முஸ்லிம்கள் தம்மைத்தாமே சுயவிசாரணை செய்து கொள்ள வேண்டும்

அமைச்சர் ரவூப் ஹக்கீம்

0 959

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வரும், நகர திட்­ட­மிடல் நீர் வழங்கல் மற்றும் உயர்­கல்வி அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம் “டெய்லி மிரர்” ஆங்­கில பத்­தி­ரி­கைக்கு (07.05.2019) அளித்த நேர்­கா­ணலின் தமி­ழாக்கம்.

Q இனங்­க­ளுக்­கி­டை­யி­லான நல்­லி­ணக்­கத்தை பாதிக்கும் அண்­மைக்­கால சம்­ப­வங்கள் பற்றி என்ன கரு­து­கி­றீர்கள்?

மூர்க்­கத்­த­ன­மான, கொடிய, ஆழங்­கா­ண­வி­ய­லாத நாச­கார சக்­திகள் முஸ்­லிம்கள் மத்­தியில் ஒரு­வி­த­மான தீவி­ர­வா­தத்தின் மீதான நம்­பிக்­கையை ஏற்­ப­டுத்த எத்­த­னித்­த­தாக யூகங்கள் உள்­ளன. அவர்கள் அறவே உணர்­வு­பூர்­வ­மற்ற பாரிய கொடு­மை­களை இழைத்­தி­ருக்­கின்­றார்கள். அவ்­வா­றான மிரு­கங்கள் எங்கள் மத்­தியில் இருந்­ததை எங்­களால் இன்னும் நம்­பவே முடி­ய­வில்லை. முஸ்­லிம்கள் எப்­பொ­ழு­துமே சந்­தேகக் கண்­ணோடு பார்க்­கப்­பட்­டதைப் பற்றி அவ்­வப்­போது கவ­லை­ய­டைந்­தி­ருந்­தார்கள். அவர்­களின் சந்­தே­கங்­களில் நம்­ப­கத்­தன்மை இருப்­பது இப்­போது புலப்­ப­டு­கின்­றது. நல்ல மனம் கொண்ட முஸ்லிம் அல்­லா­த­வர்கள் கூட எமது சமூ­கத்தை சந்­தே­கத்­தோடு நோக்கத் தொடங்கி விட்­டனர். இது மிகவும் துர­திஷ்­ட­மா­னது. தீவி­ர­வா­தத்தின் மீதான எந்­த­வி­த­மான அறி­குறி தென்­பட்­டாலும் அதன் மீது ஒன்­று­பட்டு கவ­னக்­கு­விப்பை ஏற்­ப­டுத்­தினால் இந்த பிரச்­சி­னையைத் தாண்­டு­வ­தற்கு எங்­களால் முடியும்.

முஸ்லிம் சமூ­கத்தைப் பொறுத்­த­வரை எங்கள் மத்­தியில் உள்ள தனி­மைப்­ப­டுத்­தப்­பட்ட போக்கைக் கொண்­ட­வர்­களை மையப்­ப­டுத்தி நாங்கள் சுய­வி­சா­ரணை செய்ய வேண்­டிய அவ­சி­ய­மி­ருக்­கின்­றது.

Q பெரு­ந­கர மற்றும் மேல்­மா­காண அபி­வி­ருத்தி அமைச்சர் பாட்­டலி சம்­பிக்க ரண­வக்க, முஸ்­லிம்­களை தீவி­ர­வா­தத்­தி­லி­ருந்து களைய வேண்­டு­மென்று கேட்­டி­ருக்­கின்றார். இத­னோடு நீங்கள் உடன்­ப­டு­கின்­றீர்­களா?

