திருகோணமலை மறைமாவட்ட ஆயருடன் முஸ்லிம் பிரமுகர்கள் சந்தித்து பேச்சு

0 568

(அப்துல் சலாம் யாசீம்)

திரு­கோ­ண­மலை மறை­மா­வட்ட ஆயர் கிறிஸ்­டியன் நோயல் இமா­னுவேல் ஆண்­ட­கை­யுடன் திரு­கோ­ண­மலை மாவட்ட ஜம்­இய்­யதுல் உலமா சபை, திரு­கோ­ண­மலை வர்த்­தக சம்­மே­ளனம், திரு­கோ­ண­மலை மாவட்ட அனைத்து பள்­ளி­வாசல்கள் சம்­மே­ளனம் ஆகி­யன சந்­திப்­பொன்றை மேற்­கொண்­டி­ருந்­தன.
இதன் போது நேற்று முன்­தினம் இடம் பெற்ற குண்­டு­வெ­டிப்பில் உயி­ரி­ழந்த உற­வு­க­ளுக்கு தங்­க­ளது ஆழந்த அனு­தா­பங்­களை தெரி­விப்­ப­தா­கவும் , இவ்­வா­றான மிலேச்­சத்­த­ன­மான கொடூர தாக்­கு­தலை மேற்­கொண்­ட­வர்­க­ளுக்­கெ­தி­ராக பார­பட்­ச­மின்றி கடு­மை­யான தண்­டனை வழங்­கப்­பட வேண்டும் என்றும் இவ்­வா­றான சம்­ப­வங்கள் இனி ஒரு­போதும் நடக்க இட­ம­ளிக்கக் கூடாது எனவும் தெரி­வித்­தனர்.

அத்­தோடு திரு­கோ­ண­மலை மாவட்ட முஸ்லிம் சமூகம் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு தேவை­யான அனைத்து உத­வி­க­ளையும் செய்­வ­தற்கு தயாராக உள்ளதாகவும் திருகோணமலை மாவட்ட ஜம்இய்யத்துல் உலமா சபை பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.