முஸ்லிம் அமைப்புகள், வர்த்தக நிறுவனங்கள் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவி

0 740

ஏப்ரல் 21 ஆம் திகதி கிறிஸ்­தவ தேவா­ல­யங்­களில் இடம்­பெற்ற குண்டுத் தாக்­கு­தல்­க­ளினால் உயிர்­களை இழந்த மற்றும் காய­ம­டைந்­த­வர்­களின் குடும்­பங்­க­ளுக்கு பகிர்ந்தளிக்கும் பொருட்டு முஸ்லிம் வர்த்­தக நிறு­வ­னங்­களும் பொது அமைப்­பு­களும் நிதி­யு­த­வி­களை வழங்­கி­யுள்­ளன. குறித்த நிதி­யு­த­விகள் அனைத்தும் கொழும்பு பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்­ட­கை­யிடம் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளன.

இதற்­க­மைய ‘பெஷன் பக்’ ஆடை விற்­பனை நிலையம் தமது நிறு­வ­னத்தின் முகா­மை­யா­ளர்கள் மற்றும் ஊழி­யர்களின் ஒருநாள் சம்­பளத் தொகை­யான 15 இலட்சம் ரூபாவை சேக­ரித்து வழங்­கி­யுள்­ளனர். நிறு­வ­னத்தின் உய­ர­தி­கா­ரிகள், பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்­ட­கையைச் சந்­தித்து இந்த உத­வியை கைய­ளித்­தனர்.

அதே­போன்று ‘கூல் பிளானட்’ நிறு­வனம் 16 இலட்சம் ரூபாவை வழங்­கி­யுள்­ளது. இந் நிதியை நிறு­வ­னத்தின் பிர­தம நிறை­வேற்று அதி­காரி ரிஸ்வி தாஹா தலை­மை­யி­லான குழு­வினர் பேரா­ய­ரிடம் கைய­ளித்­தனர்.

மேலும் செரண்டிப் மா ஆலை நிறு­வ­னமும் ஒரு தொகை நிதி­யு­த­வியை வழங்­கி­யுள்­ளது. இதன் பிர­தம நிறை­வேற்று அதி­காரி முஹமட் ரியாழ் தலை­மை­யி­லான குழு­வினர், பேராயர் இல்­லத்தில் அவரை நேரில் சந்­தித்து இந் நிதி உத­வியை கைய­ளித்­தனர். குண்டுத் தாக்­கு­தலில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு வழங்­கவும் சேத­ம­டைந்த தேவா­ல­யங்­களை புன­ர­மைக்­கவும் இந் நிதி­யு­தவி வழங்­கப்­பட்­ட­தாக அந் நிறு­வனம் தெரி­வித்­துள்­ளது.

இதே­போன்று முஸ்லிம் மகளிர் கல்வி வட்டம் மற்றும் அகில இலங்கை முஸ்லிம் மகளிர் பேரவை ஆகி­ய­னவும் ஒரு தொகை நிதி­யு­த­வியை வழங்­கி­யுள்­ளன. இவ்­விரு மகளிர் அமைப்­பு­க­ளி­னதும் பிர­தி­நி­திகள் நேற்­றைய தினம் பேரா­யரைச் சந்­தித்து நிதி­யு­த­வி­களை நேரில் கைய­ளித்­தனர்.

இதற்கு முன்­ன­ராக பைரஹா நிறு­வ­னமும் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்­காக 15 இலட்சம் ரூபா நிதி உத­வியை வழங்­கி­யி­ருந்­தது.

இதற்­கி­டையில் அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உல­மாவின் வேண்­டு­கோளின் பேரில் நாட­ளா­விய ரீதியில் ஜும்ஆப் பள்­ளி­வா­சல்­களில் நிதிசேகரிப்பு இடம்பெற்று வருகின்றது. நாடெங்கிலுமுள்ள ஜும்ஆ பள்ளிவாசல்களில் இரு ஜும்ஆ தினங்களில் சேகரிக்கப்படும் நிதியை சேகரித்து வழங்க உலமா சபை தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

vidivelli 

Leave A Reply

Your email address will not be published.