ஆரம்­பத்­தி­லி­ருந்தே அமைச்சர் சம்­பிக்க இந்த விட­யத்தில் ஒரு வித்­தி­ய­ாச­மான நிலைப்­பாட்டைக் கொண்­டி­ருக்­கிறார். இதி­லி­ருந்து எதனை விளங்கிக் கொள்ள வேண்­டு­மென்றால், இஸ்­லாத்தின் போத­னை­க­ளுக்கு தவ­றான அர்த்­தத்தைக் கற்­பிக்க முயற்­சித்த புத்தி பேத­லித்த சிலரின் முயற்­சியின் பெறு­பே­றா­கத்தான் இந்த தீவி­ர­வாதம் தலை­தூக்­கி­யி­ருக்­கின்­றது. கடந்த பல வரு­டங்­க­ளாக இந்த விவ­கா­ரத்தில் எங்­க­ளது சமூ­கத்­துக்குள் சுய­வி­சா­ர­ணையில் ஈடு­பாடு கட்­டப்­பட்டு வந்­துள்­ளது. இந்த விட­யத்தில் நாங்கள் பட்ட கஷ்டம் போதும். நடு­நி­லை­யான பாதை­யி­லி­ருந்து சற்­றேனும் பிறழ்ந்து செல்லும் பேர்­வ­ழிகள் எங்கு அடி­யெ­டுத்து வைக்­கின்­றார்கள் என்­பதை அறிந்து அவர்­களை வெளிப்­ப­டை­யா­கவே எடுத்துக் காட்­டு­வ­தற்கு நாம் சுய­மா­கவே முன்­வந்­தி­ருந்தோம். சமூகம் எப்­பொ­ழு­துமே விழிப்­பாக இருக்க வேண்டும் என்­ப­துதான் எங்­க­ளது தேவை­யாக இருந்­தது. அவ்­வா­றான விட­யங்­களை நாம் சட்­டத்­தையும், ஒழுங்­கையும் நிலை­நாட்­டு­வோரின் கவ­னத்­திற்கு கொண்டு வந்­தி­ருந்தோம். மனப்­பூர்­வ­மாக கூறு­வ­தானால் ஒவ்­வொ­ரு­வ­ருக்கும் குற்ற உணர்வு ஏற்­ப­டத்தான் செய்­கின்­றது.

நாங்கள் கூட்­டாக முயற்­சித்தால் இதனை வேரோடு கிள்ளி எறி­யலாம். இந்த பித்­துப்­பி­டித்த, புத்­தி­பே­த­லித்த கும்­பலை எந்த ஒரு நப­ரா­வது ஆத­ரிக்­கப்­போ­வ­தில்லை.

Q நீங்கள் இந்த கேள்­வியை சமூ­கத்தின் மத்­தியில் எழுப்­பி­ய­தாக கூறு­கின்­றீர்கள். உங்­க­ளது பேச்சைக் கேட்­காமல் சமூ­கத்­தினால் கைவி­டப்­பட்­டு­விட்­டீர்கள் என்று நீங்கள் நினைக்­கின்­றீர்­களா?

வெளி­யி­லி­ருந்து விமர்­ச­னங்கள் வரும் பொழுது கார­ண­மில்­லாமல் இலக்கு வைக்­கப்­ப­டு­வ­தாக யூகிக்க முற்­ப­டு­கின்றோம். பின்னர் எங்­க­ளது சமய நடை­மு­றை­க­ளுக்­கான உண்­மை­யான காரண காரி­யங்கள் பிழை­யாக விளங்கிக் கொள்­ளப்­ப­டு­கின்­றன. சில உண்­மை­யி­லேயே சமயம் சார்ந்­தவை அல்ல, அவை கலா­சாரம் சார்ந்­தவை. துர­திஷ்­ட­வ­ச­மாக சில அந்­நிய கலா­சார மர­புகள் இறுக்­க­மான சமய சித்­தாந்­த­மென்ற வகையில் தழு­வப்­பட்­டது.

Q எவை எனக் கூற­மு­டி­யுமா?

பல்­லின சூழலில் வாழ்­கின்ற பொழுது, மற்­ற­வர்கள் எங்­களைப் பற்றி என்ன நினைக்­கின்­றார்கள் என்­பதில் கவ­ன­மாக இருக்க வேண்டும். கலா­சார ரீதி­யாக நாங்கள் மன்­னிப்­புக்­கோரத் தேவை­யில்லை. இஸ்லாம் பெண்­க­ளுக்கு மிகவும் கண்­ணி­ய­மான இடத்தை அளித்­துள்­ளது. இதை நாங்கள் மேலா­திக்கம் செலுத்­து­வ­தா­கவும் அவர்கள் மீது சில கட்­டுப்­பா­டு­களை விதிப்­ப­தா­கவும் கொள்­ப­வர்கள் இருக்­கின்­றார்கள். ஆனால் இது அவர்­களின் சொந்த விருப்­பத்­திற்கு விடப்­பட்­டுள்­ளது.

