சவூதி அரேபிய மரண தண்டனைகளுக்கு ஐரோப்பிய யூனியன் கடும் எதிர்ப்பு

0 577

சவூதி அரே­பி­யாவில் இவ்­வாண்டு மரண தண்­டனை 45 ஐ தாண்­டி­யுள்ள நிலையில் ஐரோப்­பிய யூனியன் சவூதி ஆரே­பி­யாவின் மரண தண்­ட­னைக்கு எதிர்ப்புத் தெரி­விப்­ப­தாக அவ்­வ­மைப்பின் வெளி­நாட்டுக் கொள்­கைக்­கான தலைமை அதி­காரி தெரி­வித்­துள்ளார்.

எந்­த­வித புற நடை­க­ளு­மின்றி அனைத்துக் குற்­றங்­க­ளுக்கும் மரண தண்­ட­னையை சவூதி அரே­பியா பயன்­ப­டுத்தி வரு­வ­தனை ஐரோப்­பிய யூனியன் ஒரு­மித்த குரலில் எதிர்ப்­ப­தாக பெட்­ரிக்கா மொக்­ஹெ­ரினி உத்­தி­யோ­க­பூர்வ அறிக்­கை­யொன்றில் தெரி­வித்­துள்ளார்.

போதைப் பொருள் கடத்தல் குற்­றச்­சாட்டின் அடிப்­ப­டையில் கடந்த சில நாட்­களில் நான்கு பேருக்கு சவூதி அரே­பியா மரண தண்­டனை நிறை­வேற்­றி­யுள்­ளது. அண்­மையில் நிறை­வேற்­றப்­பட்ட தண்­ட­னை­க­ளோடு 2019 ஜன­வரி தொடக்கம் 45 பேருக்கும் அதி­க­மா­னோ­ருக்கு மரண தண­டனை நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது எனவும் அவர் தெரி­வித்­துள்ளார்.

மரண தண்­டனை என்­பது எச்­ச­ரிக்கை வழங்க முடியாத கொடூரமான மனிதாபிமானமற்ற செயற்பாடாகும் என மொக்ஹெரினி சுட்டிக்காட்டியுள்ளார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.