பதில் பொலிஸ் மா அதிபருடன் முஸ்லிம் கவுன்சில் சந்திப்பு
முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த கோரிக்கை
வட மேல் மாகாணத்தின் பல்வேறு முஸ்லிம் கிராமங்களில் நேற்று முன்தினம் இரவு முதல் இடம்பெற்று வரும் முஸ்லிம்களுக்கு எதிரான தொடர் தாக்குதல் சம்பவங்களை தடுத்து நிறுத்தி உரிய பாதுகாப்பை வழங்குமாறு ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சில் தூதுக் குழுவினர் பதில் பொலிஸ் மா அதிபர் மற்றும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஆகியோரை நேற்று சந்தித்து வேண்டுகோள் விடுத்தனர்.
அவசரகாலச் சட்டமும் ஊரடங்குச் சட்டமும் அமுலில் உள்ள வேளைகளில், குண்டர்கள் இவ்வாறு முஸ்லிம்களின் பள்ளிவாசல்களையும் சொத்துக்களையும் இலக்கு வைத்து தாக்குதல் நடத்துவது குறித்தும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுள்ள சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன நியமிக்கப்பட்டார். எவ்வாறாயினும் பதில் பொலிஸ்மா அதிபராக ஒருவரை ஜனாதிபதி நியமித்தால் அவரால் 14 நாட்களுக்கே கடமையாற்ற முடியும். அதற்கு மேலதிகமாக பதில் பொலிஸ்மா அதிபராக இருக்க அரசியலமைப்பு பேரவையின் அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டும். அதன்படியே சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவுக்கு பதில் பொலிஸ்மா அதிபராக கடமையாற்ற ஜனாதிபதியின் முன் மொழிவுக்கு அரசியலமைப்பு பேரவை அனுமதியளித்துள்ளது.
vidivelli