முழு இலங்கை முஸ்லிம் மக்களையும் பூதங்களாக சித்தரிப்பது மற்றொரு பூதத்தை உருவாக்கிவிடும்

'லண்டன் ஐக்கியத்துக்கான சுயாதீன சிவில் அமைப்பு' அறிக்கை

0 815

இலங்­கையில் இடம்­பெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்­க­ர­வாத தொடர் குண்­டுத்­தாக்­குதல் தொடர்­பாக இலங்­கையின் அனைத்து சிவில் சமூ­கங்­க­ளி­னதும் கவ­னத்தை ஈர்க்கும் வகையில் ‘ லண்டன் – ஐக்­கி­யத்­திற்­கான சுயா­தீன சிவில் அமைப்பு ’ அறிக்கை ஒன்றை வெளி­யிட்­டுள்­ளது.

”ஐக்­கி­யத்­திற்­கான சுயா­தீன சிவில் சமூக அமைப்பு”, லண்டன் ஈஸ்ட்ஹாம் நகரின் டிரி­னிட்டி மண்­ட­பத்தில் 2019 மே 4 ஆம்­தி­கதி ஏற்­பாடு செய்­தி­ருந்த கலந்­து­ரை­யாடல் அமர்வில் உரை­யா­டப்­பட்ட விட­யங்­களின் சாராம்­சத்­தையும், நிறை­வேற்­றப்­பட்ட வேண்­டு­கோள்­க­ளையும் உள்­ள­டக்­கி­யஇவ் அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­வது;

1) கண்­ட­னங்கள் மாத்­திரம் காயத்தை ஆற்­றி­வி­டாது, அர்த்­த­முள்ள நட­வ­டிக்­கைகள் அவ­சியம்.

அமை­தியை விரும்பும் ஒரு மதத்­தி­னரை குறி­வைத்து உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று மூன்று தேவா­ல­யங்­கள்­மீதும் மூன்று சுற்­றுலா விடு­திகள் மீதும் மேற்­கொள்­ளப்­பட்ட கொடூ­ர­மான, காட்­டு­மி­ராண்­டித்­த­ன­மான, பயங்­க­ர­வாத தாக்­கு­தல்­களை வன்­மை­யாகக் கண்­டனம் செய்­வ­துடன் இம் மூர்க்­கத்­த­ன­மான தற்­கொலைக் குண்­டு­வெ­டிப்பால் காய­ம­டைந்­த­வர்கள் விரைவில் குண­ம­டை­ய­வேண்­டு­வ­தோடு; இழப்­புத்­து­யரால் வாடும்­கு­டும்­பங்கள், நண்­பர்கள் மற்றும் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு நெருக்­க­மா­ன­வர்கள் அனை­வ­ரு­டனும் ஆழ்ந்த துயரை பகிர்ந்து கொள்­கிறோம். இன்­னொரு இரத்த ஆறு பெருக்­கெ­டுத்­தோ­டு­வதை தடுக்கும் விதத்தில் – சொல்­லொணா சோகத்­தின்­போதும்- நிதா­னத்­து­டனும் விவே­கத்­து­டனும் துணிச்­ச­லோடும் செயற்­பட்ட பொது­மக்கள் மற்றும் மத, சமூகத் தலை­வர்­க­ளுடன் சேர்ந்து எமது முழு­மை­யான ஒரு­மைப்­பாட்டை வெளிப்­ப­டுத்­து­வது என இவ்­வ­ரங்கு ஏக­மா­ன­தாக தீர்­மா­னித்­தது.

எனினும் கண்­ட­னங்கள் மாத்­திரம் காயத்தை ஆற்­றி­வி­டாது என இவ்­வ­ரங்கு கரு­து­கி­றது. ஆத்­தி­ர­மூட்டும் வகையில் அமைந்த இத்­தாக்­கு­த­லின்­போது அனைத்து தேவா­லய தலை­வர்­களும் நிலை­மையை துணிச்­ச­லுடன் கையாண்டு தமது முதிர்ச்­சி­யையும் பக்­கு­வத்­தையும் வெளிப்­ப­டுத்தி ஏனைய அர­சியல் மத நிறு­வ­னங்­களில் இருக்கும் தீவி­ர­வா­த­சக்­திகள் பின்­பற்­ற­வேண்­டிய முன்­னு­தா­ர­ண­மொன்­றினை உரு­வாக்­கி­யுள்­ளனர். சகிப்புத் தன்­மை­யுள்ள கிறிஸ்­தவ சமூ­கத்தின் மன்­னிக்கும் மனப்­பான்மை தவ­றாக விளங்­கிக்­கொள்­ளப்­ப­டக்­கூ­டாது. அவர்கள் மீது சமூ­கத்­திற்கும் அர­சாங்­கத்­திற்கும் உள்ள பொறுப்­பு­களை சந்­தர்ப்­ப­வாத ரீதி­யில்­ம­றப்­ப­தற்கு அது கார­ண­மா­கி­வி­டக்­கூ­டாது என இவ்­வ­ரங்கு வலி­யு­றுத்­து­கி­றது.

