மிறிஹம்பிடிய பள்ளிவாசலுக்குள் மதுபோதையில் கடந்த வாரம் அத்துமீறி நுழைந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நபர் இன்று விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பிரதேச முஸ்லிம்– சிங்கள மக்களிடையே சமாதானத்தை நிலை நிறுத்தும் வகையில் வாரியபொல பொலிஸ் நிலையத்தினால் கடந்த சனிக்கிழமை சமாதானக் கூட்டமொன்றும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
வாரியபொல பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த ஐ.பி. ஜயகொடி, ஐ.பி. குணரத் பண்டா ஆகியோர் தலைமையில் ஈதனவத்த சனசமூக நிலையத்தில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் இப்பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம்கள் பெரும்பான்மையாகவும் ஏனையவர்கள் சிலருமாக கலந்துகொண்டிருந்தனர்.
vidivelli