பந்தாடப்படும் அகதிகளின் கதை

0 848

தமிழில்: எம்.ஏ.எம். அஹ்ஸன்

பாகிஸ்தான், ஈரான், ஆப்­கா­னிஸ்தான் மற்றும் யெமன் போன்ற நாடு­களில் இடம்­பெறும் வன்­மு­றைகள் கார­ண­மாக அங்­கி­ருந்து இலங்­கைக்குத் தப்­பி­வந்த டசின் கணக்­கான அக­திகள் மற்றும் புக­லிடக் கோரிக்­கை­யா­ளர்கள் தற்­போது மூன்று வாரங்­க­ளுக்கும் மேலாக நீர்­கொ­ழும்பு பொலிஸ் நிலை­யத்தில் எந்­த­வித அடிப்­படை வச­தி­க­ளு­மின்றி தனி­மைப்­ப­டுத்­தப்­பட்டு வேத­னை­யுடன் தங்க வைக்­கப்­பட்­டுள்­ளார்கள். ஈஸ்டர் ஞாயிறு பயங்­க­ர­வாதத் தாக்­கு­தலின் விளை­வா­கவே இவர்­க­ளுக்கு இந்­நிலை ஏற்­பட்­டுள்­ளது.

சாதா­ரண மக்­க­ளான இந்த அக­தி­களும் புக­லிட கோரிக்­கை­யா­ளர்­களும் கடு­மை­யான கஷ்­டங்­களை எதிர்­நோக்­கு­கின்­றனர். ஆயி­ரக்­க­ணக்­கான மைல் தூரம் கொண்ட பாலை­வனம் மற்றும் கடல் கடந்து வந்த அவர்­க­ளு­டைய பயணம் சாதா­ர­ண­மா­னது அல்ல. பல அக­திகள் தத்­த­மது நாடு­களில் உடை­மை­களை விட்­டு­விட்டு தப்­பி­வந்த கொடிய அனு­ப­வங்­களைக் கொண்­டுள்­ளனர். தமது குடும்ப உறுப்­பி­னர்­க­ளையும் துறந்து தற்­போது அமைதி வாழ்­வைத்­தேடி அலை­கி­றார்கள். இன்று தமக்­கென்று தற்­கா­லி­க­மாகப் பெற்­றி­ருந்த இடங்­க­ளையும் இழந்து விட்டு இன்­னொரு முகா­முக்­காகக் காத்­தி­ருக்­கி­றார்கள்.

நீர்­கொ­ழும்பு, கட்­டு­வ­பிட்­டிய, சென் செபஸ்­டியன் தேவா­ல­யத்தில் இடம்­பெற்ற தற்­கொலைக் குண்­டுத்­தாக்­கு­தலில் உயி­ரி­ழந்­த­வர்­க­ளு­டைய உடல்­களை அடக்கம் செய்­வ­தற்­கான ஏற்­பா­டுகள் இடம்­பெற்ற ஏப்ரல் 22 ஆம் திகதி , ஐக்­கிய நாடுகள் அகதி முக­வ­ர­கத்தின் மேற்­பார்­வையின் கீழ் அப் பகு­தியில் தங்­கி­யி­ருந்த அக­தி­களை ஒரு குழு அங்­கி­ருந்து வெளி­யே­று­மாறு வலுக்­கட்­டா­ய­மாகப் பணித்­தது. பெரும்­பா­லான அக­திகள் சிறு­பான்மை அக­ம­தியா பிரி­வையும் ஷியா முஸ்லிம் பிரி­வையும் கிறிஸ்­தவ சம­யத்­தையும் சேர்ந்­த­வர்­க­ளாவர். தற்­போது அவர்கள் அனை­வரும் நீர்­கொ­ழும்பு பொலிஸ் நிலைய கராஜ் உட்­பட பல்­வேறு தற்­கா­லிக இடங்­களில் தங்­க­வைக்­கப்­பட்­டுள்­ளனர்.
நீர்­கொ­ழும்பு பொலிஸ் நிலைய கராஜில் 158 பேர் தங்க வைக்­கப்­பட்­டுள்­ளனர். ஆனால் அத்­தனை பேருக்கும் பாவிக்க அங்கு இருப்­பது ஒரே ஒரு மல­சல கூடம்தான். மேலும் நீர்­கொ­ழும்பு பள்­ளி­வாசல் ஒன்றில் 296 பேரும் பஸ்­யா­லவில் 609 பேரும் தங்க வைக்­கப்­பட்­டுள்­ளனர். இவர்­களில் 325 பேர் சிறார்­க­ளாவர்.