நிகழ்ந்த பாது­காப்பு குறை­பா­டு­க­ளுக்­கான முழுப்­பொ­றுப்­பையும் அர­சாங்­கமே ஏற்­க­வேண்டும், அதி­லி­ருந்து தப்பி ஓடி­வி­ட­மு­டி­யாது என இவ்­வ­ரங்கு திட்­ட­வட்­ட­மாக கூறு­வ­துடன்- உட­னடி, மற்றும் நீண்­ட­கால நிவா­ரணம் வழங்­குதல், கொல்­லப்­பட்­ட­வர்­க­ளி­னதும் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளி­னதும் குடும்­பங்­க­ளுக்கு புனர்­வாழ்­வ­ளித்தல், அனர்த்­தத்­தினால் உள­வியல் பாதிப்­புக்­குள்­ளான தனி­ந­பர்­க­ளுக்கு மாத்­தி­ர­மன்றி குடும்­பங்­க­ளுக்கும் சமூ­கங்­க­ளுக்கும் உள­வியல் நிவா­ர­ண­ம­ளித்தல் ஆகிய கட­மை­களை உட­ன­டி­யாக மேற்­கொள்­ள­வேண்டும் என வலி­யு­றுத்­து­கி­றது.

பாதிக்­கப்­பட்ட குடும்­பங்கள் தொடர்­பாக சகல சமூ­கங்­க­ளுக்கும், குறிப்­பாக முஸ்லிம் சமூ­கத்­திற்கும் ஒரு கடமை இருக்­கி­றது.நேர­டி­யாக அவர்­களின் துய­ரத்­தையும் சுமை­யையும் நடை­மு­றை­ரீ­தியில் பகிர்ந்­து­கொண்டு உத­விக்­கரம் நீட்­டு­வ­தன்­மூலம் ஒரு­மைப்­பாட்டை வெளிப்­ப­டுத்தி அர்த்­த­முள்ள வகையில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்தும் முன்­னு­தா­ர­ண­மொன்றை உரு­வாக்­க­மு­டியும் என இவ்­வ­ரங்கு திட­மாக நம்­பு­கின்­றது.

2) முழு முஸ்லிம் மக்­க­ளையும் பூதங்­க­ளாக சித்­தி­ரிப்­பது மற்­றொரு பூதத்தை உரு­வாக்­கி­விடும்.

இத்­தாக்­கு­தலை திட்­ட­மிட்டு செயல்­ப­டுத்­திய ஒரு சிறு­கு­ழு­வான NTJ மீதான பழியை முழு முஸ்லிம் சமூ­கத்­தின்­மீது சுமத்­தக்­கூ­டாது என்­பதை ஒரே குரலில் இவ்­வ­ரங்கு கூறு­கி­றது. ஒரு­சி­று­குழு செய்த காட்­டு­மி­ராண்­டித்­த­ன­மான காரி­யத்­துக்­காக முழு முஸ்லிம் சமூ­கத்­தையும் குற்­ற­வா­ளி­யாக்­கு­வது என்­பது இஸ்­லா­மிய எதிர்ப்­பு­வாத –இன­வாத தப்­பெண்­ணங்­களின் ஒரு­தீ­வி­ர­வ­டி­வ­மாகும். இலங்கை முஸ்­லிம்கள் இத்­தாக்­கு­த­லுக்­காக வருந்­து­வதும் குற்­ற­வு­ணர்ச்சி கொள்­வதும் நியா­ய­மா­னது. ஆனால் அவர்கள் அனை­வ­ரையும் மன்­னிப்­புக்­கோர வேண்டும் என்ற தோர­ணையில் பல வகை­களில் நிர்ப்­பந்­திப்­பது தேவை­யில்­லாத விளை­வையே தரும். பெரும்­பான்­மை­யான முஸ்­லிம்கள் தமது சமூ­கத்­துக்­குள்­ளேயே இந்த தீவி­ர­வாத பயங்­க­ர­வா­தத்தை தவிர்த்­தொ­துக்­கி­ய­துடன் நில்­லாமல், தமது எதிர்ப்­பையும் வெளிப்­ப­டை­யாக நிதர்­ச­ன­மாக வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளனர்.