எனது உம்மம்மாவும், தாயாரும் ஆடை அணிந்த விதம் வேறு. காலப்­போக்கில் கலா­சார அம்­சங்­க­ளோடு வெளியில் இருந்து வந்த சில பழக்க வழக்­கங்கள் ஆடை ஆணி­க­ளிலும் இடம்­பி­டித்துக் கொண்­டன. அது அவ­ரவர் விருப்­பத்தைப் பொறுத்­தது. தங்­க­ளுக்கு தேவை­யான வகையில் இவற்றை யாரும் திணிக்க முடி­யாது. நாங்கள் மிக முக்­கி­ய­மான சுய­வி­சா­ர­ணையை மேற்­கொள்ள வேண்டும். நாங்கள் சுய­மாக தீர்­மா­னிக்க வேண்டும். எவரும் சமூ­கத்தின் மீது கருத்­துக்­களை வலிந்து திணிக்கக் கூடாது. மார்க்­கத்தின் அடிப்­படை அம்­சங்­க­ளுக்கு மாற்­ற­மில்­லா­ம­லி­ருந்தால் பொருத்­த­மான வகையில் ஆடைகள் அணி­வதில் நிர்ப்­பந்­த­மில்லை. சிலர் அதன் உச்­சத்­திற்கே செல்­கின்­றனர். சந்­தே­கங்­களும் அச்­சமும் அநே­கரை பாதிக்­கின்­றன. ஒவ்­வொ­ரு­வ­ருக்கும் பொருத்­த­மா­ன­தாக சுய­மா­கவே தீர்­மா­னித்து ஏற்றுக் கொள்­ளத்­தக்க சில மாற்­றங்­களை செய்து கொள்­வது நல்­லது.

Q பொது­வாக முஸ்­லிம்கள் மத்­தியில் குறிப்­பாக கிழக்கு மாகாண முஸ்­லிம்கள் மத்­தியில் தீவி­ர­வாதம் பற்றி பாரா­ளு­மன்­றத்­திலும், வெளி­யிலும் கேள்வி எழுந்­த­பொ­ழுது அர­சாங்கம் அதனை பார­தூ­ர­மாக எடுத்துக் கொள்­ள­வில்லை. அது பற்றி என்ன நினைக்­கின்­றீர்கள்?

சம­யத்தின் பெயரால் ஏதா­வது செய்­யப்­படும் பொழுது எந்த அர­சாங்­கமும் கட்­டுப்­பா­டு­களை விதிப்­ப­தற்கு முன்­வ­ரு­வ­தில்லை. ஆட்­சி­யாளர் சமய சுதந்­தி­ரத்தில் தலை­யி­டாமல் எச்­ச­ரிக்­கை­யாக நடந்து கொள்­கி­றார்கள். பிரான்ஸில் புர்கா தடை செய்­யப்­பட்­ட­போது ஐ.நா சபை கூட அதனை மனித உரிமை மீறல் என்­றது. அது முஸ்லிம் பெண்­க­ளுக்­கான ஒரு விருப்பத் தெரிவு. ஆனால் பிரஞ்சு அர­சாங்கம் அதனை வேறு வித­மாக எண்­ணி­யது. இஸ்­லா­மோ­போ­பியா என்ற பீதி மனப்­பான்மைச் சித்­தாந்தம் உல­க­ளா­விய ரீதியில் இருந்து வரு­கின்­றது. அதனை ஒரு­வ­ருக்­கொ­ருவர் பரி­மாறிக் கொள்­கி­றார்கள். பய­மென்­பது அற்­பு­த­மா­னது. ஏனை­ய­வர்­க­ளுக்கு தேவைப்­ப­டு­கின்­றது என்­ப­தற்­காக எங்­க­ளது சமய போத­னை­களில் நாங்கள் சம­ர­சத்­திற்கு இணங்­கி­விட முடி­யாது. வெளி­யி­லி­ருந்து நோக்கும் பொழுது நாங்கள் ஓர­ளவு நெகிழ்வுத் தன்­மையைக் கொண்­டி­ருக்­கவும் வேண்டும். சிறிய மாற்­றங்­களை செய்து கொள்ள வேண்­டிய அவ­சி­யத்தை நாங்கள் புரிய வைக்க முயற்­சிக்­கவும் வேண்டும்.

எங்­களில் பெரும்­பா­லா­ன­வர்கள் நடு­நி­லை­யாகச் சிந்­திப்­ப­வர்கள். தீவிரப் போக்­கு­டை­ய­வர்கள் மாற்­றங்கள் ஏற்­ப­டுத்­தப்­பட்டால் அவற்றை எதிர்த்து நிற்­பார்கள். நீண்­ட­கால வாழ்க்கை ஓட்­டத்தில் நடை, உடை பாவ­னை­களில் புதிய தோற்­றப்­பா­டுகள் உட்­பு­கு­வது தவிர்க்க முடி­யா­த­தா­கி­விட்­டது.

