ஜனாதிபதி, பாதுகாப்பு செயலாளர்கள் பொலிஸ்மா அதிபரிடம் நேரில் முறையிட்டேன்

குற்றவாளிகளை கண்டுபிடிக்க எவரும் முன்வரவில்லை ; அசாத் சாலி சாட்சியம்

0 601

முன்­னைய ஆட்­சி­யா­ளர்கள் காலத்தில் காத்­தான்­கு­டியில் ஐ.எஸ். அமைப்பு பல­மாக செயற்­ப­டு­கின்­ற­தென நான் பாது­காப்பு செய­லாளர் கோத்­தா­பய ராஜபக் ஷவிற்கும் ஏனைய அதி­கா­ரி­க­ளுக்கும் தெரி­வித்தேன். ஆனால் பாது­காப்பு செய­லாளர் கோத்­தா­பய ராஜபக் ஷவிற்கும் தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்­புக்­கு­மி­டையில் நெருங்­கிய தொடர்பு இருந்­தது. நான் தௌஹீத் ஜமாஅத் குறித்து பேசிய கார­ணத்­தி­னால்தான் கைது செய்­யப்­பட்டேன். அது­மட்­டு­மல்ல, இவர்கள் குறித்து வாய் திறக்க வேண்டாம் என எனக்கு அறி­வு­றுத்­தினர் என்று முன்னாள் ஆளுநர் அசாத்சாலி பாரா­ளு­மன்ற தெரி­வுக்­குழு முன் சாட்­சி­ய­ம­ளித்தார்.

21 ஆம் திகதி ஈஸ்டர் தாக்­குதல் குறித்து விசா­ரணை நடத்தி பாரா­ளு­மன்­றத்­திற்கு சாட்­சி­ய­ம­ளிக்க நிய­மிக்­கப்­பட்ட பாரா­ளு­மன்ற விசேட தெரி­வுக்­குழு முன்­னி­லையில் சாட்­சி­ய­ம­ளிக்க அழைக்­கப்­பட்ட மேல் மாகாண முன்னாள் ஆளுநர் மொஹம்மத் அசாத்சாலி நேற்று இவ்­வாறு வாக்­கு­மூலம் வழங்­கினார்.
அவ­ரது சாட்­சியம்: நான் அசாத்சாலி, இன்று நாட்டில் ஆட்சி ஒன்று இருக்­கி­றதா இல்­லையா என தெரிந்­து­கொள்ள முடி­யாத கால­கட்­டத்தில் என்னை சாட்­சி­யத்­துக்கு அழைத்­துள்­ளீர்ர்கள். எது எவ்­வாறு இருந்­தாலும் நான் எனது நன்­றி­களை தெரி­வித்­து­கொள்ள விரும்­பு­கின்றேன். நான் ஒரு அடிப்­ப­டை­வாதி என்ற ரீதியில் எனது பதவி பறிக்­கப்­பட்­டுள்­ளது. ஆனால் பல தட­வைகள் நான் இது குறித்த உண்­மை­களை வெளிப்­ப­டுத்­தி­யுள்ளேன். கடந்த 2014ஆம் ஆண்­டி­லி­ருந்து இது­கு­றித்து பல தட­வைகள் கருத்­துக்­களை முன்­வைத்தேன்.

சஹ்ரான் காத்­தான்­கு­டியை கைக்குள் வைத்­தி­ருந்தார். அவ­ரது நக­ர­மா­கவே அது இருந்­தது. பொலி­ஸார்­கூட செல்ல முடி­யாத சூழ்­நி­லையே காத்­தான்­கு­டியில் காணப்­பட்­டது. அது­மட்­டு­மல்ல, கடந்த பொதுத் தேர்­தலில் ஹிஸ்­புல்­லா­வுக்கும் சஹ்­ரா­னுக்கும் இடையில் தொடர்­புகள் காணப்­பட்­டன. அவர் தேர்­த­லுக்கு உத­வினார். இதற்குக் கார­ணமும் காத்­தான்­கு­டியில் சஹ்­ரானின் பலமே . சில உடன்­ப­டிக்­கை­களை செய்­து­கொண்டு தேர்­த­லுக்­காக சஹ்ரான் ஹிஸ்­புல்­லாஹ்­விற்கு உத­வினார்.