இலங்கை முஸ்­லிம்கள் நாடெங்கும் பரந்து வாழ்­கி­றார்கள். ஒரு மூலையில் இர­க­சி­ய­மான முறை­யிலே இயங்­கிய விரல்­விட்டு எண்­ணக்­கூ­டிய ஒரு­சில தீவி­ர­வா­தி­களின் செயற்­பா­டுகள் பற்றி தெரி­யாத போது, உள்­ளூ­ரிலும் வெளி­நாட்­டிலும் இருந்து கிடைத்த அபாய அறி­விப்­பு­களை அரசே அலட்­சியம் செய்து முழு­நாட்­டுக்கும் அவ­லத்தை கொண்­டு­வந்­த­போது – இயல்பு வாழ்க்கை வாழும் முஸ்­லிம்­க­ளுக்கு அது­பற்றி முழு­வ­து­மாக தெரிந்­தி­ருக்க வாய்ப்­பில்லை என்­பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

ஆயினும் அதி தீவி­ர­வாத NTJ பற்­றியும் இத்­தாக்­கு­தலில் இறந்­து­விட்­ட­தாக கரு­தப்­படும்,அதன் தலை­வ­னான சஹ்ரான் ஹாஷிம் பற்­றியும் சந்­தே­கித்­த­வர்கள் தமக்­கு­தெ­ரிந்த அனைத்­தையும் பாது­காப்புப் பிரி­வுக்கும் அர­சங்­கத்­திற்­கும்­கூறி பல ஆண்­டு­க­ளாக எச்­ச­ரித்து வந்­துள்­ளனர். NTJ ஐ தடை­செய்­யு­மாறும் சஹ்­ரானை கைது செய்­யு­மா­றும்­கோரி காத்­தான்­கு­டியில் ஆர்ப்­பாட்­டமும் செய்­துள்­ளனர். முஸ்லிம் மதத்­த­லை­வர்கள், இரா­ணுவ புல­னாய்வு அதி­கா­ரி­க­ளி­டமும் அர­சாங்­கத்­தி­டமும் இத்­தீ­வி­ர­வா­த­குழு பற்­றிய தக­வல்­க­ளையும் அதன் தலை­வ­னது பெயர் விப­ரங்­க­ளையும் கொடுத்து எச்­ச­ரிக்கை செய்­துள்­ளனர்.

ஈஸ்டர் படு­கொ­லைக்குப் பிறகு முழு முஸ்லிம் சமூ­கமும் எஞ்­சிய பயங்­க­ர­வா­தி­களை கைது செய்­வ­தற்கும் அழிப்­ப­தற்கும் பூரண ஒத்­து­ழைப்பை அர­சுக்கு நல்­கி­யுள்­ளது. அத்­துடன் குண்­டு­தா­ரி­களின் சட­லத்தை முஸ்லிம் மைய­வா­டி­களில் புதைப்­ப­த­தற்கு அனு­ம­தி­ம­றுத்­துள்­ளது. துர­திர்ஷ்­ட­வ­ச­மாக, இது­வரை நித்­தி­ரையில் இருந்த அதி­கா­ர­பீடம் இப்­போது புர்கா, தாடி, வாள், ஏன் முஸ்­லிம்­களால் பயன்­ப­டுத்­தப்­படும் சமை­ய­ல­றைக்­கத்­திகள் மீதும் குற்­றம்­சாட்டி மக்­களின் கவ­னத்தை திசை திருப்ப முயற்­சிக்­கி­றது. இந்த அபத்த நாட­கத்­திற்கு பொறுப்­பற்ற வகையில் சில ஊட­கங்­களும் துணை புரிந்து வரு­கின்­றன.
பிர­தான நீரோட்­டத்­தி­லுள்ள அச்சு மற்றும் காட்சி ஊட­கத்தின் நடத்தை பண்­பற்­ற­தா­கவும் அரு­வ­ருப்­பூட்­டு­வ­தா­கவும் பொறுப்­பற்­ற­தா­கவும் காணப்­ப­டு­கி­றது. ஒரு­தொ­லைக்­காட்சி ‘நாய்-­போனி குதிரை’ நிகழ்ச்­சியை நடத்­து­கி­றது. ஒரு ஊட­கத்தில் அமைச்­ச­ர­வையில் அங்கம் வகிக்கும் ஒரு முஸ்லிம் அமைச்சர் அவ­ம­ரி­யா­தை­யாக நடத்­தப்­பட்டு பழி­வாங்­கப்­ப­டு­கிறார். முழு முஸ்லிம் சமூ­கமும் அங்கு ஒரு குறி­யீ­டாக அவர் மூலம் காட்­டப்­ப­டு­கி­றது. முழு முஸ்லிம் சமூ­கமூம் நியா­ய­மற்ற முறையில் குற்­றம்­சாட்­டப்­ப­டு­கி­றது. ஒரு­சி­லரால் மேற்­கொள்­ளப்­பட்ட கண்­டிக்­கத்­தக்க வன்­மு­றைக்­காக முழு சமு­தா­யமும் குறி­வைக்­கப்­ப­டு­கி­றது.

