தொடரும் ஊடகப் போர்

0 763
  • எம்.எம்.ஏ.ஸமட்

எவ்­வித தணிக்­கையும் தடை­யு­மின்றிக் கருத்தை ஆக்க, அறிய, வெளிப்­ப­டுத்த ஒரு­வ­ருக்கு இருக்கும் சுதந்­தி­ரமே கருத்து வெளிப்­பாட்டு சுதந்­தி­ர­மாகும். கருத்து வெளிப்­பாடு என்­பது பேச்சுச் சுதந்­திரம், ஊடக சுதந்­திரம், சிந்­தனை சுதந்­திரம், சமய சுதந்­திரம் போன்ற பல்­வேறு சுதந்­தி­ரங்­க­ளுடன் இணை­வாக முன்­னி­றுத்­தப்­ப­டு­கி­றது.

ஒரு நபரின் கருத்தை மற்­று­மொரு நபர் புரிந்­து­கொள்ள வேண்­டு­மாயின் அவர் அறிந்த, தெரிந்த மொழியில் அவ­ரிடம் முன்­வைக்­கும்­போதே அவரால் இல­குவில் புரிந்­து­கொள்ள முடி­கி­றது. ஏனெனில், மொழி ஒரு நாட்­டி­னு­டைய, தனி மனி­த­னு­டைய வாழ்வின் முக்­கிய அம்­ச­மாக இருக்­கி­றது.

இந்­நாடு அமை­தி­ய­டையக் கூடாது என எண்­ணு­கின்ற அர­சி­யல்­வா­தி­களும், கடும்­போக்கு செயற்­பாட்­டா­ளர்­களும் இந்­நாட்டில் தொடர்ந்து ஏதோ ஒரு பிரச்­சினை ஏற்­பட்டுக் கொண்­டி­ருக்க வேண்டும் அல்­லது ஏற்­ப­டுத்த வேண்­டு­மென்ற மனப்­பாங்­கி­லேயே உள்­ளனர். இன­வாத பரு­வ­கால நோயும் அது­வாக இருப்­பதை அவ­தா­னிக்க முடி­கி­றது. கடும்­போக்­கு­வாதம் கொண்­ட­வர்­களின்  செயற்­பா­டுகள், ஊக்­க­ப­ப­டுத்­தல்கள் மற்றும் பரப்­பு­ரைகள் அதனை நிரூ­பிப்­ப­தாக அமை­கி­றது.

கடந்த காலங்­களில் அவ்­வப்­போது முஸ்லிம் எதிர்ப்­பா­ளர்­க­ளினால் முன்­வைக்­கப்­பட்டு வந்த குற்­றச்­சாட்­டுக்­களும் அது தொடர்­பான பரப்­பு­ரை­களும் ஏப்ரல் 21 தாக்­கு­தல்­களின் பின்னர் வீரியம் பெற்­றுள்­ள­துடன் அவற்றை செய­லுருப் பெறச் செய்­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் தற்­போது முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­வதை அவ­தா­னிக்க முடி­கி­றது.  இத்­தாக்­கு­தல்­களின்  பின்­ன­ரான இந்த இரு­மாத காலப்­ப­கு­தியில் முஸ்­லிம்கள் தொடர்­பாக மேற்­கொள்­ளப்­ப­டு­கின்ற இன­வாதப் பரப்­பு­ரை­க­ளுக்கு முஸ்­லிம்­களின் அர­சியல், சமூக, சமய, வர்த்­தகம் குறித்த பல்­வேறு விட­யங்கள் உள்­ள­டுக்­கப்­பட்­டுள்­ளதைக்  காண­மு­டி­கி­றது.

இப்­ப­ரப்­பு­ரைகள் மற்றும் அவை தொடர்­பான நட­வ­டிக்­கை­க­ளினால் ஒட்­டு­மொத்த முஸ்­லிம்­களும் வெகு­வாகப் பாதிக்­கப்­பட்டுக் கொண்­டி­ருக்­கி­றார்கள் என்­பதை மனி­தா­பி­மானம் கொண்­ட­வர்கள் உணர்ந்­துள்­ள­துடன், இப்­ப­ரப்­பு­ரை­க­ளுக்கு எதி­ரா­கவும், நாட்டின் அமைதி, சக­வாழ்வு, சமூகப் பிணைப்பு என்­ப­வற்­றுக்­கா­கவும் குரல்­கொ­டுத்துக் கொண்­டி­ருப்­ப­தையும் அவ­தா­னிக்க முடி­கி­றது.