மேலும் கிழக்­கி­லுள்ள பல்­க­லைக்­க­ழகம் ஷரீஆ பல்­க­லைக்­க­ழகம் அல்ல. ஷரீ­ஆவை தவ­றாக விளங்­கிக்­கொள்ள வேண்டாம். ஷரீஆ என்­பது எமது வாழ்க்கை. இது குறித்து ஏன் நீங்கள் அனை­வரும் தவ­றான கருத்­தினை கொண்­டு­செல்ல முயற்­சித்து வரு­கின்­றீர்கள். கிழக்கு பல்­க­லைக்­க­ழ­கத்தில் ஷரீஆ பிரிவு உள்­ளது. அது தவ­றில்லை. அதேபோல் ஷரீஆ எமக்கு கண்­டிப்­பாக வேண்டும். இது உங்­க­ளுக்கு அவ­சியம் இல்லை ஆனால் எமக்கு ஷரீஆ கண்­டிப்­பாக வேண்டும். எமது வாழ்க்­கை­யுடன் ஷரீஆ கலந்­துள்­ளது. அதனை விடு­வித்து வாழ முடி­யாது. ஏன் நீங்கள் 21ஆம் திகதி தாகு­த­லுக்கும் முஸ்லிம் கலா­சா­ரத்­துக்கும் இடையில் தொடர்­பு­களை ஏற்­ப­டுத்த முயற்­சிக்­கின்­றீர்கள் என புரி­ய­வில்லை. 21ஆம் திகதி தாக்­கு­த­லுக்கும் முஸ்லிம் திரு­ம­ணத்­திற்கும் இடையில் என்ன தொடர்­புகள் உள்­ளன? இலங்­கையில் நீண்ட கால­மாக முஸ்லிம் சட்டம் உள்­ளது. அவை இன்று நேற்று உரு­வாக்­கப்­பட்ட ஒன்­றல்ல.

அதனை இப்­போது ஏன் நீக்க வேண்டும். முஸ்லிம் சட்டம் எமக்கு அவ­சியம்.
மேலும் அப்துல் ராசிக் என்ற நபர் இன்­னமும் வெளியில் சுதந்­தி­ர­மாக உள்ளார். இவர் பொலி­ஸாரின் பாது­காப்­பில்தான் உள்ளார். கொழும்­பில்தான் வாழ்­கின்றார். இவர் ஐ.எஸ். அமைப்பின் தலைவர் பக்­தா­தியின் கருத்­துக்­களை நியா­யப்­ப­டுத்தும் வகையில் செயற்­பட்டு வரு­கின்றார். இவர் நேர­டி­யாக பயங்­க­ர­வாத தாக்­கு­தலில் ஈடு­ப­டா­விட்­டாலும் கூட பயங்­க­ர­வாதி ஒரு­வரை ஆத­ரிப்­பதும் பயங்­க­ர­வா­தம்தான். இவர் வெளியில் இருக்கும் வரையில் இலங்­கையின் தேசிய பாது­காப்­புக்கு அச்­சு­றுத்தல் உள்­ளது என்றே நான் கரு­து­கின்றேன். உண்­மையில் இவர்கள் குறித்து நான் பல தட­வை­கள் அரச தரப்­பி­ன­ருக்கு அறி­வு­றுத்­தி­யுள்ளேன். தாக்­குதல் நடந்த ஒரு வாரத்­திற்கு முன்­னரும் நான் ஏனைய எமது சமூ­கத்­தினர், சிவில் அமைப்­பி­னரை அழைத்­துக்­கொண்டு பாது­காப்பு செய­லாளர் மற்றும் பாது­காப்பு அதி­கா­ரி­களை சந்­தித்து உரிய கார­ணி­களை தெரி­வித்தேன். எவரும் கருத்தில் கொள்­ள­வில்லை.

