சமாதானத்தில் நம்பிக்கை கொண்டுள்ள எந்த இஸ் ரேலிய அரசாங்கத்துடனும் பேசத் தயார்

0 605

சமா­தா­னத்தில் நம்­பிக்கை கொண்­டுள்ள எந்த இஸ்­ரே­லிய அர­சாங்­கத்­து­டனும் தான் பேச்­சு­வார்த்­தையில் ஈடு­படத் தயா­ராக இருப்­ப­தாக பலஸ்­தீன ஜனா­தி­பதி மஹ்மூட் அப்பாஸ் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை தெரி­வித்தார்.
நாம் பேச்­சு­வார்த்தை மேசையில் அமர்­வ­தற்கு தயா­ராக இருக்­கின்றோம், பேச்­சு­வார்த்­தைக்­காக எமது நேசக் கரங்கள் எப்­போதும் நீட்­டப்­பட்டே இருக்­கின்­றன என மேற்குக் கரை நக­ரான ரமல்­லாவில் வெளி­யிட்ட அறிக்­கையில் அப்பாஸ் தெரி­வித்­துள்ளார்.

பலஸ்­தீ­னத்­திற்கும் இஸ்­ரே­லுக்கும் இடையே சமா­தானத் தீர்வு தொடர்பில் இர­க­சி­ய­மாக மேற்­கொள்­ளப்­படும் முயற்­சிகள் தொடர்பில் கருத்து வெளி­யிட்ட அவர் ‘நாம் எமது உரி­மை­களைக் கைவி­ட­மாட்டோம், எமது நாட்­டுக்­கான தீர்­வாக அமெ­ரிக்கா முன்­வைக்கும் தீர்­வி­னையும் ஏற்றுக் கொள்­ள­மாட்டோம்’ எனவும் தெரி­வித்­துள்ளார்.

வொஷிங்­டனின் சமா­தானத் திட்டம் கிடப்பில் போடப்­பட்­டுள்­ளது. எனினும், இஸ்ரேல் என்ற புதிய நாட்டை தோற்­று­விப்­ப­தற்­காக 1948 ஆம் ஆண்டு விரட்டி அடிக்­கப்­பட்ட தமது பூர்­வீக இடத்­திற்கு மீளத் திரும்­பு­வ­தற்­கான உரி­மை­யினை விட்டுக் கொடுக்­கு­மாறு பலஸ்­தீன அக­தி­க­ளிடம் கோரப்­ப­ட­வுள்­ள­தாக அண்­மையில் தக­வல்கள் வெளி­யா­கி­யி­ருந்­தன.

அமெ­ரிக்­காவின் திட்­டத்­தினை நூற்­றாண்டின் முகத்தில் அறை­யப்­பட்ட சம்­பவம் என வர்­ணித்­துள்ள அப்பாஸ், அத் திட்­டத்­தினை நிரா­க­ரித்­துள்ளார்.
2017 ஆம் ஆண்டின் பிற்­ப­கு­தியில் இஸ்­ரேலின் தலை­ந­க­ராக ஜெரூ­ச­லத்தை அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் அங்­கீ­க­ரித்­ததில் இருந்து நிறுத்தி வைக்­கப்­பட்­டுள்ள பலஸ்­தீன – இஸ்­ரே­லிய சமா­தான முன்­னெ­டுப்­புக்கள் தொடர்பில் அமெ­ரிக்­காவின் எந்த வகி­பா­கத்­தையும் அப்பாஸ் நிரா­க­ரித்து வரு­கின்றார்.

சமா­தா­னத்­திற்­கான ஐக்­கிய நாடுகள் சபையின் தீர்­மா­னங்­களை இஸ்ரேல் ஏற்­றுக்­கொள்­ளு­மானால் நாம் பேசு­வ­தற்கு தயா­ராக இருக்­கின்றோம். அவ்­வா­றில்லை என்றால், எமது உரி­மைகள் கிடைக்கப் பெறும்­வரை உறு­தி­யாக இருப்போம் என அப்பாஸ் வலி­யு­றுத்­தினார்.

இஸ்­ரே­லியப் பாரா­ளு­மன்­ற­மான நெஸ்­ஸெட்­டுக்கு உறுப்­பி­னர்­களைத் தெரிவு செய்­வ­தற்­காக இஸ்­ரே­லிய வாக்­கா­ளர்கள் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை வாக்­க­ளித்துக் கொண்­டி­ருந்த நிலையில் அப்­பாஸின் அறிக்கை வெளி­யா­னது.
பிர­தமர் பெஞ்­சமின் நெட்­டன்­யா­ஹுவின் வல­து­சாரி லிகுட் கட்சி மற்றும் ஒய்வு பெற்ற ஜென­ர­லான பென்னி கன்ட்ஸ் தலை­மை­யி­லான நீலம், வெள்ளை அர­சியல் கூட்­ட­மைப்பும் இத் தேர்­தலில் மோதும் பிர­தான கட்­சி­க­ளாகும்.
தேர்தல் பிர­சா­ரத்தின் போது குடி­யேற்­ற­வா­சி­களில் ஒரு நபர் கூட மேற்குக் கரை­யி­லி­ருந்து அகற்­றப்­ப­ட­மாட்டார் எனவும், மேற்குக் கரை இஸ்­ரேலின் கட்­டுப்­பாட்­டி­லேயே இருக்கும் எனவும், ஜெரூ­சலம் பிரிக்கப்பட மாட்டாது எனவும் தெரிவித்திருந்தார்.

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் குடியேற்றத்திற்கான கட்டட நிர்மாணிப்புக்களை நிறுத்துவதற்கு இஸ்ரேல் மறுப்புத் தெரிவித்ததன் காரணமாக அமெரிக்க ஏற்பாட்டிலான சமாதானப் பேச்சுக்கள் 2014 ஆம் ஆண்டு முறிவடைந்தன.

-vidivelli

Leave A Reply

Your email address will not be published.