பொலிஸ் மற்றும் ஆயுதப் படை­களின் உறுப்­பி­னர்கள் சிலர் தேவை­யற்ற முறையில் முஸ்­லிம்­கள்­மீது கடு­மை­யா­கவும் முரட்­டுத்­த­ன­மா­கவும் நடந்­து­கொண்ட சம்­ப­வங்கள் இடம்­பெற்­றுள்­ளன. அவர்கள் பயங்­க­ர­வாத நட­வ­டிக்­கையில் நேர­டி­யாக சம்­பந்­தப்­பட்­ட­வர்­க­ளைப்­போல நடத்­தப்­பட்­டுள்­ளனர். பயங்­க­ர­வா­தத்­திற்கு துணை­போ­காத பல அப்­பா­விகள் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். இலங்கைத் தமிழர் பல ஆண்­டு­க­ளாக அனு­ப­வித்த அனு­ப­வங்­களை முஸ்­லிம்கள் இப்­போது அனு­ப­வித்து வரு­கின்­றனர்.இவ்­வ­ரங்கு பயங்­க­ர­வாதம் தழைப்­ப­தற்­கான மற்­றொரு விளை­நி­லத்தை உரு­வாக்க வேண்டாம் என அர­சாங்­கத்­திற்கும் ஊட­கங்­க­ளுக்கும் வேண்­டுகோள் விடுக்­கின்­றது.

இவ்­வ­ரங்கு, அதே­ச­மயம், தீவிர பழ­மை­வா­தத்தை ஊடு­ருவ அனு­ம­தித்­த­தற்­கா­கவும்,தவ­றாக வழி­ந­டத்­தப்­பட்ட ஒரு­சில இளை­ஞர்கள் ‘இஸ்­லா­மிய அர­சின்’­வெ­றுப்பு சித்­தாந்­தத்தை நோக்கி நகர்­வ­தை­யிட்டு விழிப்­புடன் இருக்கத் தவ­றி­ய­மைக்­கா­கவும், இஸ்­லாத்தை பின்­பற்றும் தம்­ம­வரை அமைதி வழியில் சக­ஜீ­வன சக­வாழ்வில் நாட்­டம்­கொள்ளச் செய்­வ­தற்­கான வழி­வ­கை­களைக் கண்­ட­றியத் தவ­றி­ய­மைக்­கா­கவும் முஸ்லிம் சமூகம் தன்னை இப்­பா­ரிய விலையைக் கொடுத்த பின்­னா­வது சுய­வி­மர்­சன ரீதி­யாக உள்­நோக்கி பார்க்­க­வேண்­டு­மென வேண்­டுகோள் விடுக்­கின்­றது.

3)கடி­ன­மான நிலை­மை­களில் கடு­மை­யான நட­வ­டிக்­கைகள் தேவைப்­ப­டு­கின்­றன.

