கிழக்கிற்கு தலைமை வேண்டும்

0 894
  • எஸ்.றிபான்

இலங்கை முஸ்­லிம்­களின் அர­சியல் பலம் என்­பது கிழக்கு மாகாண முஸ்­லிம்­களின் அர­சியல் பலத்­தில்தான் தங்­கி­யுள்­ளது. கிழக்கு மாகா­ணத்­திற்கு வெளியே மூன்றில் இரண்டு வீத­மான முஸ்­லிம்கள் வாழ்ந்து கொண்­டி­ருக்­கின்­றார்கள். ஆயினும், அவர்கள் கிழக்கு மாகாண முஸ்­லிம்­களைப் போன்று செறிந்து வாழ­வில்லை. இத­னால்தான், கிழக்கு மாகாண முஸ்­லிம்­களின் அர­சியல் பலம் கட்­டி­யெ­ழுப்­பப்­பட வேண்­டு­மென்று வலி­யு­றுத்­தப்­ப­டு­கின்­றது. அதே வேளை, கிழக்கு மாகா­ணத்தில் அம்­பாறை மாவட்ட முஸ்­லிம்­களின் அர­சியல் பலம் முக்­கி­ய­மா­னது. ஏனைய மாவட்­டங்­களை விடவும் அம்­பாறை மாவட்­டத்­தில்தான் முஸ்­லிம்­களின் விகி­தா­சாரம் அதி­க­மாகும். இங்­குதான் முஸ்­லிம்கள் அதி­கூ­டிய பெரும்­பான்­மை­யி­ன­ராக வாழ்ந்து கொண்­டி­ருக்­கின்­றார்கள்.

இதனால், முஸ்­லிம்­களின் அர­சியல் தலை­வர்கள் கிழக்கு மாகா­ணத்­தையும், அம்­பாறை மாவட்­டத்­தையும் பாது­காத்துக் கொள்­வ­தற்கு அதிக கரி­சனை காட்­டுதல் வேண்­டு­மென பேசப்­ப­டு­கின்­றது. ஆனால், இன்று முஸ்­லிம்­களின் அர­சியல் கட்­சிகள் என்றும், தலை­வர்கள் என்றும் சொல்லிக் கொண்­டி­ருப்­ப­வர்கள் கிழக்கு மாகாண முஸ்­லிம்­களின் உரி­மை­களை புறக்­க­ணித்தே செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். அவர்கள் தங்­களை தேசிய தலை­வர்கள் என்று அழைத்துக் கொண்­டாலும், அந்தத் தலை­வர்கள் பம்­மாத்து அர­சி­ய­லையே செய்து கொண்­டி­ருக்­கின்­றார்கள்.

முஸ்­லிம்­களின் அர­சி­யலைச் செய்­யாது சிங்­கள பேரி­ன­வா­தத்­தையும், தமிழ்ப் பேரி­ன­வா­தத்­தையும் திருப்­திப்­ப­டுத்தும் அர­சி­யலைச் செய்து கொண்­டி­ருக்­கின்­றார்கள். இன்­றைய முஸ்லிம் அர­சியல் கட்­சி­களும், அவற்றின் தலை­வர்­களும் இலங்கை முஸ்­லிம்­க­ளுக்கு அர­சியல் பலத்தைக் கொடுக்கக் கூடிய கிழக்கு முஸ்­லிம்­களின் உரி­மை­களைப் பாது­காக்­க­வு­மில்லை. தேசிய ரீதியில் முஸ்­லிம்­களின் உரி­மை­க­ளையும் பாது­காத்துக் கொள்­ள­வில்லை. இவர்கள் முஸ்­லிம்­களின் அர­சியல் பலத்தைச் சிதைத்து பேரம் பேசும் சக்­தி­யையும் இழந்து நிற்­கின்­றார்கள்.