இந்­நாட்டில் சமா­தா­னமும், அமை­தியும், சமூக நல்­லி­ணக்­கமும் ஏற்­படக் கூடா­தென்ற சிந்­தனை கடும்­போக்­கு­வா­திகள் மத்­தியில் மேலோங்­கி­யி­ருக்­கி­றது. அர­சியல் மற்றும் தனி­நபர் நிகழ்ச்சி நிரல்­களின் பயன்­க­ளுக்­காக முஸ்­லிம்கள் நோக­டிக்­கப்­பட்டுக் கொண்­டி­ருக்­கி­றார்கள் என்­பதை முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான இந்த இன­வாதப் பரப்­பு­ரைகள் புடம்­போ­டப்­ப­டு­கி­றது. இவற்­றுக்கு ஒரு­சில ஊடக தர்மம் இழந்த ஊட­கங்கள் ஒத்­து­ழைப்பு வழங்கிக் கொண்­டி­ருப்­பதைக் காணலாம்.

30 வருட காலம் இடம்­பெற்ற யுத்­தத்­திற்கு முடி­வு­கட்­டப்­பட்­டுள்­ளதால் மாத்­திரம் இந்­நாட்டில் உண்­மை­யான சமா­தானம் ஏற்­பட்­டு­விட்­ட­தாக அர்த்தம் கொள்ள முடி­யாது. அது எதிர்­மறை சமா­தானம் மாத்­தி­ர­மே­யாகும். நிலை­யான சமா­தா­னத்தை அல்­லது உடன்­பா­டான சமா­தா­னத்தை இந்­நாட்டில் அடைய வேண்­டு­மாயின், திருப்­தி­கொள்­ளத்­தக்­க­தாக  மக்­க­ளது பிரச்­சி­னை­களைத் தீர்த்து தேவை­களைப் பூர்த்தி செய்தல், சமூக இசை­வினை ஏற்­ப­டுத்­துதல், சம­மின்­மை­களை இயன்­ற­வரை குறைத்தல், நிலை­யான மக்கள் பயன் பெறும் அபி­வி­ருத்தி, மனித உரி­மை­க­ளுக்கும் சட்­ட­வாட்­சிக்கும் மதிப்­ப­ளித்தல், இணக்­கத்­தோடு இணைந்த ஜன­நா­ய­க­மான அர­சியல் நிலைப்­பாடு, சமூகப் பிணைப்பு என்­பன நாட்டில்  ஏற்­ப­டுத்­தப்­பட வேண்டும்.

யுத்தம் நிறை­வ­டைந்து ஒரு தசாப்தம் நிறை­வ­டைந்­துள்ள நிலையில் மேற்­கு­றித்­த­வற்றை அடை­வ­தற்­காக முயற்­சிகள் எடுக்­கப்­பட்ட போதிலும், இன­வாதம் வெவ்­வேறு உரு­வங்­களில் அவற்­றிற்கு எதி­ராக செயற்­பட்­டி­ருக்­கி­றது என்­பதை கடந்­த­கால வர­லாறுப் படி­மங்கள் புலப்­ப­டுத்­து­கின்­றன.  ஆதி­கா­லத்தில் காட்­டு­மி­ராண்­டி­க­ளாக வாழ்ந்த மனி­தர்­களில் எழுந்த கட்­டுப்­பா­டற்ற மன­வெ­ழுச்­சிகள், வன்­மு­றை­க­ளுக்கு வழி­வ­குக்கும் அடிப்­படை இயல்­பூக்­கங்கள் போன்று தற்­போ­தைய சில மனி­தர்­க­ளி­டை­யேயும் காணப்­ப­டத்தான் செய்­கி­றது. அத­னால்தான், அத்­த­கை­ய­வர்கள் கட்­டுப்­பா­டாற்ற மன­வெ­ழுச்­சி­க­ளினால் உந்­தப்­பட்டு வன்­மு­றை­சார்ந்த, அமை­தியைக் குழப்­பக்­கூ­டிய செயற்­பா­டு­க­ளையும், கருத்­துக்­க­ளையும் வெளிப்­ப­டுத்திக் கொண்­டி­ருப்­பதை அவ­தா­னிக்க முடி­கி­றது.

