முஸ்லிம் மக்களை சந்தேகிக்க கூடாது

பாராளுமன்றில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் விசேட உரை

0 620

ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்

நியூ­சி­லாந்து கிரைஸ்ட்சேர்ச் நகரில் பள்­ளி­வா­சலில் இடம்­பெற்ற தாக்­கு­த­லுக்கு பதி­லடி கொடுக்கும் வகையில் இங்கு தேவா­ல­யங்­களில் இந்த தாக்­குதல் இடம்­பெற்­றுள்­ள­தா­கவும், இந்த தாக்­கு­தலின் பின்­ன­ணியில் முஸ்லிம் அடிப்­ப­டை­வாத அமைப்­பான தேசிய தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் ஜே.எம்.ஐ எனும் வெளிநாட்டு அடிப்­ப­டை­வாத அமைப்­பு­களே உள்­ளன எனவும் தெரி­வித்தார்.

அத்­துடன், இவ்­வா­றான செயற்­பாடு கார­ண­மாக நாட்டில் உள்ள முஸ்­லிம்­களை சந்­தேகக் கண்ணில் பார்க்கும் செயற்­பா­டு­களை கைவிட வேண்டும். இது குறித்த விசா­ர­ணையில் முஸ்­லிம்கள் முழு­மை­யான ஒத்­து­ழைப்­பு­களை வழங்கி வரு­கின்­றனர் என்றும் அவர் தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற விசேட அமர்­வு­களின் போது உரை­யாற்­றி­ய­போதே அவர் இதனைக் குறிப்­பிட்டார். இது­கு­றித்து அவர் மேலும் கூறு­கையில், மிகவும் அமை­தி­யாக வாழ்ந்­து­வந்த எமது நாட்­டினை ஒரு குறு­கிய பயங்­க­ர­வாத அமைப்­பினால் நாச­மாக்­கப்­பட்­டுள்­ளது. அதுவும் ஒரு புனித நாளான உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று இவ்­வா­றான நாச­கார செயற்­பாடு இடம்­பெற்­றுள்­ளது. தேவா­ல­யங்கள், ஹோட்­டல்கள் இலக்­கு­வைக்­கப்­பட்­டுள்­ளன. இதனால் பல பொது­மக்­களை நாம் இழந்­துள்ளோம். இப்­போது வரையில் 320 க்கும் அதி­க­மான பொது­மக்கள் கொல்­லப்­பட்­டுள்­ளனர். பலர் காய­மா­கி­யுள்­ளனர். வெளி­நாட்டு பிர­ஜைகள் 38 பேர் கொல்­லப்­பட்­டனர்.எமது பாது­காப்பு படையின் மூவர் கொல்­லப்­பட்­டுள்­ளனர். இவர்கள் அனை­வ­ருக்கும் எமது அனு­தா­பங்­களை தெரி­விக்­கின்றோம்.

தற்­கொலை குண்­டுத்­தாக்­கு­தலில் இந்த செயற்­பா­டுகள் இடம்­பெற்­றுள்­ளது. அதுவும் கடந்த சில மாதங்­க­ளுக்கு முன்னர் நியூ­சி­லாந்து கிரைஸ்ட்சேர்ச் நகரில் பள்­ளி­வாசல் ஒன்றில் இடம்­பெற்ற தாக்­கு­த­லுக்கு பதி­லடி கொடுக்கும் வகையில் இங்கு தேவா­ல­யங்­களில் இந்த தாக்­குதல் இடம்­பெற்­றுள்­ள­தாக தற்­போது தக­வல்கள் கிடைத்­துள்­ளது. இது­கு­றித்து மேல­திக விசா­ர­ணைகள் நடத்­தப்­பட்டு வரு­கின்­றன. இந்த தாக்­கு­தலின் பின்­ன­ணியில் முஸ்லிம் அடிப்­ப­டை­வாத அமைப்­பான தேசிய தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் ஜே.எம்.ஐ ஆகிய அடிப்­ப­டை­வாத அமைப்­பு­களே இருப்­பது தெரி­ய­வந்­துள்­ளது. இவ்­வா­றான அடிப்­ப­டை­வாத அமைப்­பு­களை உட­ன­டி­யாக தடை­செய்ய வேண்டும். இவர்­களை நீதி­மன்­றத்தில் நிறுத்த வேண்டும். இவ்­வா­றான அமைப்­பு­களின் உடை­மை­களை அரசு பறி­முதல் செய்து அரச உட­மை­யாக்க வேண்டும். அப்­போ­துதான் நாட்டின் பாது­காப்பை பலப்­ப­டுத்த முடியும்.

அதேபோல் இவ்­வா­றான செயற்­பாடு கார­ண­மாக நாட்டில் உள்ள முஸ்­லிம்­களை சந்­தேகக் கண்ணில் பார்க்கும் செயற்­பா­டு­களை கைவிட வேண்டும். இது குறித்த விசா­ர­ணையில் முஸ்­லிம்கள் முழு­மை­யான ஒத்­து­ழைப்­பு­களை வழங்கி வரு­கின்­றனர். ஆகவே இன­வாதம், மத­வாதம் ஆகி­ய­வற்றை கைவிட வேண்டும்.

அதேபோல் இந்த தாக்­குதல் இடம்­பெற பாது­காப்பு தரப்பின் பல­வீ­ன­மான செயற்­பாடே கார­ண­மாகும். இவ்­வா­றான தாக்­குதல் நடத்­தப்­படப் போகின்­றது என்­பது தெரிந்தும் உறு­திப்­ப­டுத்­தப்­பட்டும் இந்த தகவல் பரி­மா­றப்­ப­ட­வில்லை. குறிப்­பாக பிர­த­ம­ருக்கோ, எனக்கோ இது­கு­றித்து எந்­த­வித தக­வலும் வழங்­கப்­ப­ட­வில்லை. ஜனா­தி­பதி நாட்டில் இல்­லாத நிலையில் உரிய அமைச்சர் என்ற வகையில் எனக்கோ அல்­லது பிர­த­ம­ருக்கோ தகவல் வழங்­கா­தது ஏன்? கடந்த ஒக்­டோபர் மாதத்தில் இருந்து நேற்று வரையில் பிர­த­ம­ருக்கோ எனக்கோ பாது­காப்பு குழுக் கூட்­டத்தில் கலந்­து­கொள்ள இட­ம­ளிக்­க­வில்லை. எவ்­வாறு இருப்­பினும் ஜனா­தி­பதி தலை­மையில் நேற்று கூடிய பாது­காப்பு குழுக் கூட்­டத்தில் விசா­ரணை நடத்த ஜனா­தி­பதி வலி­யு­றுத்­தி­யுள்ளார். அவ­ச­ர­கால சட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­தவும் தீர்­மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்துடன் தொடர்புபட்ட சகல குற்றவாளிகளையும் கைதுசெய்யவும் அவர்களுக்கு உயரிய தண்டனை வழங்கவும் சகல நடவடிக்கை எடுக்கப்படும். இப்போது வரையில் சிலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்கள் சர்வதேச பயங்கரவாத அமைப்புடன் தொடர்புபட்டதாக தெரிய வந்துள்ளது. இந்த விசாரணைகளை விரிவுபடுத்தி தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம் என்றார்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.