மர்ஹூம் எம்.எச்.எம்.அஸ்ரப் இலங்கை முஸ்­லிம்­க­ளுக்கு குரல் கொடுப்­ப­தற்கு அர­சியல் கட்சி எது­வு­மில்லை என்­ப­தற்­கா­கவே முஸ்லிம் காங்­கி­ரஸை தோற்­று­வித்தார். அவர் இலங்கை முஸ்­லிம்­க­ளுக்கு தேசிய ரீதி­யாகக் குரல் கொடுத்தார். இலங்கை முஸ்­லிம்­களின் அர­சி­யலை பல­மிக்­க­தாக மாற்­றினார். இதன் மூலம் முஸ்லிம் அர­சி­ய­லுக்கு பேரம் பேசும் சக்­தி­யையும் உரு­வாக்­கினார். அஸ்­ரப்­புக்கு முன்னர் இலங்கை முஸ்­லிம்­க­ளுக்கு கிழக்கு மாகா­ணத்­திற்கு வெளியே உள்­ள­வர்­களே அர­சியல் தலை­மையைக் கொடுத்­தார்கள். ஆயினும், அவர்கள் கிழக்கு முஸ்­லிம்­களின் பிரச்­சி­னை­களை கருத்திற் கொள்­ள­வில்லை. அதே வேளை, கிழக்கு மாகா­ணத்­தி­லி­ருந்து தேசிய கட்­சி­களின் மூல­மாக பாரா­ளு­மன்­றத்­திற்கு தெரிவு செய்­யப்­பட்ட முஸ்­லிம்கள் கூட கிழக்கு முஸ்­லிம்­களின் உரி­மை­களைப் பற்றி பேச­வில்லை. இத­னால்தான், முஸ்­லிம்­க­ளுக்கு தனி­யான அர­சியல் கட்சி ஒன்று உரு­வாக்­கப்­பட வேண்­டு­மென்ற தேவை உண­ரப்­பட்­டது.

முஸ்லிம் காங்­கிரஸ் தோற்றம் பெற்ற போது வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களில் விடு­தலைப் புலிகள் முஸ்­லிம்­க­ளுக்கு பல அநி­யா­யங்­களையும் மேற்­கொண்­டி­ருந்­தார்கள். அதே வேளை, அர­சாங்கம் முஸ்­லிம்­க­ளையும் தமி­ழர்­களை மோத­விடும் சூழ்ச்­சி­க­ளையும் செய்து கொண்­டி­ருந்­தது. இந்­நி­லையில் அஸ்ரப் தேசிய ரீதியில் குறிப்­பாக வடக்கு, கிழக்கு முஸ்­லிம்­களின் பிரச்­சி­னைகள் குறித்து பல­மாகக் குரல் கொடுத்தார். இதனால், முஸ்லிம் காங்­கி­ர­ஸிற்கு நாடு பூரா­கவும் முஸ்­லிம்­க­ளி­டையே பலத்த ஆத­ரவு காணப்­பட்­டது. இதனால், அச்­சப்­பட்­ட­வர்கள் முஸ்லிம் காங்­கி­ர­ஸையும், அதன் தலைவர் அஸ்­ரப்­பையும் இல்­லாமல் செய்யும் நட­வ­டிக்­கை­க­ளை மேற்­கொண்­டார்கள். தமிழ் ஆயுதக் குழுக்கள் அஸ்­ரப்­புக்கு மரண அச்­சு­றுத்­தல்­க­ளையும் விடுத்திருந்தன.