அர­சியல், வர்த்­தகம், பிர­பல்யம், விளம்­பரம் சார்ந்த சுய­ரூ­பங்­களை வேண்டி நிற்­ப­வர்­க­ளினால் ஆதி மனி­தர்­க­ளி­டையே சுதந்­தி­ர­மாகக் காணப்­பட்ட அடிப்­படை இயல்­பூக்கள் நவீன யுகத்தில் காலத்­திற்குக் காலம் வெளிப்­ப­டுத்­தப்­ப­டு­வ­தனால் இந்­நாட்டில் இன்­னுமே  சமா­தான கலா­சார மிக்க சமூ­கத்தை உரு­வாக்க முடி­யாமல் உள்­ளது. மனி­தனை மனி­த­னாக மாற்றக் கூடிய ஆரோக்­கி­ய­மான மனப்­பாங்­கு­களை கட்­டி­யெ­ழுப்­பக்­கூ­டிய மன­வெ­ழுச்­சி­களை முகா­மைத்­துவம் செய்தல், சகித்­துக்­கொள்ளல், பிறர் உணர்வை தான் பெறுதல், நன்­றி­யு­டைமை, பாராட்­டுதல், வர­வேற்றல், விட்­டுக்­கொ­டுத்தல், திறந்த புத்­து­ணர்­வான கலந்­து­ரை­யா­டல்­களை மேற்­கொள்ளல் போன்ற சமா­தானக் கலா­சா­ரத்­திற்­கான, நல்­லி­ணக்­கத்­திற்­கான, சமூகப் பிணைப்­புக்­கான பண்­பு­களை வளர்ப்­ப­தற்­கான செயற்­றிட்­டங்­களை முன்­னெ­டுக்­கப்­ப­டு­வது காலத்­திற்­குக காலம் முயற்­சித்­தாலும் அவை வெற்­றி­ய­ளிப்­ப­தற்கு இன­வாதப் பரப்­பு­ரைகள் தடைக்­கல்­லாக இருந்து வரு­வது வெளிப்­படை.

இவற்றை அர­சி­யல்­வா­திகள் மத்­தி­யிலும் ஏனைய மரண இயல்­பூக்கம் கொண்­ட­வர்­க­ளி­டத்­திலும் ஏற்­ப­டுத்­து­வதில் ஊட­கங்கள் பெரும்­பங்­காற்ற வேண்­டி­யுள்­ளது. ஆனால், அதற்கு மாறா­கவே சில ஊடங்கள் செயற்­பட்­டுக்­கொண்­டி­ருப்­ப­தாகக் கூறப்­பட்டு வரு­கின்­றன. ஊடகம் என்­பது சக்­தி­மிக்­கது. மனி­தனை மனி­த­னாக மாற்­றவும், மிரு­க­மாக மாற்­றமும், ஆட்­சியை ஏற்­ப­டுத்­தவும் அவற்றை இல்­லாமல் செய்­யவும் ஊடத்­தினால் முடியும். அந்­த­ளவு சக்தி மிக்க ஒன்­றான ஊட­கத்தை இயக்­கு­கின்ற ஊடக நிறு­வ­னங்­க­ளுக்கு ஊடகத் தர்­மத்­தையும், ஊடக ஒழுக்கக் கோவை­யையும் கடைப்­பி­டித்து செயற்­பட வேண்­டிய பொறுப்பும் உள்­ளது என்­பது சுட்­டிக்­காட்­டப்­பட வேண்­டி­ய­தாகும்.

