மியன்மார் சிறையிலிருந்த ஊடகவியலாளர்கள் விடுதலை

0 616

ரோஹிங்ய படு­கொ­லை­களை வெளிப்­ப­டுத்­தி­ய­மைக்­காக மியன்­மாரில் சிறையில் அடைக்­கப்­பட்­டி­ருந்த ரொயிட்டர் ஊட­க­வி­ய­லா­ளர்கள் இரு­வரும் 500 நாட்­க­ளுக்கும் மேற்­பட்ட காலம் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்­ததன் பின்னர் விடு­விக்­கப்­பட்­டுள்­ளனர்.

மியன்மார் இரா­ணு­வத்­தி­னரால் 10 ரோஹிங்ய முஸ்­லிம்கள் கொல்­லப்­பட்­டதை அறிக்­கை­யிட்­டதைத் தொடர்ந்து கடந்த வருடம் டிசம்பர் மாதம் தொடக்கம் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த ரொயிட்டர் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளான 32 வய­தான வா லோன் மற்றும் 28 வய­தான கியவ் ஓஒ ஆகியோர் மீது நாட்டின் உத்­தி­யோ­க­பூர்வ இர­க­சிய சட்­டத்­தினை மீறி­ய­தாக மியன்­மா­ரினால் குற்றம் சாட்­டப்­பட்­டி­ருந்­தது.

கடந்த ஏப்ரல் மாதம் 17 ஆம் திகதி ஆரம்­ப­மான பாரம்­ப­ரிய புது­வ­ரு­டத்தைக் கொண்­டாடும் வகையில் ஜனா­தி­ப­தியின் மயின்ட்­டினால் வழங்­கப்­பட்ட மூன்­றா­வது சுற்று பொது மன்­னிப்பின் கீழ் 6,520 கைதி­க­ளுடன் குறித்த ஊட­க­வி­ய­லா­ளர்கள் இரு­வரும் விடு­விக்­கப்­பட்­டனர்.

வா லோனின் மனைவி பான் ஈ மொன் ஊட­க­வி­ய­லா­ளர்கள் விடு­விக்­கப்­பட்­டதை உறு­திப்­ப­டுத்­தினார்.  நாம் தற்­போது அவர்­க­ளு­ட­னேயே இருக்­கின்றோம், அவர்கள் விடு­விக்­கப்­பட்­டுள்­ளனர் என தொலை­பேசி மூலம் அவர் தெரி­வித்தார்.

2017 ஆம் ஆண்டு மியன்­மாரின் ராக்கைன் மாநி­லத்தில் 10 ரோஹிங்ய ஆண்கள் கொல்­லப்­பட்­டமை தொடர்பில் தக­வல்­களைச் சேக­ரித்­ததன் மூலம் பழை­மை­வாய்ந்த சட்­டத்தை மீறி­ய­மைக்கு 2017 டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்ட இருவருக்கும் 2018 செப்டம்பர் மாதம் தலா ஏழு வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.