அஸ்­ரப்பின் நட­வ­டிக்­கைகள் அவரை முஸ்­லிம்­களின் தேசியத் தலை­வ­ராக ஏற்றுக் கொள்ள வைத்­தது. அது மாத்­தி­ர­மின்றி இலங்கை முஸ்­லிம்­க­ளுக்கு தலைமை தாங்கும் தகுதி கிழக்கு முஸ்­லிம்­க­ளுக்கே இருக்­கின்­ற­தென்று கிழக்கு மாகா­ணத்­திற்கு வெளியே உள்ள முஸ்­லிம்­க­ளி­னாலும் சிலா­கித்துக் கூறப்­பட்­டது. இதனால், இலங்கை முஸ்­லிம்­க­ளுக்கு யார் அர­சியல் தலைமை கொடுக்க வந்­தாலும் அவரை அஸ்­ரப்­புடன் ஒப்­பிட்டு நோக்கும் கொள்கை ஒன்று முஸ்­லிம்­க­ளி­டையே தானா­கவே வளர்ந்­துள்­ளது. இதனால், இன்­றைய முஸ்லிம் காங்­கி­ரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் முதல் ஏனைய கட்­சி­களின் தலை­வர்­க­ளையும் முழு­மை­யாக தேசிய தலை­வ­ராக ஏற்றுக் கொள்ள முடி­யா­த­தொரு நிலை ஏற்­பட்டுள்­ளது. இதே வேளை, இத்­த­லை­வர்கள் கிழக்கு மாகாண முஸ்­லிம்­களின் காணி முத­லான பல பிரச்­சி­னை­களை தீர்க்­காது, வாக்­கு­க­ளை மாத்­திரம் குறி­வைத்துச் செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். இவர்­களின் இக்­கு­று­கிய சிந்­த­னையால் அஸ்ரப் கட்­டி­யெ­ழுப்­பிய முஸ்­லிம்­களின் பேரம் பேசும் அர­சியல் சக்தி அமைச்சர் பத­வி­க­ளுக்­கா­கவும், பணத்­திற்­கா­கவும், வேறு தேவை­களை நிறை­வேற்றிக் கொள்­வ­தற்­கா­கவும் பேரி­ன­வாதக் கட்­சி­க­ளிடம் அறு­தி­யாக்­கப்­பட்­டுள்­ளது. குறிப்­பாக கிழக்கு மாகாண முஸ்­லிம்­களின் அர­சியல் பலம் மிகவும் மோச­மாக பின்­ன­டைந்­துள்­ளது. கட்­சியின் தலைவர் பத­வியைப் பாது­காத்துக் கொள்­வ­தற்­காக அஸ்­ரப்­பினால் ஒழிக்­கப்­பட்ட பிர­தே­ச­வாதம் மிகவும் மோச­மாக விதைக்­கப்­பட்­டுள்­ளது. முஸ்லிம் காங்­கி­ர­ஸிற்குள் ஏற்­பட்ட தலைவர் பதவி போட்­டியின் கார­ண­மாக முஸ்லிம் காங்­கிரஸ் பல கூறு­களாத் துண்­டா­டப்­பட்­டன. இதன் பின்னர் முஸ்லிம் காங்­கி­ரஸை விட்டுப் பிரிந்­த­வர்­களும், முஸ்லிம் காங்­கி­ரஸில் தொடர்ந்து இருந்­த­வர்­களும் தங்­களின் தலைவர் பத­வி­களை பாது­காத்துக் கொள்­வ­தற்­காக பிர­தே­ச­வா­தத்தை கையில் எடுத்துக் கொண்­டார்கள். இதனால், ஒவ்­வொரு பிர­தே­சமும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பத­வியை கோரி நின்­றன. அதே வேளை, தேசி­யப்­பட்­டியல் மூல­மாக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பதவி வழங்­கப்­ப­டு­மென்று எல்லா பிர­தே­சங்­க­ளிலும் உறு­தி­மொழி வழங்­கப்­பட்­டது. குறிப்­பாக முஸ்லிம் காங்­கி­ரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் இவ்­வாறு வாக்­கு­று­தி­களை அளித்தார்.