விட்ட தவறும் படும் வேத­னையும்

சனத்­தொகை எண்­ணிக்கை அடிப்­ப­டையில் உலகில் 59ஆவது இடத்தை இலங்கை வகிக்­கி­றது. நம் நாட்டில் ஏறக்­கு­றைய 2 கோடியே 30 இலட்சம் மக்கள் வாழ்­கின்­றனர். இவர்­களில்  74 வீத­மானோர் தாய்­மொ­ழி­யாக சிங்­க­ளத்­தையும் 18 வீதத்­தினர் தாய் மொழி­யாகத் தமி­ழையும் 8 வீத­மானோர் ஏனைய மொழி­க­ளையும் பேசு­கின்­றனர். இருப்­பினும், இலங்­கையின் சனத்­தொகை எண்­ணிக்­கையில் 14 வீதத்­தி­னரே ஆங்­கில மொழியைப் பேசு­வ­தாக புள்­ளி­வி­ப­ரங்கள் குறிப்­பி­டு­கின்­றன. எனவே, இந்­நாட்டில் வாழும் மக்­களின் கருத்­துக்கள் அதி­க­ளவில் பகிர்ந்­து­கொள்­ளப்­ப­டு­வது சிங்­கள மொழி­யிலும், தமிழ் மொழி­யிலும் என்­பது புலப்­ப­டு­கி­றது.

ஒரு நாட்டில் ஒரு­வரின் அல்­லது ஒரு சமூ­கத்தின் கருத்து வெளிப்­பாட்டை எடுத்துச் செல்லும் ஓர­ல­காக ஊடகம் விளங்­கு­கி­றது. ஊடகம் என்­பது ஒரு சுதந்­திர நாட்டின் நான்கு தூண்­களில் ஒன்று. ஏனைய மூன்றும் சட்­ட­மன்றம், நிர்­வாகம், நீதி­மன்றம் என்­ப­ன­வாகும். ஒரு ஜன­நா­யக நாட்டில் வாழும் ஒரு சமூ­கத்தின் அல்­லது ஒரு இனத்தின் உரி­மைகள் அதி­காரத் தரப்­பினால் அல்­லது மற்­று­மொரு சமூ­கத்­தினால் அல்­லது அச்­ச­மூ­கத்தைச் சார்ந்த ஒரு குழு­வினால் மறுக்­கப்­ப­டு­கின்­ற­போது, மீறப்­ப­டு­கின்­ற­போது அல்­லது பறிக்­கப்­ப­டு­கின்­ற­போது அவை தொடர்பில் பாதிக்­கப்­படும் சமூகம் அல்­லது இனம் தமது நிலைப்­பாட்டை, தாம் பாதிக்­கப்­படும் விதத்­தினை, எதிர்­நோக்கும் விளை­வு­களை ஊட­கங்கள் வாயி­லாக வெளிப்­ப­டுத்­து­வது பொது­வான நிலை­யாகும்.

கடந்த காலங்­க­ளிலும் ஏப்ரல் 21 தாக்­கு­தல்­களின் பின்­னரும் இந்­நாட்டுப் பிர­ஜை­க­ளான முஸ்­லிம்கள் பல்­வேறு நெருக்­க­டி­களை எதிர்­கொள்­கின்ற போதிலும், முறை­யற்ற குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­ப­டு­கின்ற போதிலும். .இக்­குற்­றச்­சாட்­டுக்கள் முன­வைக்­கப்­ப­டு­கின்ற மொழியில் அக்­குற்­றச்­சாட்­டுக்­க­ளுக்­கான சாணக்­கி­ய­மான பதில்­களை ஆதா­ரங்­க­ளுடன் முன்­வைப்­ப­தற்கு சுதந்­தி­ர­மான ஊட­க­மொன்றை உரு­வாக்க முஸ்லிம் சமூகம் தவ­றி­விட்­டது. இத்­த­வறின் வேதனை தற்­போது அனு­ப­விக்­கப்­பட்டு வரு­கின்­றது. இந்­நாட்டின் சட்ட ஒழுங்கை மதிக்­காது சட்­டத்தைக் கையி­லெ­டுத்து செயற்­ப­டு­கின்­ற­வர்­க­ளினால் புரி­யப்­ப­டு­கின்ற அநி­யா­யங்­களை வெளிப்­ப­டுத்த ஆதா­ரங்கள் இருந்தும் அவற்றை வெளிப்­ப­டுத்த முடி­யாத ஊடக வரட்சி இன்று முஸ்­லிம்­களை வேத­னை­ய­டையச் செய்­துள்­ளதைக் காண முடி­கி­றது.

