத் தெரி­வித்தார்.

சொத்­து­களின் மதிப்­பீ­டுகள் எதிர்­வரும் 2 ஆம் திகதி மினு­வாங்­கொ­டை­யிலும், 4 ஆம் திகதி நாத்­தாண்­டி­யா­விலும் ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்­ள­தா­கவும், அழி­வு­க­ளுக்­குள்­ளான சொத்­து­களின் ஆவ­ணங்கள், உறு­திகள், உரி­மை­யா­ளர்­களின் தேசிய அடை­யாள அட்டை, சேதங்­க­ளுக்­குள்­ளான தள­பா­டங்கள், பொருட்­களின் விப­ரங்கள், வாக­னங்­களின் பதி­வுகள் என்­பன பரி­சீ­லிக்­கப்­ப­ட­வுள்­ள­தா­கவும் அவர் கூறினார்.

கம்­பஹா மாவட்­டத்தில் மினு­வாங்­கொடை, பூகொடை பகு­தி­களில் இடம்­பெற்ற வன்­செ­யல்­க­ளினால் மொத்தம் 164 சொத்­த­ழி­வுகள் ஏற்­பட்­டுள்­ளன. இவற்றில் 51 வீடுகள், 73 கடைகள், 34 வாக­னங்கள், 2 பள்­ளி­வா­சல்கள் அடங்­கு­வ­துடன் 4 பேர் காயங்­க­ளுக்­குள்­ளா­கி­யுள்­ளனர்.

குரு­நாகல் மாவட்­டத்தில் பல பகு­தி­களில் இடம்­பெற்ற வன்­செ­யல்­க­ளினால் மொத்தம் 480 சொத்­த­ழி­வுகள் ஏற்­பட்­டுள்­ளன. இவற்றில் 26 பள்­ளி­வா­சல்கள், 89 வாக­னங்கள், 183 கடைகள், 178 வீடுகள் அடங்­கு­வ­துடன் 4 பேர் காயங்­க­ளுக்­குள்­ளா­கி­யுள்­ளனர்.

புத்­தளம் மாவட்­டத்தில் நாத்­தாண்­டியா, சிலாபம் மற்றும் தங்­கொட்­டுவ போன்ற பகு­தி­களில் இடம்­பெற்ற வன்­செ­யல்­க­ளினால் மொத்தம் 182 அழி­வுகள் ஏற்­பட்­டுள்­ளன. இவற்றில் 13 பள்­ளி­வா­சல்கள், 22 வாக­னங்கள், 58 கடைகள், 86 வீடுகள் அடங்­கு­வ­துடன் இருவர் காயங்­க­ளுக்­குள்­ளா­ன­துடன் ஒருவர் பலி­யா­கி­யுள்ளார்.

வன்­செ­யல்­க­ளினால் பாதிக்­கப்­பட்ட, அழி­வு­க­ளுக்­குள்­ளான சொத்­து­க­ளுக்கு உரிய நஷ்ட ஈடுகள் விரைவில் வழங்­கப்­ப­டு­மெ­னவும், நஷ்­ட­ஈடு வழங்கும் பணி­களை துரி­தப்­ப­டுத்­து­மாறும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பணித்துள்ளார் எனவும் அவர் கூறினார்.

வர்த்தக நிலையங்களுக்கு முழுமையான நஷ்டஈடுகள் வழங்கப்படும் வரை வர்த்தகங்களை மீண்டும் ஆரம்பிப்பதற்கு முற்பணம் வழங்குமாறும் இழப்பீட்டு பணியகத்துக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார்.

vidivelli 

Leave A Reply

Your email address will not be published.