அக­தி­க­ளு­டைய நெருக்­கடி ஒரு பார்வை

உலகில் கடந்த 10 வருட காலத்­தி­லேயே அதி­க­ள­வான மக்கள் அக­தி­க­ளாக மாறி­யி­ருக்­கி­றார்கள். இதற்­க­மைய இறு­தி­யாக எடுக்­கப்­பட்ட புள்­ளி­வி­ப­ரங்­களின் படி 68.5 மில்­லியன் மக்கள் உல­க­ளவில் அக­தி­க­ளாக உள்­ளார்கள்.
அக­தி­க­ளுக்­கான ஐ.நா. முக­வ­ர­கத்தின் கணிப்­பின்­படி 2015 ஆம் ஆண்டின் முதல் அரை­யாண்டில் மாத்­திரம் 5.2 மில்­லியன் மக்கள் புதி­தாக இடம்­பெ­யர்ந்­தி­ருக்­கி­றார்கள். அத்­துடன் 20.2 மில்­லியன் மக்கள் அக­தி­க­ளா­க­வுள்­ள­துடன் 3.2 மில்­லியன் பேர் புக­லிடக் கோரிக்­கை­யா­ளர்­க­ளா­கவும் பதி­வா­கி­யுள்­ளார்கள்.
என்­ன­வாக இருந்த போதிலும் இலங்­கை­யா­னது அக­திகள் மற்றும் புக­லிட கோரிக்­கை­யா­ளர்­களை மன­மு­வந்து ஏற்­கு­ம­ளவு பெரிய பிர­தேசம் அல்ல. இங்கே ஏற்­க­னவே பல அக­திகள் பல கஷ்­டங்­க­ளுக்கு மத்­தியில் உயிர்­வாழ்­கி­றார்கள். ஐ.நா அறிக்­கையின் படி இலங்­கையில் தற்­போது 844 வெளி­நாட்டு அக­தி­களும் 826 வெளி­நாட்டு புக­லிட கோரிக்­கை­யா­ளர்­களும் வாழ்ந்து வரு­கின்­றார்கள்.

சட்ட ரீதி­யாக இலங்­கைக்கு பொறுப்­பேற்க முடி­யாத நிலை

ஐக்­கிய நாடுகள் சம­வா­யத்தின் 1951 அல்­லது 1967 ஆகிய அக­திகள் தொடர்­பான சட்ட நெறி­மு­றை­களில் இலங்கை கைச்­சாத்­தி­டா­ததால் சட்­ட­ரீ­தி­யாக அக­தி­களை இலங்கை பொறுப்­பேற்க முடி­யாத நிலையில் உள்­ள­தாக அக­திகள் சார்­பான சட்­டத்­த­ர­ணிகள் மற்றும் மனித உரிமை செயற்­பாட்­டா­ளர்கள் தெரி­வித்­துள்­ளனர்.

இலங்­கையின் குடி­வ­ரவு மற்றும் குடி­ய­கல்வுத் திணைக்­களம் 2006 ஆம் ஆண்டில் ஐக்­கிய நாடுகள் அக­திகள் முக­வ­ர­கத்­துடன் ஒரு உடன்­ப­டிக்­கையைச் செய்து கொண்­டது. அர­சாங்­கத்­துடன் ஐக்­கிய நாடுகள் அகதி முக­வ­ரகம் செய்து கொண்­டுள்ள ஒப்­பந்­தத்தின் படி குறித்த அக­திகள் மற்றும் புக­லிட கோரிக்­கை­யா­ளர்­க­ளுக்கு வேறு நாடு­களில் தஞ்சம் வழங்­கும்­வரை ஒன்­றரை வரு­டங்கள் முதல் 2 வருட காலப் பகு­தியில் நாட்டில் வசிப்­ப­தற்கு அனு­மதி வழங்­கு­வ­தற்கு அர­சாங்கம் ஒப்­புதல் தெரி­வித்­துள்­ளது.