இந்­நாடு கால­னித்­துவ ஆட்­சியின் கீழி­ருந்த கால­கட்­டத்தில் வாழ்ந்த முஸ்­லிம்கள் எதிர்­நோக்­கிய சவால்­க­ளையும், நெருக்­க­டி­க­ளையும் விடவும் சுதந்­தி­ரத்தின் பிற்­பட்ட காலத்­திலும் தற்­போதும் எதிர்­நோக்­கு­கின்ற நெருக்­க­டி­களும் சவால்­களும் அதிகம் என்றே சமூக ஆய்­வா­ளர்கள் கூறு­கி­றார்கள்;.

1980களின் பிற்­பட்ட காலத்தில் உரு­வான யுத்த சூழ்­நி­லை­க­ளினால் நேர­டி­யாகப் பாதிக்­கப்­பட்ட வடக்கு, கிழக்கு தமிழ் சமூ­கமும் நேர­டி­யா­கவும் மறை­மு­க­மா­கவும் பாதிப்­புக்­குள்­ளான வடக்கு மற்றும் கிழக்கு வாழ் முஸ்லிம் சமூ­கமும் எதிர்­கொண்ட விளை­வு­களின் நிதர்­ச­னங்­களை இந்­நாட்டில் பெரும்­பான்­மை­யாக வாழ்­கின்ற  சிங்­கள மக்கள் முழு­மை­யாக அறிந்­தி­ருக்க சந்­தர்ப்பம் இருக்­க­வில்லை. அது­மாத்­தி­ர­மின்றி, 2012 முதல் இன்று வரை முஸ்­லிம்கள் தொடர்­பாக பௌத்த – சிங்­கள மக்கள் மத்­தியில் கடும்­போக்­கு­வா­தி­க­ளினால் பல­மாக  முன்­வைக்­கப்­பட்டு வரும் போலி  பரப்­பு­ரை­க­ளுக்கு  இடைத்­த­டங்­கலை ஏற்­ப­டுத்தி அவை போலிப்­ப­ரைப்­பு­ரைகள் என்ற பதில்­களை முன்­வைக்க முஸ்லிம் சமூகம் இன்னும்  தமக்­கான பல­முள்ள பல்­மொழி ஊடகத் கட்­ட­மைப்பைக் கட்­டி­யெ­ழுப்ப  முயற்­சிக்­க­வில்லை. இதனால் பல­மான போலிப் பரப்­பு­ரை­க­ளுக்­கான பதி­லு­ரைகள் பல­வீ­ன­மா­கவே காணப்­ப­டு­கின்­றன.

பெரும்­பான்மை சிங்­கள சமூ­கத்தின் பெரும்­பா­லான மக்கள், நாட்டு நடப்­புக்­க­ளையும் ஏனைய  கருத்­துக்­க­ளையும் விமர்­ச­னங்­க­ளையும் இதர விட­யங்­க­ளையும் அறிந்­து­கொள்­வது சிங்­கள மொழி ஊட­கங்கள் வாயி­லாக என்­பது அறிந்த விட­ய­மாகும். இந்­நி­லையில், ஒரு­சில ஊட­கங்கள் எந்­த­ளவு தூரத்­திற்கு ஊடக தர்­மத்தைப் பாது­காத்து செய்தித் தொகுப்­புக்­க­ளையும், நேர்­காணல் நிகழ்ச்­சி­க­ளையும் நடாத்தி வரு­கின்­றன என்­பது அமை­தி­யையும், சக­வாழ்­வையும், நேசித்து பயங்­க­ர­வா­தத்­திற்கும், தீவி­ர­வா­தத்­திற்கும் எதி­ரா­கவும், நீதி நியா­யத்­திற்­கா­கவும் குரல் கொடுத்து வரு­கின்­ற­வர்கள் அறிந்­த­தொன்­றாகும்.

