பொய்­யான செய்­தி­களைப் பரப்­பினால் 5 வருடம் சிறை; 10 இலட்சம் அப­ராதம்

புதிய சட்ட யோச­னைக்கு அமைச்­ச­ரவை அங்­கீ­காரம்

0 626

நல்­லி­ணக்கம் மற்றும் தேசிய பாது­காப்பு என்­ப­வற்­றுக்கு இடை­யூறு ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய பொய்­யான செய்­தி­களைப் பரப்­பு­வோ­ருக்கு எதி­ரான தண்­ட­னைகள் கடு­மை­யாக்­கப்­பட்­டுள்­ளன. அதன்­படி இத்­த­கைய குற்­றச்­செ­யல்­க­ளுக்கு குறைந்­த­பட்சம் 10 இலட்சம் ரூபா அப­ராதம் அல்­லது 5 வரு­டங்­க­ளுக்குக் குறை­யாத சிறைத்­தண்­டனை அல்­லது இவ்­வி­ரண்­டையும் சேர்த்து அனு­ப­விக்கும் வித­மாக குற்­ற­வியல் தண்­டனைச் சட்­டக்­கோ­வையில் அர­சாங்­கத்­தினால் திருத்­தங்கள் மேற்­கொள்­ளப்­படவுள்ளன.

இனங்­க­ளுக்கு இடை­யி­லான நல்­லி­ணக்கம் மற்றும் தேசிய பாது­காப்பு என்­ப­வற்­றுக்கு இடை­யூறு ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய பொய்­யான நல்­லி­ணக்கம் மற்றும் தேசிய பாது­காப்பு என்­ப­வற்­றுக்கு இடை­யூறு ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய பொய்­யான செய்­தி­களைப் பரப்­பு­வோ­ருக்கு எதி­ரான தண்­ட­னைகள் கடு­மை­யாக்­கப்­பட்­டுள்­ளன. அதன்­படி இத்­த­கைய குற்­றச்­செ­யல்­க­ளுக்கு குறைந்­த­பட்சம் 10 இலட்சம் ரூபா அப­ராதம் அல்­லது 5 வரு­டங்­க­ளுக்குக் குறை­யாத சிறைத்­தண்­டனை அல்­லது இவ்­வி­ரண்­டையும் சேர்த்து அனு­ப­விக்கும் வித­மாக குற்­ற­வியல் தண்­டனைச் சட்­டக்­கோ­வையில் அர­சாங்­கத்­தினால் திருத்­தங்கள் மேற்­கொள்­ளப்­படவுள்ளன.

இனங்­க­ளுக்கு இடை­யி­லான நல்­லி­ணக்கம் மற்றும் தேசிய பாது­காப்பு என்­ப­வற்­றுக்கு இடை­யூறு ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய பொய்­யான செய்­தி­களைப் பரப்­பு­வ­தற்கு எதி­ராக சட்­ட­ந­ட­வ­டிக்கை எடுக்­கத்­தக்க வகையில் குற்­ற­வியல் தண்­டனைச் சட்­டக்­கோ­வையில் திருத்­த­மொன்றைக் கொண்­டு­வ­ரு­மாறு நீதி மற்றும் சிறைச்­சா­லைகள் மறு­சீ­ர­மைப்பு அமைச்­சிடம் தேசிய பாது­காப்பு தொடர்­பான குழு வேண்­டுகோள் விடுத்­தி­ருந்­தது.

அதற்­க­மைய நீதி மற்றும் சிறைச்­சா­லைகள் மறு­சீ­ர­மைப்பு அமைச்சின் பதி­ல­மைச்­ச­ராகத் தொழிற்­படும் பொது­நிர்­வாக, அனர்த்த முகா­மைத்­துவ அமைச்சர் ரஞ்சித் மத்­தும பண்­டார குற்­ற­வியல் தண்­டனைச் சட்­டக்­கோ­வையில் திருத்­த­மொன்­றுக்­கான முன்­மொ­ழிவைச் சமர்ப்­பித்­தி­ருந்த நிலையில், அதற்கு அர­சாங்கம் அங்­கீ­காரம் வழங்­கி­யுள்­ளது.

எனவே, நல்­லி­ணக்கம், தேசிய பாது­காப்பு என்­ப­வற்­றுக்குக் குந்­தகம் விளை­விக்கும் வகையில் பொய்­யான செய்­தி­களைப் பரப்பும் நபருக்கு குறைந்தது 10 இலட்சம் ரூபா அபராதம் அல்லது 5 வருடங்களுக்குக் குறையாத சிறைத்தண்டணை அல்லது அபரா தம் மற்றும் சிறைத் தண்டனை இரண்டையும் அனுபவிக்க நேரும் வகையில் தண்டனை வழங்கப்படும்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.