ரிஷாட் ஹிஸ்புல்லாவுக்கு எதிராக சி.ஐ.டி விசாரணை

பொலிஸ் தலைமையகத்துக்கு கிடைத்த இரு முறைப்பாடுகளை மையப்படுத்தி பதில் பொலிஸ்மா அதிபர் நடவடிக்கை

0 609

கைத்தொழில், வாணிப அலுவல்கள், நீண்டகாலமாக இடம்பெயர்ந்த நபர்களின் மீள் குடியேற்றம் மற்றும் கூட்டுறவுத்துறை அபிவிருத்தி அமைச்சர் ரிஷாட் பதியுதீன், கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஆகிய இருவருக்கும் எதிராக சி.ஐ.டி. விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. பொலிஸ் தலைமையகத்துக்கு கிடைக்கப் பெற்ற இரு முறைப்பாடுகளை மையப்படுத்தி அவற்றை பதில் பொலிஸ்மா அதிபர் சந்­தன விக்­ர­ம­ரத்ன சி.ஐ.டி. விசா­ர­ணைக்­காக ஒப்­ப­டைத்­துள்­ள­தா­கவும் அதன்­படி இந்த விசா­ர­ணைகள் ஆரம்­பிக்கப் பட்­டுள்­ள­தா­கவும் பொலிஸ் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்­சகர் ருவன் குண­சே­கர கூறினார். 

இரா­வணா பலய அமைப்பின் பொதுச் செயலர் இத்­தே­கந்த சத்­தா­திஸ்ஸ தேரரும், பெளத்த தகவல் மத்­திய நிலை­யத்தின் நிறை­வேற்றுப் பணிப்­பாளர் அங்­கு­லு­கல்லே ஸ்ரீ ஜினா­னந்த தேரர் ஆகியோர் முன்­வைத்த முறைப்­பா­டு­களே இவ்­வாறு விசா­ர­ணைக்­காக சி.ஐ.டி.யிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளன.
சில நாட்­க­ளுக்கு முன்னர் குறித்த இரு தேரர்­களும், 4/21 தொடர் தற்­கொலைத் தாக்­கு­தல்கள் தொடர்பில் அமைச்சர் ரிஷாட் பதி­யுதீன் மற்றும் ஆளுநர் ஹிஸ்­புல்லாஹ் ஆகி­யோரை விசா­ரிக்க கோரி பொலிஸ் தலை­மை­ய­கத்­திடம் முறைப்­பாடு செய்­தி­ருந்­தனர். இரா­வணா பலய அமைப்பின் பொதுச் செயலர் இத்­தே­கந்த சத்­தா­திஸ்ஸ தேரர் அமைச்சர் ரிஷாட் பதி­யுதீன் மற்றும் ஆளுநர் ஹிஸ்­புல்லாஹ் ஆகிய இரு­வ­ருக்கும் எதி­ரா­கவும், பெளத்த தகவல் மைத்­திய நிலை­யத்தின் நிறை­வேற்றுப் பணிப்­பாளர் அங்­கு­லு­கல்லே ஸ்ரீ ஜினா­னந்த தேரர் ஆளுநர் ஹிஸ்­புல்­லாஹ்­வுக்கு எதி­ராக மட்டும் இந்த முறைப்­பா­டு­களை செய்­தி­ருந்­தனர். அந்த முறைப்­பா­டு­களே பதில் பொலிஸ்மா அதி­பரால் சி.ஐ.டி.க்கு கைய­ளிக்­கப்பட்டு சி.ஐ.டி. பிரதானி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்னவின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

VIDIVELLI

Leave A Reply

Your email address will not be published.