பத்­தி­ரிகை, வானொலி, தொலக்­காட்­சி­களை பின்­தள்ளி சமூ­க­வ­லைத்­த­ளங்கள் போலிப் பரப்­பு­ரை­களை மக்கள் மத்­தியில் முன்­கொண்டு செல்­வதில் முதன்மை வகிக்­கி­றது. என்­பதை ஏப்ரல் 21 தாக்­கு­தல்­களின் பின்னர் முக்­கி­ய­மாக அவ­தா­னிக்கக் கூடி­ய­தா­க­வுள்­ளது. சட்­டத்தைக் கையி­லெ­டுப்­ப­தற்கு இந்தப் பரப்­பு­ரை­க­ளுக்கு முகநூல் முதன்மைக் கரு­வி­யா­ககச் செயற்­ப­டு­கி­றது, இந்­நி­லை­மைக்குக் காரணம், முஸ்லிம் மக்கள் பக்கம் காணப்­படும் நியா­யங்­க­ளையும், கருத்­துக்­க­ளையும், போலிப் பரப்­பு­ரை­க­ளுக்கும் எதி­ரான சாணக்­கி­ய­மான பதி­லு­ரை­களை சிங்­கள மொழியில் பல­மாக முன்­வைக்க முடி­யாத ஊடக வரட்சி முஸ்லிம் சமூ­கத்தில் தொடர்ந்து காணப்­ப­டு­வ­தாகும் என்­பதைச் சுட்­டிக்­காட்ட வேண்­டி­யுள்­ளது.

பொய்க்­குற்­றச்­சாட்­டுக்­களும் சாணக்­கி­ய­மான பதில்­களும்

இலங்­கையில் ஊட­கங்­களின் எண்­ணிக்­கைகள் அதி­க­ரித்­துக்­கொண்டு சென்­றாலும், சென்­ற­டைய வேண்­டிய செய்­தி­களும் தக­வல்­களும் காலத்தின் தேவைக்­கேற்­பவும், சமூ­கங்­களின் ஒற்­று­மைக்கும், நல்­லி­ணக்­கத்­துக்கும், முன்­னேற்­றத்­திற்கும், அபி­வி­ருத்­திக்கும் ஏற்­பவும், அவ­ர­வ­ருக்­கு­ரித்­தான விதத்தில் அவ­ரவர் நிலை­மை­களை வெளிப்­ப­டுத்தும் விதத்தில் சென்­ற­டை­கின்­ற­னவா? இடம்­பெ­று­கின்ற நிகழ்­வுகள் அதனால் பாதிக்­கப்­ப­டு­கின்ற சமூ­கங்­களின் நிலை­மைகள் திரி­பு­ப­டுத்­தப்­ப­டாமல் நிதர்­ச­ன­மாக வெளிப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­ற­னவா? என்ற கேள்­வி­க­ளுக்கு மத்­தியில் முஸ்­லிம்கள்  தொடர்பில் இத்­த­கைய ஊட­கங்­க­ளினால் பிர­சு­ரிக்­கப்­படும் செய்­தி­களும், கட்­டு­ரை­களும், விமர்­ச­னங்­களும் மரத்தால் விழுந்­த­வனை மாடு மிதித்­த நிலை­மைக்குத் தள்­ளி­யி­ருப்­பதை உணர முடி­கி­றது.

அத்­துடன், ஒரு சமூ­கத்தை அல்­லது சமூ­கங்­களின் ஒற்­று­மையைப் பாதிக்­கா­த­வி­தத்­திலும் சம்­ப­வங்­களைத் திரிபு­ப­டுத்­தாத விதத்­திலும் இன­மு­று­கலை தோற்­று­விக்­காத வகை­யிலும் ஊடக தர்­மத்­தோடு ஊடகச் செய்­திகள் வெளி­வ­ரு­வ­தற்கு முக்­கி­யத்­துவம் வழங்­கப்­ப­டு­கின்­றதா என்றால் அதற்­கான பொது­வான பதில் இல்லை என்­ப­தே­யாகும்.