Q நீங்கள் எதைச் சொன்ன போதிலும் பொதுத்­த­ளங்­களில் இந்தக் கேள்வி எழுப்­பப்­படும் போதெல்லாம் முஸ்லிம் அமைப்­புக்கள் தீவி­ர­வாத சக்­திகள் இல்­லை­யென்றே கூறி­வ­ரு­கின்­றன. சமூ­கம்தான் இத்­த­கைய அமைப்­பு­களை சரி­வர இனங்­காண்­ப­தற்­கான தன்­மையை கொண்­டுள்­ளன. ஏன் அவ்­வாறு நடந்து கொள்­கின்­றன?

மறுத்­துக்­கொண்டே காலத்தைக் கடத்த வேண்­டு­மென்ற நோக்கம் கிடை­யாது. தெரிந்து கொண்டே மறுப்­பது யாருக்கும் உத­வாது. மூர்க்­கத்­த­னத்தை நம்பி நடுக்கம் எடுத்­தி­ருக்­கின்­றது. மனி­தா­பி­மா­ன­மற்ற ஒரு தீவி­ர­வாதக் கும்பல் சம­யத்தின் பெயரை பயன்­ப­டுத்தி கொடூ­ர­மான குற்­றங்­களை இழைப்­ப­தற்கு முன்­வந்­தது வியப்பில் ஆழ்த்­தி­யி­ருக்­கின்­றது. விரல் விட்டு எண்­ணக்­கூ­டிய புத்தி பேத­லித்த சிலர் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்டு மூளைச்­ச­லவை செய்­யப்­பட்­டுள்­ளனர். அவர்­க­ளுக்கு அர­சியல் ஞானமும் கிடை­யாது. அவர்­களைப் பின்­பற்ற எவ­ருமே முன்­வர மாட்­டார்கள். துளி­ய­ளவும் ஆத­ர­வின்றி வெற்­றி­ட­மொன்றில் அவர்­களால் சீவிக்க முடி­யாது. ஐ.எஸ்.­ஐ.எஸ் கூட இந்த செய­லுக்­கான கார­ணத்தைக் குறிப்­பி­ட­வில்லை.

Q தீவி­ர­வாதம் முற்­றிப்போய் எடுத்த மாத்­தி­ரத்­தி­லேயே தற்­கொலை செய்து வீணாக உயிரை மாய்த்துக் கொண்­டி­ருக்க முடி­யாது. அவர்கள் நீண்ட கால­மாக திட்டம் தீட்­டியே அவ்­வாறு செய்­துள்­ளனர். அவர்­க­ளுக்கு வெவ்­வேறு தளங்­களில் இரா­ணுவப் பயிற்சி வழங்­கப்­பட்­டுள்­ளது. இவ்­வா­றி­ருக்க அதனைக் கண்­டு­பி­டிக்க புல­னாய்­வுத்­துறை தவ­றி­யி­ருப்­ப­தாக உணர்­கி­றீர்­களா?

இவர்­க­ளுக்கு உள்­நாட்டில் பயிற்சி முகாம்கள் இருந்­த­தாக நான் முதல் தட­வை­யாக கேள்­விப்­ப­டு­கின்றேன். எனக்கு அது ஓர் ஆச்­ச­ரி­ய­மான செய்­தி­யாகும். அவ்­வா­றானால் பாரிய தவறு நேர்ந்­தி­ருக்­கின்­றது. அதில் எந்தச் சந்­தே­கமும் இல்லை.

Q உள­வுத்­து­றையை பல­வீ­னப்­ப­டுத்­தி­ய­தாக அர­சாங்­கத்தை நீங்கள் குற்றம் சாட்­டு­கின்­றீர்­களா?