மர்ஹும் அஸ்­ரப்பின் மர­ணத்தின் பின்னர் பல கட்­சிகள் தோற்றம் பெற்­றன. இன்று முஸ்­லிம்­க­ளி­டையே செல்­வாக்கு பெற்­றுள்ள முஸ்லிம் காங்­கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ், தேசிய காங்­கிரஸ் ஆகிய கட்­சி­களின் தலை­வர்­களுள் ஏ.எல்.எம்.அதா­வுல்லாஹ் மாத்­தி­ரமே கிழக்கு மாகா­ணத்தைச் சேர்ந்­தவர். இத்­த­லை­வர்கள் கிழக்கு முஸ்­லிம்­களின் பிரச்­சி­னை­களில் அஸ்­ரப்பைப் போன்று செயற்­ப­டாது இருப்­ப­தனால் முஸ்லிம் காங்­கி­ர­ஸிற்கு கிழக்கு மாகா­ணத்தை சேர்ந்த ஒருவர் தலை­வ­ராக தெரிவு செய்­யப்­பட வேண்­டு­மென்று தெரி­விக்­கின்­றார்கள். பொது­வாக முஸ்­லிம்­களின் அர­சியல் தலைமை கிழக்கு மாகா­ணத்­தி­லி­ருந்து தோற்றம் பெற வேண்­டு­மென்று கூறப்படுகிறது. கிழக்கு மாகாண முஸ்­லிம்­க­ளி­டையே எழுந்­துள்ள இக்­கோ­ரிக்­கை­களின் பின்னால் வலு­வான கார­ணங்கள் உள்­ளன. தேசிய தலை­வர்கள் என்று சொல்லிக் கொண்­டி­ருக்கும் தலை­வர்கள் கட்­சியின் கீதங்­க­ளையும், அஸ்­ரப்பின் கருத்­துக்­க­ளையும், கவி­தை­க­ளையும் வைத்துக் கொண்டும், கட்­சியை பாது­காத்துக் கொள்ள வேண்­டு­மென்ற கோசத்தை வைத்துக் கொண்டும் கட்­சி­யையும், தலைவர் பத­வி­யையும் பாது­காத்துக் கொள்­ள­லா­மென்று எண்ணிக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். இவர்­களின் இந்த சிந்­தனை பிழை­யா­னது என்று கடந்த உள்­ளு­ராட்சி சபைத் தேர்­தலில் மக்கள் காட்­டி­யுள்­ளார்கள். கிழக்கு மாகா­ணத்தில் முஸ்லிம் காங்­கி­ரஸின் செல்­வாக்கில் வீழ்ச்சி ஏற்­பட்­டுள்­ளது. அக்­கட்சி கடந்த காலங்­களில் தமது கட்­டுப்­பாட்டில் இருந்த உள்­ளு­ராட்சி சபை­களை இழந்து நிற்­கின்­றது.

இதே வேளை, கிழக்கு மாகா­ணத்­தில்தான் முஸ்­லிம்­களின் கிழக்கு தலைமை இருக்க வேண்­டு­மென்று முன்வைக்­கப்­படும் கோசத்தை ஆராயும் போது அக்­கோசம் பெரும்­பாலும் முஸ்லிம் காங்­கி­ரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் தலைவர் றிசாட் பதி­யூதீன் ஆகி­யோர்­களின் தலை­மை­களின் மீதுள்ள அர­சியல் காழ்ப்­பு­ணர்ச்­சி­யால்தான் முன்வைக்­கப்­ப­டு­கின்­றது. இவ்­விரு தலை­வர்­களும் கிழக்கு மாகா­ணத்தைச் சேர்ந்­த­வர்­க­ளில்லை. ஆனால், இவர்­களின் கட்­சிக்கே கிழக்கு மாகா­ணத்தில் செல்­வாக்கு அதி­க­மாகும். இதனால், இவர்­களை வீழ்த்த வேண்­டு­மாயின் கிழக்கு எனும் பிர­தே­ச­வா­தத்தை முன்வைப்­பதே இல­கு­வான வழி­முறை எனக் கண்­டுள்­ளார்கள். இத்­த­லை­வர்கள் கிழக்கு முஸ்­லிம்­க­ளி­னது உரி­மை­களை புறக்­க­ணித்துச் செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றார்கள் என்­பதில் உண்­மை­யில்­லா­ம­லில்லை. பொத்­துவில் முதல் புல்­மோட்டை வரை காணிப் பிரச்­சினை, நுரை­ச்­சோலை வீட்­டுத்­திட்டப் பிரச்­சினை, ஒலுவில் மற்றும் நிந்­தவூர் பிர­தே­ச­தங்­களில் காணப்­படும் கடல­ரிப்பு பிரச்­சினை, இறக்­காமம் மாயக்­கல்­லி­ம­லையில் புத்தர் சிலை வைக்­கப்­பட்ட பிரச்­சினை, கரை­யோர மாவட்ட பிரச்­சினை, கல்­முனை பிரச்­சினை என கிழக்கு மாகாண முஸ்­லிம்கள் எதிர்­கொண்­டுள்ள பிரச்­சி­னை­களை அடுக்கிக் கொண்டே செல்­லலாம்.