யுத்­த­மு­டிவின் பின்­ன­ரான இந்­நாட்டின் அமைதிச் சூழ்­நி­லையில் அமை­தியைக் குலைப்­ப­தற்­காக பெரும்­பான்மை சமூ­கத்தின் மத்­தி­யி­லி­ருந்து அச்­ச­மூ­கத்தைப் பாது­காப்­ப­தாகக் கூறிக்­கொண்டு, அச்­ச­மூ­கத்தை  நல்­வ­ழிப்­ப­டுத்­து­கின்ற பணியைப் புரி­ய­வேண்­டி­ய­வர்கள் மத வன்­மு­றை­யா­ளர்­க­ளாக மாறி இந்­நாட்டில் வாழ்­கின்ற சிறு­பான்மை சமூ­க­மான முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக முஸ்­லிம்­களின் வாழ்­விடம், சமய, சமூக பண்­பாட்டு, கலை, கலா­சார, உணவு, உடை, திரு­நாட்கள் என சகல நட­வ­டிக்­கை­க­ளிலும் மூக்கை நுழைத்து, அவற்­றிற்கு எதி­ராக செயற்­பட்­டுக்­கொண்­டி­ருப்­பதை தமிழ் பேசும் சமூ­கத்தின் மத்­தி­யி­லி­ருந்து வெளி­வரும் அச்சு ஊட­கங்கள் அவ்­வப்­போது வெளிப்­ப­டுத்திக் கொண்­டி­ருக்­கின்­றன.

ஆனால், எச்­ச­மூ­கத்தில் உள்­ள­வர்­க­ளி­டையே  முஸ்­லிம்கள் தொடர்­பான யதார்த்­தமான் செய்­திகள் சென்­ற­டைய வேண்டும் என்ற இலக்கு உள்­ளதோ அந்த இலக்கை அடை­வ­தற்­கான முயற்­சிகள் இது­வரை முஸ்லிம் சமூ­கத்தால் முழு­மை­யாக முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை. இந்­நி­லையில், பெரும்­பான்மை சமூ­கத்­தி­லுள்ள பெரும்­பா­லான மக்­களால் அங்­கீ­க­ரிக்­கப்­ப­டாத கடும்­போக்கு எண்­ணங்­களைக் கொண்ட அமைப்­புக்­க­ளி­னதும், அவ்­வ­மைப்­புக்­களின் பிர­தி­நி­தி­க­ளி­னதும் நட­வ­டிக்­கைகள் குறித்து  முஸ்லிம் சமூ­கத்­தி­லுள்­ள­வர்­க­ளினால் முன்­வைக்­கப்­ப­டு­கின்ற கருத்­துக்­களும், நியா­யங்­களும் வேண்டி நிற்கும் தீர்­வு­களும் சிங்­கள மொழி­மூல ஊட­கத்­தி­னூ­டாக சிங்­கள மக்­க­ளி­டையே சென்­ற­டை­வ­தற்­கான வழிகள் குறிப்­பிட்டுச் சொல்­லத்­தக்க வகையில் இன்னும் ஏற்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை.

ஆனால், முஸ்­லிம்கள் தொடர்­பாக முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றன போலிப் பரப்­பு­ரை­க­ளுக்கு பல­மான முறையில் சாணக்­கி­ய­மாக பதி­லு­ரைக்க வேண்­டிய பொறுப்பு சிங்­கள மொழியில் பரிச்­ச­ய­முள்­ள­வர்­களின் தார்­மீகப் பொறுப்­பா­க­வுள்­ளது. அந்தப் பொறுப்பை தற்­போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் உட்­பட  முஸ்லிம் சமூ­கத்­தி­லுள்ள ஒரு­சில விரல்­விட்டு எண்ணக் கூடி­ய­வர்கள்  சாணக்­கி­ய­மாக முன்­னெ­டுத்து வரு­கி­றார்கள். ஆனால், நாவ­டக்­க­மற்ற சிலர் தங்­க­ளது பக்­கு­வப்­ப­டாத வார்த்தை ஜாலங்­க­ளினால் நாளுக்கு நாள் முஸ்­லிம்கள் தொடர்­பான குற்­றச்­சாட்­டுக்­களை அதி­க­ரிக்கச் செய்­கின்­றன. மூளைக்கும் முண்­ணா­னுக்கும் தொடர்­பில்­லாமல் ஊட­கங்­க­ளுக்கு முன்னால் நின்றும், பொதுத் தளங்­க­ளிலும் முன்­வைக்­கப்­ப­டு­கின்ற கருத்­துக்கள், அறிக்­கைகள் ஒட்­டு­மொத்த  முஸ்­லிம்­க­ளையும் மென்­மேலும் நெருக்­க­டிக்குள் தள்ளிக் கொண்­டி­ருப்­பதை காண­மு­டி­கி­றது. அத்­துடன், போலிப்­ப­ரப்­பு­ரை­க­ளுக்கு சாணக்கியமாகப் பதிலளித்து வருகின்றவர்களையும் பலமாகப் பதிலளிக்க செய்ய முடியாது கேள்விக் கணைகளுக்குள்ளாக்கிக் கொண்டிருக்கின்றன.

