புவக்பிட்டிய அபாயா சர்ச்சை ஆசிரியைகளுக்கு நிரந்தர இடமாற்றம்

0 878

அவி­சா­வ­ளை–­பு­வக்­பிட்­டிய தமிழ் மகா வித்­தி­யா­ல­யத்தில் கட­மை­யாற்­றிய முஸ்லிம் ஆசி­ரி­யைகள் அபாயா அணிந்து வரு­வ­தற்கு எதிர்ப்புத் தெரி­வித்து தடை­வி­திக்­கப்­பட்­ட­த­னை­ய­டுத்து தற்­கா­லிக இட­மாற்றம் பெற்­றி­ருந்த  ஆசி­ரி­யைகள் மீண்டும் அப்­பா­ட­சா­லைக்குச் செல்­வ­தற்கு பழைய மாண­வர்­க­ளாலும், பெற்­றோர்­க­ளாலும் தொடர்ந்தும் எதிர்ப்புத் தெரி­விக்­கப்­பட்­டது.

கடந்த 17 ஆம் திகதி புவக்­பிட்­டிய தமிழ் மகா வித்­தி­யா­ல­யத்­திற்கு கட­மைக்குச் செல்­ல­வி­ருந்த குறிப்­பிட்ட ஆசி­ரி­யைகள் தொடர்ந்து எதிர்ப்பு வெளி­யி­டப்­பட்­ட­தை­ய­டுத்து கட­மைக்குச் செல்­லாது மேல் மாகாண ஆளுநர் எம்.ஜே.எம்.முஸம்­மிலைச் சந்­தித்து முறைப்­பாடு செய்­தனர்.

புவக்­பிட்­டிய தமிழ் மகா வித்­தி­யா­லய முஸ்லிம் ஆசி­ரி­யை­க­ளுக்குத் தொடர்ந்து பாது­காப்பு வழங்­க­மு­டி­யா­தெ­னவும், ஒரு நாள் மாத்­தி­ரமே பாது­காப்புத் தரலாம் என அவி­சா­வளைப் பொலிஸார் தெரி­வித்­தனர். மேல் மாகாண கல்விப் பணிப்­பாளர் பி.ஸ்ரீலால் நோனிஸை ஆளுநர் தொடர்பு கொண்­ட­போது அவரும் பாது­காப்­புக்கு உத்­த­ர­வா­த­ம­ளிக்க முடி­யா­தெனத் தெரி­வித்தார்.

இந்­நி­லையில் புவக்­பிட்­டிய தமிழ் மகா வித்­தி­யா­ல­யத்தில் கட­மை­யாற்­றிய 15 முஸ்லிம் ஆசி­ரி­யை­க­ளுக்கும் வேறு பாட­சா­லை­க­ளுக்கு நிரந்­தர இட­மாற்றம் வழங்­கு­மாறு மேல்­மா­காண ஆளுநர் முஸம்மில் மேல் மாகாண கல்­விப்­ப­ணிப்­பாளர் பி.ஸ்ரீலால் நோனி­ஸிடம் வேண்­டுகோள் விடுத்தார்.

இதற்­கி­ணங்க 15 முஸ்லிம் ஆசி­ரி­யை­களும் மேல் மாகா­ணத்தின் முஸ்லிம் பாட­சா­லை­க­ளுக்கு நேற்று முன்­தினம் 18 ஆம் திகதி முதல் இட­மாற்றம் செய்­யப்­பட்­டுள்­ளனர்.

புவக்­பிட்­டிய தமிழ் மகா வித்­தி­யா­ல­யத்தில் கட­மை­யாற்­றிய குறிப்­பிட்ட ஆசி­ரி­யைகள் அபாயா அணிந்து கட­மைக்கு வரு­வ­தற்கு எதிர்ப்புத் தெரி­வித்து தடை­வி­திக்­கப்­பட்­ட­மையால் முன்னாள் மேல்­மா­காண ஆளுநர் அசாத் சாலி­யினால் ஆசி­ரி­யை­க­ளுக்கு தற்­கா­லிக இட­மாற்றம் வழங்­கப்­பட்­டி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

இது தொடர்பில் சம்­பந்­தப்­பட்ட ஆசி­ரி­யை­களில் ஒரு­வரை ‘விடி­வெள்ளி’ தொடர்பு கொண்டு வின­வி­ய­போது, ‘தற்­கா­லி­க­மாக இட­மாற்றம் பெற்­றி­ருந்த நாங்கள் மீண்டும் புவக்­பிட்­டிய தமிழ் மகா­வித்­தி­யா­ல­யத்­துக்கு கட­மைக்குச் செல்ல வேண்­டி­யி­ருந்­தது. தொடர்ந்தும் அபா­யா­வுக்கு எதிர்ப்புத் தெரி­வித்து பாட­சாலை நுழை­வா­யிலில் ஒரு குழு­வினர் காத்திருப்பதாக எமக்குத் தகவல் கிடைத்ததால் கடந்த 17 ஆம் திகதி நாங்கள் கடமைக்குச் செல்லவில்லை. மேல்மாகாண ஆளுநரிடம் முறையிட்டதையடுத்து தற்போது எங்களுக்கு கொழும்பு மாவட்ட முஸ்லிம் பாடசாலைகளுக்கு நிரந்தர இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது’ என்றார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.