இவ்­வ­ரங்கு, இலங்கை அர­சாங்­கத்­திடம் சட்­டத்­தையும் ஒழுங்­கையும் நிலை­நாட்டும் அதே­ச­மயம் நாட்டில் வாழும் அனை­வரும் சம­மான உரி­மை­யை­யுடன் அமை­தி­யாக வாழக்­கூ­டிய சூழலை உரு­வாக்­கு­மாறு வேண்­டு­கின்­றது. பிறர்­மீது மேலா­திக்­கத்தை திணிக்­கின்ற தீவி­ர­தே­சி­ய­வா­தத்­திற்கும் இவ்­வ­கை­யான பயங்­க­ர­வா­தத்­தினைப் புரிந்த ஐஎஸ்சின் சித்­தாந்­தத்­திற்கும் இடையே வித்­தி­யாசம் எது­வும்­கி­டை­யாது என்­பதை வலி­யு­றுத்தி சொல்ல விரும்­பு­கி­றது. சட்­டத்­தின்முன் அனை­வரும் சமம் என்ற கொள்கை உறு­தி­யாகப் பின்­பற்­றப்­ப­டு­வ­தோடு எந்த ஒரு­த­னி­ந­பரோ அல்­லது சமூ­கமோ சட்­டத்­திற்கு அப்­பாற்­பட்­ட­வ­ரா­கவோ அல்­லது கூடு­த­லான சமத்­துவம் கொண்­ட­வ­ரா­கவோ நடத்­தப்­ப­டு­வதை அனு­ம­திக்கக் கூடாது. தற்­போது நடை­மு­றையில் உள்ள கடு­மை­யான சட்­டங்­க­ளுக்குள் மேலும் கடு­மை­யான சட்­டங்­களை உரு­வாக்கி சிவில் உரி­மை­களை பறிப்­ப­தற்கு தற்­போ­தைய நிலை­மையை பயன்­ப­டுத்தக் கூடாது. ஆனால் அரசு இதனை ஒரு வாய்ப்­பாக பயன்­ப­டுத்­து­கி­றது என சந்­தே­கிக்க வேண்­டி­யுள்­ளது.

இவ்­வ­ரங்கு, இன்­றைய பிரச்­சினை வெறு­மனே சட்டம் ஒழுங்கு தொடர்­பான ஒரு­வி­டயம் மாத்­திரமல்ல, அது மிகவும் ஆழ­மான பரி­மா­ணங்­களைக் கொண்­டது எனக் கரு­து­கின்­றது. ஈஸ்டர் ஞாயிறு படுகொலைக்குப் பின்னால் இருந்த ஈர்ப்புக்காரணி (pull factor) IS இன் சித்தாந்தமே எனினும் அதன் உந்துகாரணியாக (push factor) பெரும்பான்மை தீவிர-தேசியவாதமே செயற்பட்டது என்பதனை வசதியாக மறந்துவிடக்கூடாது. தீவிரவாதம் தீவிரவாதத்தையே வளர்க்கும். தீவிரவாதத்தால் பயங்கரவாதத்தை தோற்கடிக்க முடியாது.

எனவே, அனைத்து சிவில் சமூகங்களுக்கும் இவ்வரங்கு பின்வரும் வேண்டுகோள்களை விடுக்கிறது:

i. ஒவ்வொரு பொலிஸ் பிரிவிலும் பல்-லின சமாதான குழுக்களை (Peace Corps) உருவாக்குங்கள். மதத் தலைவர்களையும் சமூகத் தலைவர்களின் பிரதிநிதிகளையும் உள்ளடக்கியதாக இக்குழு உருவாக்கப்படல் வேண்டும். இலங்கையின் வடக்குப் பகுதியில் 70 களின் பிற்பகுதியில் மிகக் காத்திரமான பாத்திரத்தை வகித்த நீதிக்கும் சமத்துவத்திற்குமான இயக்கத்தின் (MERGE) அனுபவத்தை பயன்படுத்திக் கொள்ளமுடியும்.

ii. பதற்றம் நிலவும் பகுதிகளில் வன்முறைகளிலிருந்து மக்களை பாதுகாப்பதற்கும்,துரிதமாக செயல்பட்டு மோதல்களையும் பதற்றங்களையும் தணிப்பதற்கும், சட்டத்தையும் ஒழுங்கையும் பேணுவதற்கும் சட்ட – அமுலாக்க அதிகாரிகளுக்கு உதவுவதற்கும் நல்லிணக்கக் குழுக்களை (reconciliation committees) அமையுங்கள் எனக் கேட்கிறது.

இவ்வரங்கு ஆளை ஆள்குற்றம் சுமத்துவதை நிறுத்தி மீண்டும் இத்தகைய சம்பவங்கள்இடம்பெறுவதைதடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டுமென வலியுறுத்துகிறது.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.