நீர்கொழும்பு கட்டான கட்டுவபிட்டிய தேவாலயத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்த 13 வயது முஸ்லிம் சிறுமி ஒருவரின் ஜனாஸா நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது.
குறித்த சிறுமியின் தந்தை முஸ்லிமாவார். தாயாரின் குடும்பத்தினர் கத்தோலிக்கர்களாவர். இந் நிலையில் அன்றைய தினம் தேவாலயத்தில் இடம்பெறும் விசேட நிகழ்வுகளைப் பார்வையிட குடும்பத்தவர்களுடன் சென்ற போதே அவர் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நீர்கொழும்பு, பெரியமுல்ல ஜும்ஆ பள்ளிவாசலில் ஜனாஸா தொழுகை நடாத்தப்பட்டு நல்லடக்கமும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
vidivelli