அதே வேளை, கிழக்கு மாகா­ணத்தில் தெரிவு செய்­யப்­பட்­டுள்ள பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் கிழக்கு முஸ்­லிம்­களின் உரி­மைகள் பற்றி எத­னையும் பேச­வில்லை. தாம் அங்கம் வகித்துக் கொண்­டி­ருக்கும் கட்சித் தலை­மையின் குறு­கிய செயற்­பா­டு­க­ளையும் அங்­கீ­க­ரித்துக் கொண்டு அமைச்சர் பத­வி­களைப் பெற்றுக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். மேடை­களில் கட்சித் தலை­மையை புகழ்ந்து கொண்­டி­ருக்­கின்­றார்கள். இந்தப் புகழ்ச்­சிகள் தமக்கு அமைச்சர் பத­வி­களைப் பெற்றுக் கொடுத்­ததற்­கா­கவே அன்றி வேறு எதற்­கு­மில்லை.

மறு­பு­றத்தில் கிழக்கு மாகா­ணத்தைச் சேர்ந்த அதா­வுல்லாஹ் தேசிய காங்­கி­ரஸை ஆரம்­பித்தார். அவர் கூட கிழக்கு மாகாண முஸ்­லிம்­களின் உரி­மை­களைப் பற்றி பேச­வில்லை. மஹிந்­த­ரா­ஜ­ப­க் ஷவின் அர­சாங்­கத்தின் போது முஸ்­லிம்கள் பௌத்த இன­வா­தி­க­ளினால் தாக்­கப்­பட்­டார்கள். அதன்­போ­தெல்லாம் அர­சாங்­கத்தை கடிந்து கொள்­ள­வில்லை. ஏனைய முஸ்லிம் கட்­சி­களைப் போலவே அதா­வுல்­லாஹ்வும் நடந்து கொண்டார். மேலும், மஹிந்­த­ரா­ஜ­ப­க் ஷவின் அர­சாங்­கத்தில் தற்­போ­தைய கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்­புல்லாஹ் அமைச்­ச­ராக இருந்தார். இவர் கூட முஸ்­லிம்­களின் உண்மைக் குர­லாக செயற்­ப­ட­வில்லை. ஆதலால், கிழக்கு மாகா­ணத்தைச் சேர்ந்த அர­சியல் தலை­வர்­களும் கிழக்கு மாகா­ணத்­திற்கு வெளியே உள்ள தலை­வர்­களைப் போன்றே செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். இதன் மூல­மாக முஸ்­லிம்­களின் அர­சியல் தலைமை கிழக்கு மாகா­ணத்­தில்தான் இருக்க வேண்டும். கிழக்கு மாகா­ணத்­திற்கு வெளியே இருக்க வேண்­டு­மென்ற கருத்­துக்­க­ளுக்கு அப்பால் சிந்­திக்க வேண்­டி­யுள்­ளது. முஸ்­லிம்­களின் அர­சியல் தலைவர் எந்த மாகா­ணத்தைச் சேர்ந்­த­வ­ரா­கவும் இருக்­கலாம். ஆனால், அவர் முஸ்­லிம்­களின் குர­லாக, முஸ்­லிம்­களின் பேரம் பேசும் அர­சியல் சக்­தியை வளர்க்கக் கூடி­ய­வ­ராக, பத­வி­க­ளினால் கட்­டுண்­ட­வ­ராக, மிக மோச­மான பல­வீ­னங்­களை கொண்­டி­ருக்­கா­த­வ­ராக இருக்க வேண்டும். அப்­போ­துதான் கிழக்கு மாகாண முஸ்­லிம்­களின் உரி­மை­களை மட்­டு­மன்றி முழு நாட்­டி­னதும் முஸ்­லிம்­களின் உரி­மை­களைப் பற்றி பேசு­கின்­ற­வ­ரா­கவும், செயற்­ப­டு­கின்­ற­வ­ரா­கவும் இருக்க முடியும்.

