மத்ரஸா,அரபு கல்லூரிகளை கல்வி அமைச்சின் கீழேயே கொண்டு வரவேண்டும்

ஓமல்பே சோபித தேரர்

0 682

மத்­ரஸா மற்றும் அரபுக் கல்­லூ­ரி­களின் நிர்­வாக நட­வ­டிக்­கை­களை தனி­யான சபை­யொன்­றிடம் ஒப்­ப­டைப்­ப­தற்­கான நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன.  இது உடன் நிறுத்­தப்­பட வேண்டும். அரபு பாட­சா­லைகள் அனைத்­தையும் கல்வி அமைச்சின் கீழ் கொண்டு வரு­வ­தற்கு அரசு உட­ன­டி­யாக நட­வ­டிக்­கை­களை எடுக்க வேண்டும் என கலா­நிதி ஓமல்பே சோபி­த­தேரர் தெரி­வித்தார்.

மத்­ரஸா பாட­சா­லைகள் மற்றும் அரபுக் கல்­லூ­ரிகள் தொடர்பில் ஊட­கங்­க­ளுக்கு கருத்துத் தெரி­விக்­கை­யிலே ஓமல்பே சோபி­த­தேரர் இவ்­வாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில்; “மத்­ரஸா மற்றும் அரபுக் கல்­லூ­ரி­களின் நிர்­வாக நட­வ­டிக்­கை­க­ளுக்கும், கண்­கா­ணிப்பு நட­வ­டிக்­கை­க­ளுக்கும் தனி­யான சபை­யொன்­றினை நிறு­வு­வ­தற்கு தனி­யான சட்­ட­மொன்று இயற்றிக் கொள்­ளப்­ப­ட­வுள்­ள­தாகத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இவ்­வா­றான தனி­யான சபை­யொன்­றினை நிறுவி வாத, விவா­தங்கள் நடத்தி அவற்றின் கண்­கா­ணிப்பு நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க வேண்­டிய அவ­சி­ய­மில்லை.

அர­சியல் யாப்­புக்­க­மைய இந்­நாட்டு மக்­களின் கல்வி நட­வ­டிக்­கைகள் கல்வி அமைச்சின் ஊடா­கவே முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. அதனால் அரபுப் பாட­சா­லைகள் கல்­வி­ய­மைச்சின் கீழ் கொண்டு வரப்­ப­ட­வேண்டும். எமது நாட்டின் ஏனைய கல்வி நிறு­வ­னங்கள் இயங்­கு­வது போன்று கல்­வி­ய­மைச்சின் சட்ட திட்­டங்­க­ளுக்கு அமைய மத்­ரஸா மற்றும் அரபுக் கல்­லூ­ரிகள் இயங்­க­வேண்டும். அதனால் கல்வி அமைச்சின் அதி­கா­ரி­களின் கண்­கா­ணிப்­புக்குள் இந்தப் பாட­சா­லை­களை உள்­ளீர்ப்­ப­தற்கு அரசு உட­ன­டி­யாக நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க வேண்டும்.

இன்­றைய சூழ்­நி­லையில்  குழுவொன்று நியமிக்கத் தேவையில்லை. தனியான சட்டமொன்றும் தேவையில்லை. மத்ரஸா மற்றும் அரபுக் கல்லூரிகள் அனைத்தும் கல்வி அமைச்சின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும்” என்றார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.