என்­ன­வாக இருந்த போதிலும், இலங்கை ஐ.நா.விட­மி­ருந்து பாரி­ய­ளவில் உத­வி­களைப் பெறும் நாடு என்ற வகையில், ஏனைய நாடு­களைச் சேர்ந்த பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு உதவிக் கரம் நீட்ட வேண்­டிய தார்­மீகக் கடப்­பாடு இருக்­கி­றது என்­பதை மனித உரிமை ஆர்­வ­லர்கள் சுட்­டிக்­காட்­டு­கின்­றனர்.

இலங்­கையில் புக­லிடம் கோருவோர்

இந்த அக­திகள் சட்ட ரீதி­யான அடை­யாளம் எதுவும் இன்றி இலங்­கையில் தங்­கி­யி­ருக்கும் நிலையில் அவர்­களால் ஒரு தொழிலைக் கூட பெற்­றுக்­கொள்ள முடி­யாது. அவர்­களுள் ‘அகதி’ அந்­தஸ்த்தை பெற்­ற­வர்கள் மாத்­திரம் ஐக்­கிய நாடுகள் அகதி முக­வ­ர­கத்தில் இருந்து குறிப்­பிட்­ட­ளவு தொகையை தமது அடிப்­படைத் தேவை­க­ளுக்­காக மாதாந்தம் பெறுவர். இருந்­த­போ­திலும் அரச சார்­பற்ற நிறு­வ­னங்­களின் துணை­யின்றி புக­லிடக் கோரிக்­கை­யா­ளர்­களால் தமது தேவை­களைப் பூர­ண­மாக நிறை­வேற்­றிக்­கொள்ள முடி­யாது.

அக­திகள் மற்றும் புக­லிடக் கோரிக்­கை­யா­ளர்­களின் பிள்­ளை­க­ளுக்கு மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட கல்­வியே வழங்­கப்­ப­டு­கி­றது. தனியார் பாட­சா­லை­க­ளுக்கு தமது பிள்­ளை­களை அனுப்­ப­வேண்டும் என்றால் அதற்­கான பணம் அவர்­க­ளிடம் கிடை­யாது. என்.ஜி.ஓ. வின் நிதி­யு­தவி அல்­லது நன்­கொடை கிடைத்தால் மாத்­தி­ரமே அவர்­களால் தமது பிள்­ளை­க­ளுக்கு கல்­வியை வழங்­க­மு­டியும். தொழில் ஒன்றைப் பெறு­வ­தாக இருந்­தாலும் இருப்­புக்­களின் அடிப்­ப­டையில் அல்­லது தம்­மிடம் இருப்­பதை விற்­றுத்தான் பெற­வேண்டும். அக­திகள் மீண்டும் அக­தி­க­ளா­கின்­றனர்.

இடம்­பெ­யர்ந்­துள்ள அக­தி­களை தாக்­கு­தல்­களின் பாதிப்பில் இருந்து பாது­காத்து பிறி­தொரு இடத்தில் தங்­க­வைக்க ஐக்­கிய நாடுகள் முக­வ­ரகம் முயற்சி செய்து வரும் அதே­வேளை இலங்கை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பாகிஸ்தான் மற்றும் ஆப்­கா­னிஸ்தான் அக­தி­களை வெளி­யேற்ற சர்­வ­தேச உத­வி­களை நாடி­யுள்ளார்.

கடந்த வாரம் கொழும்­பி­லுள்ள இரா­ஜ­தந்­தி­ரி­களை அழைத்துப் பேசிய ஜனா­தி­பதி, நாட்டில் நில­வு­கின்ற தற்­போ­தைய நிலை­மை­யினால் குறித்த அக­தி­க­ளுக்கும் புக­லிட கோரிக்­கை­யா­ளர்­க­ளுக்கும் தன்னால் பாது­காப்பு வழங்க முடி­யாது எனத் தெரி­வித்தார்.

