முஸ்லிம்களின் வர்த்தகம் வெகுவாக பாதிப்பு

0 788

நாட்டில் கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்­பெற்ற குண்டுத் தாக்­கு­தல்­களைத் தொடர்ந்து முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வெறுப்­பு­ணர்வு அதி­க­ரித்­துள்ள நிலையில், இதன் கார­ண­மாக முஸ்­லிம்­களின் வர்த்­தக நட­வ­டிக்­கை­களும் வெகு­வாக பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

குறிப்­பாக சிங்­கள மக்கள் செறிந்து வாழும் பகு­தி­க­ளி­லுள்ள முஸ்லிம் வியா­பார நிலை­யங்­களைப் பகிஷ்­க­ரிக்­கு­மாறும் முஸ்­லிம்­க­ளுடன் வர்த்­தக கொடுக்கல் வாங்­கல்­களை மேற்­கொள்ள வேண்டாம் எனவும் பகி­ரங்க பிர­சா­ரங்­களும் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன.

இந் நிலையில் வர்த்­தக நிலையம் ஒன்றின் முன்­பாக ”இந்த விற்­பனை நிலை­யத்தில் இதன் பின்னர் எந்த முஸ்லிம் நிறு­வ­னத்­திற்கும் உரிய பொருட்கள் விற்­பனை செய்­யப்­ப­ட­மாட்­டாது” என்றும் ”எந்த முஸ்லிம் நிறு­வ­னத்­தையும் சேர்ந்த விற்­பனை பிரதிநிதிகள் எவரும் அவர்­களின் பொருட்­களை எடுத்து வர வேண்டாம்” என்றும் எழு­தப்­பட்ட அறி­வித்­தல்கள் ஒட்­டப்­பட்­டுள்­ளன. இதன் புகைப்­ப­டங்கள் சமூக வலைத்­த­ளங்­களில் வெளி­யி­டப்­பட்­டுள்­ளன. எனினும் இந்த அறி­வித்தல் எந்தப் பிர­தே­சத்தில் ஒட்­டப்­பட்­டுள்­ளது என்­பது தெரி­ய­வ­ர­வில்லை.

இதற்­கி­டையில் வெளி­யூர்­களில் வர்த்­தக நிலை­யங்­களை நடாத்தும் காத்­தான்­குடி பிர­தே­சத்தைச் சேர்ந்த வர்த்­த­கர்­களும் பலத்த அச்­சு­றுத்­தல்­களை எதிர்­கொண்­டுள்­ள­தாக சுட்­டிக்­காட்­டப்­ப­டு­கி­றது. வெளி­யூர்­களில் வாட­கைக்கு கடை­களைப் பெற்று வர்த்­த­கத்தில் ஈடு­படும் காத்­தான்­குடி வர்த்­த­கர்­களை, குறித்த கடை­க­ளி­லி­ருந்து உட­ன­டி­யாக வெளி­யே­று­மாறு அதன் உரி­மை­யா­ளர்கள் கேட்டுக் கொண்­டுள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. அத்­துடன் காத்­தான்­கு­டியைச் சேர்ந்த சுமார் 200 அங்­காடி வியா­பா­ரிகள் வழ­மை­போன்று வெளி­யூர்­க­ளுக்குச் சென்று வியா­பா­ரத்தில் ஈடு­பட முடி­யா­துள்­ள­தாக சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

மேலும் கிழக்கு மாகா­ணத்தில் முஸ்­லிம்­க­ளுடன் வர்த்­தக தொடர்­பு­களை மேற்­கொள்ள வேண்டாம் எனவும் முஸ்லிம் பகு­தி­க­ளுக்கு வர்த்­தக நட­வ­டிக்­கை­க­ளுக்குச் செல்ல வேண்டாம் எனவும் ஒரு குழு­வினர் துண்டுப் பிர­சு­ரங்கள் மற்றும் ஒலி­பெ­ருக்கி அறி­வித்தல் மூலம் கேட்டுக் கொண்­டுள்­ளனர்.

இதற்­கப்பால் நாட­ளா­விய ரீதியில் முஸ்லிம் சார­தி­க­ளுக்குச் சொந்­த­மான முச்­சக்­கர வண்­டி­களில் ஏறு­வ­தற்கு பெரும்­பான்மை இன மக்கள் மறுப்­ப­தா­கவும் ஏலவே வழங்­கப்­பட்ட வர்த்­தக நட­வ­டிக்­கை­க­ளுக்­கான ஓடர்­களை இரத்துச் செய்­துள்­ள­தா­கவும் பாதிக்­கப்­பட்ட முஸ்லிம் வர்த்­த­கர்கள் தெரி­விக்­கின்­றனர். சில தினங்­க­ளுக்கு முன்னர் கொழும்­பி­லுள்ள பிர­பல முஸ்லிம் கேக் தயா­ரிப்பு நிபுணர் ஒருவரிடம் நிகழ்வு ஒன்றுக்காக முன்கூட்டியே ஓடர் செய்யப்பட்ட 500 கேக் துண்டுகளுக்கான கேள்வியை அவை தயாரிக்கப்பட்ட பின்னர் வாடிக்கை யாளர் இரத்துச் செய்துள்ளதாக குறித்த பெண் கேக் தயாரிப்பு நிபுணர் தனது டுவிட்டர் கணக்கில் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.