பொலிஸ்மா அதி­ப­ருக்கும் ஜனா­தி­ப­திக்கும் கூட நான் கிழக்கில் ஒரு நிகழ்வில் வைத்து தெரி­வித்தேன். ஆனால் குற்­ற­வா­ளிகள் என எம்மை கரு­தி­னரே தவிர உண்­மை­யான குற்­ற­வா­ளி­களை கண்­ட­றிய எந்த முயற்­சியும் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை. இந்த சம்­பவம் கார­ண­மாக முழு முஸ்­லிம்­களும் இன்று விளை­வு­களை எதிர்­கொள்­ள­வேண்­டி­யுள்­ளனர். எனினும் இந்த சம்­பவம் இடம்­பெற கடந்த 1995ஆம் ஆண்டு தொடக்கம் இன்­று­வரை உள்ள அர­சாங்­கங்கள் பொறுப்­புக்­கூற வேண்டும். இந்த அடிப்­ப­டை­வாதம் பற்றி கடந்த 2000ஆம் ஆண்­டி­லி­ருந்து தெரி­வித்­துள்ளேன். அப்­போ­தி­லி­ருந்து ஐந்து பாது­காப்பு செய­லா­ளர்கள் இருந்­தனர்.

அவர்­க­ளுக்கு நான் உரிய கார­ணி­களை வழங்­கினேன். எவரும் கருத்தில் கொள்­ள­வில்லை. பொலிஸில் பல முறைப்­பா­டு­களை நாம் செய்தோம். முன்­னைய ஆட்­சி­யா­ளர்கள் காலத்தில் காத்­தான்­கு­டியில் ஐ.எஸ். அமைப்பு பல­மாக செயற்­ப­டு­கின்­றது என நான் பாது­காப்பு செய­லாளர் கோத்­தா­பய ராஜபக் ஷவிற்கும் ஏனைய அதி­கா­ரி­க­ளுக்கும் தெரி­வித்தேன். ஆனால் பாது­காப்பு செய­லாளர் கோத்­தா­பய ராஜபக் ஷவிற்கும் தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்­பிற்­கு­மி­டையில் நெருங்­கிய தொடர்­பி­ருந்­தது. நான் தவ்ஹீத் ஜமாஅத் குறித்து பேசிய கார­ணத்­தினால் தான் கைது செய்­யப்­பட்டேன்.

அது­மட்­டு­மல்ல, இவர்கள் குறித்து வாய் திறக்க வேண்டாம் என எனக்கு அறி­வு­றுத்­தினர். 500 மில்­லியன் ரூபா பண­மாகத் தரு­வ­தாகப் பேரம்­பே­சினர். தேர்­தலில் கள­மி­றங்­கு­வ­தாக இருந்­தாலும் இதில் 200 மில்­லி­யனை செல­வ­ழித்­துக்­கொள்­ளவும் ஆலோ­சனை வழங்­கினர்.

கடந்த காலங்­களில் காத்­தான்­கு­டியில் பல அசம்பாவிதங்கள் இடம்பெற்றன. அவை அனைத்திற்கும் சஹ்ரான் காரணமாக இருந்தார், இதுகுறித்து எமது முஸ்லிம் மக்கள் பல முறைப்பாடுகளை செய்தும் பொலிசார் சஹ்ரான் பக்கமே நின்றனர். சஹ்ரானை கைதுசெய்ய மக்கள் கிழக்கில் பாரிய ஆர்ப்பாட்டம் செய்தனர். இவை எல்லாம் இரகசியமான விடயங்கள் அல்ல. அனைவருக்கும் இது நன்றாகவே தெரியும். அதேபோல் தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பை தடைசெய்ய வேண்டுமெனக் கூறினோம். ஆனால் தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பும் பொலிசாரும் ஒன்றாகவே செயற்பட்டனர். இதுதான் உண்மை என்றார்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.