“அவர்கள் பல வரு­டங்­க­ளாக இங்கு இருக்­கி­றார்கள். ஐ.நா அவர்­க­ளது பாது­காப்பு தொடர்பில் கவனம் செலுத்­தி­யுள்­ளது. அவர்­க­ளு­டைய தேவைகள் குறித்தும் கவனம் செலுத்­தி­யுள்ள ஐ.நா அவர்­க­ளு­டைய பாது­காப்பு பற்றி எங்­க­ளுக்குத் தகவல் தந்­துள்­ளது. நாட்டின் தற்­போ­தைய நிலையில் பாது­காப்புக் கார­ணங்­களால் அந்த மக்கள் தொடர்பில் எங்­களால் கவனம் செலுத்த முடி­யா­துள்­ளது” என ஜனா­தி­பதி தெரி­வித்­த­தாக செய்தி அறிக்­கைகள் கூறு­கின்­றன.

சுமார் 250 க்கும் மேற்­பட்ட உயிர்­களைக் காவு­கொண்ட இஸ்­லா­மிய தீவி­ர­வா­தி­களால் மேற்­கொள்­ளப்­பட்­ட­தாகக் கூறப்­படும் ஈஸ்டர் ஞாயிறு தாக்­கு­தலைத் தொடர்ந்து கோப­ம­டைந்த மக்கள், தென்­னா­சி­யாவில் இருந்து இடம்­பெ­யர்ந்­துள்ள முஸ்­லிம்­களை அச்­சு­றுத்தி வரு­வ­தாக மனித உரி­மைகள் கண்­கா­ணிப்­பகம் 21, ஏப்ரல் அன்றே தெரி­வித்­தி­ருந்­த­மை­யா­னது இங்கு சுட்­டிக்­காட்­டப்­பட வேண்­டிய ஒன்­றாகும்.

இலங்­கையில் உள்ள புக­லிட கோரிக்­கை­யா­ளர்­களின் கதை­க­ளையே இனி நாம் பார்க்­கப்­போ­கிறோம். ஒவ்­வொ­ரு­வ­ரு­டைய கதையும் வித்­தி­யா­ச­மாக உள்ள அதே­வேளை அவர்­க­ளு­டைய வேத­னைகள் அதில் அடங்­கி­யுள்­ளன. தாம் அடைந்த அச்­சு­றுத்­தல்­களை தம்மை காப்­பாற்றிக் கொள்­வ­தற்­காக மாத்­திரம் பகி­ர­வில்லை. சிதைந்து போன தமது உயிரை மீண்டும் நிலை நிறுத்த விடா முயற்­சி­யுடன் பகிர்­கி­றார்கள்.

ஐதா பனா­ஹி–­ஆப்­கா­னிஸ்தான்

ஆப்­கா­னிஸ்­தானின் பதற்ற நிலை­மையின் போது அவ­ரது பெற்றோர் அங்­கி­ருந்து தப்பி வரும் போது ஐதா பனாஹி அவ­ரது தாயு­டைய வயிற்றில் இருந்தார். அவ­ரு­டைய தாய் கரு­வுற்ற நிலை­யி­லேயே அவர்­க­ளுக்கு இந்த நிலைமை ஏற்­பட்­டது.