முஸ்லிம் காங்­கிரஸ் தோற்றம் பெற்ற போது முஸ்­லிம்­க­ளி­டையே கட்சிப் போட்­டி­களும், பிர­தே­ச­வா­தங்­களும் நிறை­வாகக் காணப்­பட்­டன. தமி­ழர்கள் பிர­தே­ச­வா­தங்­களை புறக்­க­ணித்து சுயாட்­சியை வேண்டிப் போராடிக் கொண்­டி­ருக்கும் போது முஸ்­லிம்­க­ளி­டையே காணப்­பட்ட பிர­தே­ச­வாதம் முஸ்­லிம்­களின் அர­சியல் பலத்தை சிங்­கள பேரி­ன­வாதக் கட்­சிகள் தங்­க­ளுக்கு ஏற்ற வகையில் பயன்­ப­டுத்திக் கொண்­டி­ருந்­தன. இதனால், முஸ்­லிம்­களை ஒரு கட்­சியின் கீழ் ஒற்­று­மைப்­ப­டுத்த வேண்­டு­மென்று மர்ஹூம் அஸ்ரப் திட்­ட­மிட்டார். இவர் பிர­தே­ச­வா­தத்­திற்கு எதி­ராகப் பிரச்­சா­ரங்­களை மேற்­கொண்டு பெரும்­பான்­மை­யான முஸ்­லிம்­களை முஸ்லிம் காங்­கி­ரஸின் கீழ் ஒற்­று­மைப்­ப­டுத்­தினார். இந்த ஒற்­று­மையை பிற்­பட்ட காலத்தில் முஸ்லிம் காங்­கி­ரஸ்தான் தமது அர­சியல் தேவைக்­காக குழைத்து மீண்டும் பிர­தே­ச­வா­தத்தை உரு­வாக்­கி­யது. ஓவ்­வொரு பிர­தே­சத்­திலும் உள்ள கட்­சியின் முக்­கிய உறுப்­பி­னர்­களை தலைமை தமது தேவைக்கு ஏற்ற வகையில் பிரித்­தா­ளுகை செய்­தது. சமூ­கத்தின் தேவையை விடவும், கட்சித் தலை­மைக்கு கண்­மூ­டித்­த­ன­மாக விசு­வாசம் காட்­டு­கின்­ற­வர்­களை நேசிக்கும் நிலையை தலைமை வளர்த்துக் கொண்­டது.

பிர­தே­ச­வாதம் வளர்க்­கப்­பட்­ட­தனால் ஒவ்­வொரு ஊரும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பத­விக்­காக சண்­டை­யிட்டுக் கொண்­டன. சமூ­கத்தை நேசிக்­காது தலை­மையை நேசித்­த­மையால் பாரா­ளு­மன்றத் தேர்­தல்­களின் போது இவர்­கள்தான் வேட்­பா­ளர்கள் என்று அம்­பாறை மாவட்­டத்தில் மூன்று பேர் திணிக்­கப்­பட்­டார்கள். இதனால், மூன்று பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் தெரிவு செய்­யப்­பட்­டார்கள். ஆனால், சமூ­கத்தின் உரி­மைகளைப் பேசக் கூடி­ய­வர்கள், சமூகம் விரும்பக் கூடி­ய­வர்கள் பாரா­ளு­மன்­றத்­திற்கு செல்ல வாய்ப்பு மறுக்­கப்­பட்­டது. இதனால், சமூ­கத்தின் உரி­மை­களை மண­லுக்­கா­கவும், அமைச்சர் பத­விக்­கா­கவும், கொந்­த­ராத்­துக்­க­ளுக்­கா­கவும் விலை பேசும் தர­கர்கள் மக்­களின் பிர­தி­நி­திகள் என்ற அஸ்­தஸ்தைப் பெற்றுக் கொண்­டார்கள். இத்­த­கை­ய­வர்கள் அர­சாங்­கத்­தினால் கிடைக்கும் தொழில் வாய்ப்­புக்­களை கையூட்­டல்­க­ளுக்­காக கொடுத்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். முஸ்­லிம்­களின் உரிமை அர­சி­ய­லுக்குள் பிர­வே­சித்­த­வர்கள், உண்­டியல் வைத்து தேர்­தல்­களை எதிர் கொண்­ட­வர்கள் கோடி­களின் அதி­ப­தி­க­ளாக உரு­மா­றி­யுள்­ளார்கள்.