“ஒரு வார்த்தை தனது வாய்க்குள் இருக்கும் வரைக்கும்தான் நமக்குச் சொந்தம் அது வெளியில் வந்தால் எல்லோருக்கும் சொந்தம்” என்ற தத்துவத்தை மறந்து கூறப்படுகின்ற கருத்துக்களும் பதில்களும் மென்மேலும் குற்றச்சாட்டுக்களை அடுக்கிக் கொண்டு செல்வதற்கு பாதை வெட்டியிருக்கிறது என்பதை “தெரிவுக்குழுவிலிருந்து ஹக்கீம் விலக வேணடும்” என்ற அழுத்தத்தை பொதுஜன பெரமுன வலியுறுத்தியிருப்பது நல்ல உதாரணமாகும்.

கடும்போக்கு சிந்தனைகளைக் கொண்ட இனவாதிகளினால் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படுகின்ற எதிர்ப்பு குற்றச்சாட்டுக்கள் மற்றும் போலிப்பிரசார நடவடிக்கைகளுக்கு எதிராக முஸ்லிம் சமூகத்திலிருந்து உரிய பதில்கள் சாணக்கியமாக அவர்களது மொழியில் அளிக்கப்படுவது அவசியமாகும். ஏப்ரல் 21இன் பின்னர் வரலாறு காணாத நெருக்கடிகளையும் குற்றச்சாட்டுக்களையும் முஸ்லிம்கள் சுமந்துகொண்டிருக்கிறார்கள் என்பது உலகறிந்த விடயம்.

இச்சூழலில், பதவிகளுக்கு முன்னுரிமை வழங்காது முஸ்லிம்களின் வாழ்வையும், வாழ்வுரிமையையும் பாதுகாப்பற்கு முன்னுரிமை வழங்கி அதற்காக எத்தகைய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமோ அத்தகைய நடவடிக்கைகளை எடுக்க ஒன்றுபட்டு உழைப்பது எவ்வளவுக்கு எவ்வளவு தார்மீகப் பொறுப்பாகவுள்ளதோ அந்தளவு தார்மீகப் பொறுப்பு, முஸ்லிம்கள் தொடர்பில் முன்வைக்கப்பட்டு வருகின்ற குற்றச்சாட்டுக்கள், போலிப் பிரசார நடவடிக்கைகள் என்பவற்றுக்கு புத்திசாதுர்யமாகவும்,  சாணக்கியமாகவும் பதிலளிக்க வேண்டியதும் தார்மீகப் பொறுப்பாகவும், இந்தப்பொறுப்பு நிறைவேற்றப்படுகின்றபோதுதான் ஒட்டுமொத்த முஸ்லிம்களும் இந்நாட்டின் எதிரிகள் என பெரும்பான்மை மக்களை நம்ப வைக்கும் முயற்சிகள் தோற்றகடிக்கப்படும். அதுமாத்திரமின்றி, நடுநிலைச் சிந்தனையாளர்கள் மத்தியிலாவது முஸ்லிம்கள் தொடர்பிலான நேர்மறை சிந்தனையை உருவாக்க முடியும் என்பது நிதர்சனமாகும்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.