“நான் ஈரானில் பிறந்தேன். இப்­போது 9 வரு­டங்­க­ளாக எனது பெற்றோர் புக­லிடம் கோரு­கின்­றார்கள். ஈரான் எங்­களை ஏற்­றுக்­கொள்­ள­வில்லை. நான் பாட­சா­லைக்கு செல்­வ­தில்லை ஏன் என்றால் நாங்கள் கல்வி கற்க அனு­ம­திக்­கப்­ப­ட­வில்லை. ஈரானை விட்டு வெளி­யேறும் போது எனக்கு 9 வயது தான் இருக்கும். ஈரானில் இறு­தி­யாக என்னை எனது தாய் எங்­க­ளது இடத்தில் இருந்து எனது பாட்­டி­யு­டைய இடத்­துக்கு ஒரே­யொரு பையுடன் கொண்­டு­வந்து விட்­ட­துதான் எனக்கு நினைவில் இருக்­கி­றது. எங்­க­ளது பல உடை­மை­களை அங்­கு­விட்­டு­விட்டு வந்தோம். ஈரானில் இருந்து மங்­கிய எதிர்­பார்ப்­பு­க­ளுடன் தான் 2015 இல் ஸ்ரீலங்­கா­வுக்கு வந்தோம். நான் இங்கு வரு­வ­தற்கு முன்னர் ஸ்ரீலங்கா என்ற நாடு பற்றி கேள்­விப்­பட்­ட­தே­யில்லை. 4 வரு­டங்­க­ளாக இங்கு எந்தப் பிரச்­சி­னையும் இல்­லா­மல்தான் வாழ்­கிறோம். எனக்கு இங்கு பல நண்­பர்கள் கூட கிடைத்­தி­ருக்­கி­றார்கள். ஈஸ்டர் ஞாயிறு தாக்­கு­தலில் பலர் இறந்து போனதை கேள்­விப்­பட்டு நானும் அதிர்ச்­சி­ய­டைந்தேன். பயங்­க­ர­வா­தத்­திற்கு பயந்த நிலை­மையில் நாங்கள் இருக்­கிறோம். என்ன நடக்கப் போகி­றது என்­பதை என்னால் ஓர­ளவு புரிந்து கொள்­ள­மு­டி­கி­றது.

இப்­போது இரண்டு வாரங்­க­ளுக்கு மேலாக நாங்கள் இந்தப் பொலிஸ் நிலை­யத்தின் கராஜில் இருக்­கிறோம். நாங்கள் இங்­கேயே சாப்­பிட்­டு­விட்டு இங்­கேயே தூங்­கு­கிறோம். நாங்கள் பொலிஸ் நிலைய குளி­ய­லறை மற்றும் மல­சல கூடங்­களைத் தான் பயன்­ப­டுத்­து­கின்றோம். இந்த கஷ்­ட­மான நிலையைப் பார்க்­கும்­போது நாங்கள் இவ்­வாறு நடத்­தப்­ப­டு­வ­தற்கு என்ன பிழை செய்தோம் என்று கேட்­கத்­தோன்­று­கி­றது. அக­தி­க­ளா­கிய எங்­க­ளுக்கு எதை­யா­வது ஆசைப்­பட மட்­டும்தான் முடியும். ஒரு­போதும் அதை அடைய முடி­யாது.

எனக்கு என்­னு­டைய எதிர்­காலம் பற்றி நிறைய கன­வுகள் உள்­ளன. ஆனால் எனது வாழ்நாள் முழு­வதும் ஒரு நாட்டில் இருந்து இன்­னொரு நாட்­டுக்குப் பயணம் செய்­வ­தி­லேயே கடந்து விடுமோ என பய­மாக இருக்­கி­றது.

னென்றால் எந்த ஒரு நாடும் எங்­களை வர­வேற்­ப­தில்லை. எனக்கு எனது மக்­களை அபா­யத்தில் இருந்து பாது­காக்­க­வேண்டும் என்ற ஆசை இருக்­கி­றது. நான் நாட்டைப் பெரு­மைப்­ப­டுத்தும் ஒரு­வ­ராக இருக்­க­வேண்டும். நான் எனது வாழ்க்­கையை மீள­மைத்து எனது கன­வு­களை மெய்ப்­பிக்க வேண்டும்” என ஐதா தெரி­வித்தார்.

தனது பய­ணத்தைப் பற்றி ஐதா பேசும் போது மிகவும் கஷ்­டப்­பட்டார். தனது முகத்தை பல­முறை துடைத்த படியே பெரு­மூச்சு விட்டார். இப்­போது தனது கன­வு­க­ளிலும் எதிர்­பார்ப்­பு­க­ளிலும் நிச்­ச­ய­மற்ற தன்மை உரு­வாகி விட்­ட­தாக அவர் தெரி­வித்தார்.

