மத்ரஸா, அரபுக்கல்லூரிகளை கண்காணிக்க புதிய சட்டம்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க

0 641

இலங்­கை­யில் இனி ஷரீஆ பல்­க­லைக்­க­ழகம் உரு­வாக்க இட­ம­ளிக்க முடி­யாது. அத்­துடன் அரபுக் கல்­லு­ரிகள் மற்றும் குர்ஆன் மத்­ர­ஸாக்­களை கண்­கா­ணிக்கும் புதிய சட்டம் உரு­வாக்­கப்­ப­டு­வ­தாக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரிவித்தார். அத்­துடன், கடந்த 21 ஆம் திகதி பயங்­க­ர­வாத தாக்­குதல் மற்றும் அத­னுடன் தொடர்­பு­டைய நபர்கள் குறித்து ஆராய நிய­மிக்­கப்­பட்ட பாரா­ளு­மன்ற தெரி­வுக்­கு­ழுவில் எதிர்க்­கட்சித் தலைவர் மற்றும் பிர­தான எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்கள் கலந்­து­கொள்ள வேண்டும் என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அழைப்பு விடுத்­துள்ளார்.

முஸ்லிம் சமூக பிர­தி­நி­திகள் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுடன் நடத்­திய பேச்­சு­வார்த்­தை­களை அடுத்து அவர் இதனை தெரி­வித்தார். அவர் மேலும் கூறு­கையில்,

ஈஸ்டர் தினத்­தன்று இடம்­பெற்ற பயங்­க­ர­வாத தாக்­கு­தலை அடுத்து முஸ்லிம் சமூகம் எம்­முடன் கலந்­து­ரை­யாடி சில இணக்­கப்­பா­டு­களை எட்­டி­யுள்­ளது. குறிப்­பாக மத்­ரஸா பாட­சா­லை­களை கட்­டுப்­ப­டுத்தும் வகை­யிலும் கண்­கா­ணிக்கும் வகை­யிலும் சில சட்ட திட்­டங்­களை அமைக்க இணங்­கி­யுள்­ளது. இவற்றை நாம் சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்­திற்கு அறி­வித்­துள்ளோம். புதிய சட்­டங்கள் அமைப்­பது குறித்து ஆரா­யப்­பட்டு அதற்­கான நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. அதேபோல் ஷரீஆ பல்­க­லைக்­க­ழ­கங்­களை அமைக்க வேண்டாம் எனவும் அவர்கள் கேட்­டுக்­கொண்­டனர். அதற்கும் நாம் கவனம் செலுத்­து­கின்றோம். இதற்கு பின்னர் இலங்­கையில் ஷரீஆ பல்­க­லைக்­க­ழ­கங்கள் அமைக்­கப்­ப­டாது. இவற்றைத் தடுக்க அர­சாங்கம் சகல நட­வ­டிக்­கை­க­ளையும் முன்­னெ­டுக்கும். அதேபோல் புர்கா குறித்த பிரச்­சி­னைக்கும் தீர்வு காணப்­பட்­டுள்­ளது. மேலும், இலங்­கையில் சிங்­களம், தமிழ் மற்றும் ஆங்­கில மொழி­க­ளுக்கு அப்பால் வேறு எந்­த­வொரு மொழியும் எந்த அரச அறி­விப்­பு­க­ளிலோ அல்­லது பெயர் பலகை மற்றும் முக்­கிய இடங்­களில் பயன்­ப­டுத்த முடி­யாது என்­பது எனது அறி­விப்பின் கீழ் உள்­ளக விவ­கார அமைச்சர் அறி­வித்­துள்ளார்.

அதேபோல் கைது­களை பொறுத்­த­வரை அப்­பா­வி­களை சந்­தே­கத்தின் பெயரில் கைது­செய்து அதிக காலம் தடுத்து வைப்­பதில் எந்த அர்த்­தமும் இல்லை. அவர்­களை விடு­விக்க வேண்டும். குற்­ற­வா­ளிகள் இருந்தால் அவர்­க­ளுக்கு எதி­ராக கடு­மை­யான சட்ட நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என்­பதில் மாற்றுக் கருத்­தில்லை. அதேபோல் தேடுதல் நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. இவற்றின் மூல­மாக குற்­றங்கள் பாரிய அளவில் தடுக்­கப்­பட்­டுள்­ளன என்­பதை சகல தரப்பும் ஏற்­றுக்­கொண்­டுள்­ளது. ஆகவே பாது­காப்புத் தரப்பு முன்­னெ­டுக்கும் நகர்­வு­க­ளுக்கு பொது­மக்கள் பூரண ஒத்­து­ழைப்­பு­களை வழங்­கு­கின்­றனர். அதற்கும் நன்றி தெரி­வித்­துக்­கொள்ள வேண்டும்.

மேலும் இப்­போது தெரி­வுக்­குழு அமைக்­கப்­பட்­டுள்­ளது, இதில் கடந்த மாதம் 21 ஆம் திகதி தாக்­குதல் குறித்தும் அதன் பின்­னணி குறித்தும் முழு­மை­யாக ஆரா­யவே இந்த நட­வ­டிக்கை முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளது. இதில் சகல அர­சியல் தரப்­பி­னதும் பூரண ஒத்­து­ழைப்பை நாம் கேட்டு நிற்­கின்றோம்.

எனினும் இதில் அமைச்சர் ரிஷாத் பதி­யுதீன் குறித்தே அதி­க­மாக பேசப்­பட்டு வரு­கின்­றது. அமைச்சர் தன் மீதான குற்­றச்­சாட்டை முழு­மை­யாக நிரா­க­ரித்து வரு­கின்றார். எனினும் இந்த தெரிவுக் குழுவில் எதிர்க்­கட்சி தலைவர் சார்ந்த எதிரணி கலந்துகொள்ளாமை கவலைக்கிடமான விடயமாகும். தெரிவுக் குழுவில் கலந்துகொள்ள மீண்டும் அவர்கள் யோசிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன். அதேபோல் ஊடகங்களும் இதில் கலந்துகொள்ள முழுமையாக இடமளிக்கப்பட்டுள்ளது. ஆகவே இந்த குழுவில் நடப்பவற்றை முழுமையாக ஊடகவியலாளர்கள் ஆராய்ந்து உண்மையை எழுத முடியும் என்றார்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.