முஸ்லிம் கட்­சி­களை எடுத்துக் கொண்டால் அக்­கட்­சி­க­ளுக்கு கிழக்கு மாகா­ணத்­தில்தான் செல்­வாக்கு அதி­க­மாகும். கிழக்கு மாகாண முஸ்­லிம்­களின் ஆத­ரவை வைத்துக் கொண்­டுதான் கெபினட் அமைச்சர் பத­வி­களை பெற்றுக் கொள்­கின்­றார்கள். ஆனால், அவர்கள் தங்­களின் கட்­சியின் சின்­னத்தில் போட்­டி­யி­டு­வ­தில்லை. தங்­களின் பிர­தே­சங்­களில் கட்­சியை வளர்க்க முடி­யா­த­வர்கள் கிழக்கு மாகா­ணத்­திற்கு வருகை தந்து கட்­சியை பாது­காத்துக் கொள்ள வேண்­டு­மென்று கேட்டுக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். முஸ்­லிம்கள் தலை நிமிர்ந்து வாழ வேண்­டு­மாயின் இந்த இயக்கம், கட்சி வாழ வேண்­டு­மென்று ஒவ்­வொரு மேடை­க­ளிலும் தெரி­வித்துக் கொண்டே வரு­கின்றார். ஆனால், தமது பிர­தே­சத்தில் கட்­சியை வளர்க்க முடி­ய­வில்லை. இதுதான் முஸ்லிம் அர­சியல் தலை­வர்­களின் இலட்­ச­ண­மாகும்.

இன்றைய அரசாங்கத்தின் காலத்திலும், மஹிந்தராஜபக் ஷவின் அரசாங்கத்தின் போதும் முஸ்லிம்கள் பல இடங்களில் தாக்கப்பட்டார்கள். அரசாங்கத்தை விட்டு வெளியேற வேண்டுமென்று முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டது. ஆனால், கிச்சன் கெபினட் அதற்கு அனுமதி அளிக்கவில்லை. இதனால், அரசாங்கத்தில் ஒட்டிக் கொண்டது. இன்றைய அரசாங்கத்தில் கண்டி மாவட்டத்தில் ஐந்து நாட்களாக முஸ்லிம்களின் மீது தாக்குதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. காவல்துறையினரின் முன்னிலை யிலேயே முஸ்லிம்கள் தாக்கப்பட் டார்கள். இதன்போது கூட முஸ்லிம் கட்சிகள் அரசாங்கத்தை விட்டு வெளியேற விரும்பவில்லை. சமூகத்தை பாதுகாத்துக் கொள்வதற்கு துணிவு கொள்ளாதவர்கள், அரசாங்கத்தையும், ரணில் விக்கிரமசிங்கவையும் பாதுகாத்துக் கொள்வதற்காகவும் பல போராட்டங்களை நடத்தினார்கள். நீதிமன்றம் சென்றார்கள். ஜனநாயகத்தை பாதுகாத்துக் கொள்வதற்காக போராடிக் கொண்டிருக்கின்றோம் என்றார்கள். ஆனால், முஸ்லிம்களின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் ஜனநாயகத்திற்கு விரோதமானதென்று அவர்களுக்கு தெரியவில்லை. சமூகம் எக்கேடு கெட்டாலும் தமக்கு சுகபோகங்களையும், அமைச்சர் பதவிகளையும் வழங்கியுள்ள கட்சியையும், தலையையும் பாதுகாத்துக் கொள்வதற்கு தங்களையும், சமூகத்தையும் எந்தத் துன்பத்திற்கும் உள்ளாக்குவதற்கு தயங்கமாட்டார்கள். இதனால்தான் முஸ்லிம் கட்சிகள் சமூகத்தின் அரசியலைச் செய்யவில்லை என்று கூறப்படுகின்றன. அதனால்தான் அரசியல் தலைவர்களில்லாத சமூகமாக முஸ்லிம்கள் உள்ளார்கள்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.