ராஜா கம்ரன் – காஷ்மீர்

ஒரு அஹ­ம­தி­யாவாக தனது சமூ­கத்­துக்குத் தொண்­டு­செய்த ஒரு இளைஞர் அணியின் தலை­வ­ரான ராஜா கம்ரன் என்­பவர் தனது உயி­ருக்கு அச்­சு­றுத்தல் இருந்த கார­ணத்தால் காஷ்மீர் – அஸாட்டில் இருந்து 22.01.2018 அன்று தனது உடை­மை­களை விட்டு தப்­பி­வந்தார். திரும்­பிச்­செல்லும் வசதி கொண்ட 30 நாள் சுற்­றுலா வீஸாவில் தனது மனை­வி­யுடன் வந்தார். அதி­லி­ருந்து இப்­போ­து­வரை புக­லிட கோரிக்கை விடுத்து வரு­கிறார்.

“நான் பொய்­யான குற்­றச்­சாட்­டுக்­க­ளுக்­காக பாகிஸ்தான் இரா­ணு­வத்­தி­னரால் கைது­செய்­யப்­பட்டேன். நான் ஜிஹாதை எதிர்ப்­பதால் இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வாத தீவி­ர­வாத அமைப்­பு­க­ளினால் அச்­சு­றுத்­தப்­பட்டேன். எனது வாழ்க்­கையில் கடந்த 3 வரு­டங்­களும் பல கஷ்­டங்­களை அனு­ப­வித்தேன். ஏனென்றால் அதி­கா­ரி­களால் பல­வாறு துன்­பு­றுத்­தப்­பட்டேன். அவர்­க­ளிடம் இருந்து தப்பி வரு­வதைத் தவிர எனக்கு வேறு­வ­ழி­யில்லை. எங்­க­ளது சமூ­கத்தில் ஏற்­க­னவே பல அக­ம­திகள் மிரு­கத்­த­ன­மாக துன்­பு­றுத்­தப்­பட்டு கொலை­செய்­யப்­பட்­டு­முள்­ளனர். இதனால் எனது மனைவி அவர்­க­ளிடம் உயிர்­பிச்சை கேட்டு கெஞ்­சினார். துன்­பு­றுத்­தல்­களில் இருந்து எனது குடும்­பத்­தையும் என்­னு­டைய மனை­வி­யையும் பாது­காக்க வேண்டும் என்­ப­தற்­காக இலங்­கையில் “அகதி” அந்­தஸ்த்து பெற முயல்­கிறோம்.

ஏப்ரல் 21 வரை நீர்­கொ­ழும்பில் ஒரு வாடகை வீட்டில் நான் எனது மனைவி மற்றும் எங்­க­ளது 4 வயது மகனும் மிக சந்­தோ­ஷ­மாக இருந்தோம். பின்னர் எங்­களை அந்த வீட்டை விட்டு வெளி­யேற வெறும் 20 நிமிடம் கால அவ­கா­சத்தை தந்­த­வர்கள் கற்­களை வீசி எங்­களைத் தாக்­கி­னார்கள். இலங்­கையில் நடந்த குண்டுத் தாக்­கு­தல்­க­ளுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். பொறுப்­பேற்­றுள்­ளது. அதற்­காக எல்லா முஸ்­லிம்­களும் ஏன் துன்­பப்­பட வேண்டும்” என ராஜா கேட்­கிறார்.

இலங்­கையில் தங்­கி­யி­ருக்கும் அக­திகள் அவர்­க­ளு­டைய தேவை­க­ளுக்­காக வேண்டி குறிப்­பிட்­ட­ளவு தொகையை ஐ.நா அகதி முக­வ­ர­கத்­திடம் இருந்து பெறு­கி­றார்கள். ஆனால் ராஜாவைப் போன்ற புக­லிட கோரிக்­கை­யா­ளர்கள் ஐ.நா விடம் இருந்து எந்­த­வி­த­மான நிதி­யையும் பெறு­வ­தில்லை. அவர்கள் நன்­கொ­டை­யா­ளர்­களின் நன்­கொ­டை­களை வைத்தே தம்மைக் காப்­பாற்­றிக்­கொள்­கி­றார்கள்.