ஒரு கட்­டத்தில் உள­வுத்­துறை 500 பேருக்கு மேற்­பட்­ட­வர்­களை கூட்­டாகக் கொண்­டி­ருந்­தது. அவர்­க­ளுக்கு மத்­தியில் சில கூழ்­முட்­டைகள் இருந்­தி­ருக்­கலாம். அவர்கள் தங்­க­ளது அதி­கா­ரத்­தையும் ஆற்­ற­லையும் பயன்­ப­டுத்­தியும் இருக்­கலாம். அவ­ச­ர­கால அதி­கா­ரத்தை முறை­கே­டாக பயன்­ப­டுத்­தக்­கூ­டாது. உள­வுத்­து­றையில் சரி­யான கண்­கா­ணிப்பு இல்­லா­விட்டால் சிலர் எல்லைக் கோட்டை தாண்­டி­வி­டு­வார்கள். அவ்­வா­றான நிலை­மையில் அவர்கள் விப­ரீ­த­மான காரி­யங்­களைப் புரி­வார்கள். எல்­லா­வற்­றிற்கும் மேலாக இலங்­கையின் உள­வுத்­துறை முஸ்லிம் சமூ­கத்தின் சில உன்­ன­த­மான அதி­கா­ரி­க­ளையும் தன்­ன­கத்தே கொண்­டி­ருக்­கின்­றது. முஸ்லிம் சமூகம் சிறந்த புல­னாய்­வா­ளர்­களை தாய் நாட்­டிற்கு ஈன்­ற­ளித்­தி­ருக்­கின்­றது. அவர்­களில் அநேகர் தங்­க­ளது இன்­னு­யிர்­க­ளையே தியாகம் செய்­தி­ருக்­கின்­றார்கள் என்றால் மிகை­யா­காது. அது மறக்க முடி­யாது. தேசத்­திற்கு நாங்கள் செய்­துள்ள தியாகம் ஏனை­ய­வர்கள் செய்­ததை விட இரண்­டாந்­த­ர­மா­ன­தல்ல. நிச்­ச­ய­மாக மீளவும் இவ்­வா­றான தாக்­கு­தல்கள் நடை­பெ­றாமல் நாங்கள் தடுக்க வேண்டும். முஸ்­லிம்கள் இப்­பொ­ழுது மிகவும் பாதிப்­புக்­குள்­ளாகி இருக்­கி­றார்கள். அவர்கள் அச்­சத்தின் மத்­தியில் வாழ்­கின்­றனர். இந்த விட­யத்தை கையாள்­வதில் பேராயர் மல்கம் ரஞ்ஜித் நடந்து கொண்ட விதத்­தை­யிட்டு நாங்கள் நன்றி செலுத்த கட­மைப்­பட்­டுள்ளோம்.

Q விடு­தலைப் புலி­களின் பயங்­க­ர­வா­தத்­தோடு தமிழ் சமூகம் சில கஷ்­டங்­களை சந்­திக்க நேர்ந்­தது. அந்த மக்கள் தொடர்ச்­சி­யான தேடு­த­லுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டார்கள். இதே கதி முஸ்­லிம்­க­ளுக்கும் நேரு­மென நீங்கள் அஞ்சுகின்றீர்களா?

இதில் ஓரளவு சிக்கலிருக்கின்றது. எங்களது அன்றாட வாழ்வில் இவ்வாறான அச்ச உணர்வு மேலிடுவதற்கு நாங்கள் இடமளிக்கலாகாது. இதில் மிகவும் பொறுப்பு வாய்ந்த விதத்தில் நடந்து கொள்ள வேண்டிய கடப்பாடு பாதுகாப்புத் தரப்பினருக்கும் இருக்கின்றது. அவசரகால அதிகாரங்கள் நேர்சீராக கையாளப்பட வேண்டும். துப்புத்துலக்கும் விடயத்தில் அது மிகவும் அவசியமானது.

Q சில முஸ்லிம் நாடுகளிலிருந்து இந்தத் தீவிரவாத சக்திகளுக்கு நிதி வழங்கப்பட்டதாக குற்றஞ்சாட்டப்படுகின்றது. இது பற்றிய உங்கள் கருத்து என்ன?

வெளிநாட்டு நிதி முஸ்லிகளுக்கு மட்டுமல்லாது ஏனைய சமயத்தினருக்கும் கிடைக்கின்றது. எல்லா சமயத்தினரும் இவ்வாறான நிதியைப் பெறுகின்றனர். இவ்வாறான நிதி தீவிரவாத கருத்தோட்டம் உடையவர்களை சென்றடைகின்றதா என்பது தான் இங்கு முக்கியமானது. ஒவ்வொரு நாடும் நுண்ணோக்கியினூடாக உற்று நோக்கப்படுகின்றது. பயங்கரவாதத்துக்கான நிதி விவகாரம் பற்றிய சர்வதேச சாசனங்களும் சட்டவரைபுகளும் உள்ளன. முறையான வங்கி வலைப்பின்னலின் மேற்பார்வையும் உள்ளது. நாங்கள் கண்மூடித்தனமாக வேறு நாடுகளை குற்றம் சாட்ட முடியாது. நன்கொடை தர்ம நிறுவனங்களின் மீது கூட சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.