அரசாங்கத்தை பாதுகாக்க ஒருபோதும் தயாரில்லை

ரிஷாதை மட்டும் தண்டிக்க முடியாது என்கிறது ம.வி.மு.

0 797

அமைச்சர் ரிஷாத் பதி­யு­தீ­னுக்கு மாத்­திரம் தண்­டனை பெற்றுக் கொடுத்­து­விட்டு அர­சாங்­கத்தை பாது­காக்க வேண்­டிய தேவை மக்கள் விடு­தலை முன்­ன­ணிக்கு கிடை­யாது. குண்டுத் தாக்­கு­தல்­களில் பலி­யான நூற்­றுக்­க­ணக்­கான உயிர்­க­ளுக்கு பொறுப்­பு­கூற வேண்­டி­யது ரிஷாத் மாத்­தி­ர­மல்ல. முழு அர­சாங்­கமும் இதற்கு பொறுப்பு கூற வேண்டும் என்று ஜே.வி.பியின் பொதுச் செய­லாளர் டில்வின் சில்வா தெரி­வித்தார்.

வெலி­மடை பிர­தே­சத்தில் நேற்று புதன்­கி­ழமை இடம்­பெற்ற மக்கள் சந்­திப்பில் கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

அங்கு அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில் கூறி­ய­தா­வது,

நாட்டில் மேற்­கொள்­ளப்­பட்ட தொடர் குண்டுத் தாக்­கு­தல்கள் தொடர்பில் விசா­ரிப்­ப­தற்கு ஆணைக்­குழு நிய­மிக்­கப்­பட்­டது. எனினும் தாக்­கு­தலை மேற்­கொண்ட முத­லா­வது சந்­தே­க­நபர் அதா­வது தற்­கொலை குண்­டு­தாரி இறந்­து­விட்டார்.

இரண்­டா­வது சந்­தே­க­நபர் இந்த அர­சாங்­க­மாகும். எனவே அர­சாங்­கத்­திற்கு தான் தண்­டனை வழங்­கப்­பட வேண்டும். ஆனால் அர­சாங்கம் தனக்குத் தானே தண்­டனை வழங்கிக் கொள்­ளாது. எனவே புதிய அர­சாங்கம் ஒன்று வெகு­வி­ரைவில் அமைக்­கப்­பட வேண்டும்.

நடை­மு­றை­யி­லுள்ள அர­சாங்­கத்தின் மீது மக்­க­ளுக்கு ஆகக் குறைந்­த­ளவு நம்­பிக்கை கூட கிடை­யாது. என­வேதான் பாரா­ளு­மன்­றத்தில் அர­சாங்­கத்­திற்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையை சமர்ப்­பித்­துள்ளோம். எனினும் அதில் தற்­போது சிறு பிரச்­சினை உள்­ளது.

தினமும் அர­சாங்­கத்தை விமர்­சித்துக் கொண்­டி­ருக்கும் மஹிந்த தரப்­பி­ன­ருக்கு ஜே.வி.பி. நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையை சமர்ப்­பித்­ததில் விருப்­ப­மில்லை. இதற்­கான காரணம் என்ன என்று யாருக்கும் தெளி­வில்லை. இவ்­வா­றி­ருக்க அண்­மையில் மஹிந்த தரப்­பினர் சிலர் கையெ­ழுத்­திட்டு அமைச்சர் ரிஷாத் பதி­யு­தீ­னுக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணையை சமர்­ப்பித்­துள்­ளனர். அதில் எமக்கு எந்தப் பிரச்­சி­னையும் கிடை­யாது.

ஆனால் குண்டுத் தாக்­கு­தல்­க­ளுக்கு இலக்­கான நூற்­றுக்­க­ணக்­கான உயிர்­க­ளுக்கு பொறுப்­புக்­கூற வேண்­டி­யது ரிஷாத் பதியுதீன் மாத்திரமல்ல. அவரும் பொறுப்புக்கூற வேண்டிய அதே வேளை அரசாங்கமும் பொறுப்புக்கூற வேண்டியது அவசியம். எனவே ரிஷாதை மாத்திரம் தண்டித்து அரசாங்கத்தை பாதுகாக்க ஜே.வி.பி. தயாராக இல்லை.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.