ஸாதியா பாகிர்-– பாகிஸ்தான்

ஜன­வரி 2018 இல் அவ­ச­ர­மாக ஸாதி­யா­வுக்கு பாகிஸ்­தானை விட்டு வெளி­யேற வேண்­டிய துர்ப்­பாக்­கிய நிலை ஏற்­பட்­டது. முஸ்லிம் பெண்­ணான ஸாதியா பாகிஸ்­தானைச் சேர்ந்த ஒரு கிறிஸ்­த­வரை காத­லித்­ததன் விளைவால் அவ­ரது குடும்­பத்­தினர் ஆத்­தி­ர­முற்­றனர்.

“என்­னு­டைய நாட்டை விட்டு வெளி­யே­று­வது எனது தெரி­வல்ல. எனது பிள்­ளைகள் பாது­காப்­பான நாட்டில் வாழ வேண்டும். அவர்­க­ளுக்கு சிறந்த எதிர்­காலம் அமை­வ­தோடு எங்­க­ளு­டைய உயிர் பாது­காக்­கப்­பட வேண்டும் என்­பதே எனது தேவை. எனக்கு இங்கு குழந்தை பிறந்த போது ஐ.நா விடம் இருந்து 6 மாதங்­க­ளுக்கு தலா 5000 ரூபாய் பெற்றேன். இந்தத் தொகை இலங்கையில் உணவுக்கும் இருப்பிடத்துக்குமே போதாது. புகலிட கோரிக்கையாளர்களான எங்களுக்கு ஐ.நா விடம் இருந்து நிதி எதுவும் கிடைப்பதில்லை. இங்கு எங்களை நாங்களே பார்த்துக் கொள்ள வேண்டிய நிலைமைதான் உள்ளது. ஒரு சில சமயக்குழுக்கள் மற்றும் என்.ஜி.ஓ என்பன எங்களுக்கு உதவுகின்றன. ஆனால் எங்களுக்கு அதிலும் குறைபாடு உள்ளது.

எங்களுக்கு சட்ட ரீதியாக தொழில் ஒன்றைப் பெறமுடியாதுள்ளது. கட்டணம் செலுத்தியே அறைகளில் தங்கவேண்டும். உணவைச் சுயமாகப் பெற்றுக் கொள்ளவோ பிள்ளைகளைப் பாடசாலைக்கு அனுப்பவோ எங்களால் முடியாது” என ஸாதியா தெரிவிக்கிறார்.

அகதிகள் யாரும் பயங்கரவாதிகள் அல்ல. ஆனால் இன்று பயங்கரவாதிகளாக சித்திரிக்கப்பட்டுள்ளார்கள். கோபம் மற்றும் உணர்வு ரீதியாக பாதிப்படைந்த குழுவொன்று அந்த மக்கள் மீது முறைகேடாக நடந்துள்ளது. ஆனால் நீர்கொழும்பில் உள்ள பெரும்பாலான மக்கள் இந்த செயற்பாட்டை அனுமதிக்க வில்லை. இது போன்ற வன்முறைத் தாக்குதல்களை இலங்கையர்கள் ஒரு போதும் விரும்பமாட்டார்கள்.

உலகின் பல்வேறு நாடுகளில் இலங்கையைச் சேர்ந்த ஒரு மில்லியனுக்கும் மேற்பட்டோர் அகதிகளாக வாழ்கின்றனர். என்னவாக இருந்த போதும் இலங்கை பல சமூக, பொருளாதார, அரசியல் இன்னல்களைச் சந்தித்து வரும் நாடுதான். அண்மையில் நாட்டில் தேசிய பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலைத் தொடர்ந்து இலங்கையர்களுடைய பாதுகாப்பே மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

நன்றி: டெய்லி மிரர்.

Leave A Reply

Your email address will not be published.