பள்ளிவாசல் பதிவு விவகாரம்: இறுக்கமான சட்டங்களை நாம் தளர்த்தியுள்ளோம்

பதிவு செய்ய பள்ளிவாசல்கள் ஆர்வம் காட்ட வேண்டும் என்கிறார் அமைச்சர் ஹலீம்

0 853

பள்­ளி­வா­சல்­களை பதி­வது தொடர்பில் முன்னர் இருந்த இறுக்­க­மான சட்­டங்­களை ஐக்­கிய தேசியக் கட்சி அர­சாங்­கத்தில் நாம் தளர்த்­தி­யி­ருக்­கிறோம். அத்­துடன் பள்­ளி­வா­சல்­களை பதிவு செய்­வ­தனால் எதிர்­கா­லத்தில் ஏற்­ப­ட­வி­ருக்கும் சிக்­கல்­க­ளி­லி­ருந்து தவிர்ந்து கொள்­ளலாம் என தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவ­கார அமைச்சர் எம்.எச்.அப்துல் ஹலீம் தெரி­வித்தார்.

பள்­ளி­வா­சல்கள், குர்ஆன் மத்­ர­ஸாக்கள், அரபுக் கல்­லூ­ரி­களின் பதி­வுகள் மேற்­கொள்ளும் நட­மாடும் சேவையும் பள்ளி நிர்­வாக கட்­ட­மைப்பு முறைமை தொடர்­பி­லான செய­ல­மர்­வு­களும் முஸ்லிம் சமய விவ­கார அமைச்சு மற்றும் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் என்­பன இணைந்து நாட­ளா­விய ரீதியில் நடாத்தி வரு­கின்­றன. இதன் இரண்­டாம்­கட்ட நட­மாடும் சேவை நேற்று முன்­தினம் அக்­கு­ற­ணையில் இடம்­பெற்­றது. இதில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அமைச்சர் ஹலீம் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அங்கு அவர் மேலும் உரை­யாற்­று­கையில், கடந்த காலங்­களில் முஸ்­லிம்கள் பல்­வேறு இன்­னல்­க­ளுக்கு முகம் கொடுத்து வந்­தனர். இன, மத­வாத சிந்­த­னை­யு­டைய கடும்­போக்­கு­வா­திகள் பள்­ளி­வாசல் பதி­வின்மை தொடர்­பி­லான பிரச்­சி­னை­களை தோற்­று­வித்­த­போது எமக்­கு­பெரும் தலை­கு­னி­வுகள் ஏற்­பட்­டன. ஏனென்றால் எமது பள்­ளி­வா­சல்கள் பதி­வுகள் தொடர்பில் சிக்­கல்கள் இருந்து வந்­தன. இதனால் பாதிக்­கப்­பட்ட எமது முஸ்லிம் சமூகம் சட்டச் சிக்­கல்­க­ளுக்குள் சிக்­குண்டு தவித்­ததை யாராலும் இல­குவில் மறந்­து­விட முடி­யாது.

முன்னர் பள்­ளி­வாசல் பதி­வுகள் பதிவு நட­வ­டிக்­கை­களில் இருந்த இறுக்­க­மான முறை­மை­களின் கார­ண­மா­கவே பல்­வேறு இடங்­க­ளிலும் பதிவு நட­வ­டிக்­கைகள் இழு­ப­றியில் இருந்­தன. குறிப்­பாக பள்­ளி­வாசல் பதி­விற்கு அரு­கி­லுள்ள விகா­ரை­யொன்றின் கடி­தமும் கோரப்­பட்­டது. இதனால் எமது சமூகம் பல்­வேறு சிர­மங்­களை எதிர்க்­கொண்­டது.

எனவே, நாம் ஆட்­சி­ய­மைத்­ததன் பின்னர் பள்­ளி­வா­சல்கள் பதிவு நட­வ­டிக்­கையில் இருந்த இறுக்­க­மான சட்ட நடை­மு­றை­களை தளர்த்­தினோம். இவ்­வா­றான நிலை­யிலும் எமது சமூ­கத்­தினர் பள்­ளி­வா­சல்­களை பதிவு செய்­வதில் நாட்­டம்­கொள்­ள­வில்லை.  குறிப்­பாக பள்­ளி­வாசல் நிர்­வா­கத்­தினர் அசட்­டை­யாக இருந்­தனர் என்­பதை நாம் சுட்­டிக்­காட்ட வேண்­டி­யுள்­ளது. இதனால் எதிர்­கால பிரச்­சி­னை­களை தவிர்ந்து கொள்­வ­தற்­காக பள்­ளி­வா­சல்­களை பதி­யு­மாறு வலி­யு­றுத்தி இந்த நட­மாடும் சேவையை முன்­னெ­டுத்து வரு­கின்றோம். இதன்­மூலம் எமது எதிர்­கால சமூ­கத்­தினர் அமை­தி­யா­கவும் சுதந்­தி­ர­மா­கவும் இருக்க வேண்டும் என்ற நோக்­கத்­தையே கவ­னத்­திற்­கொண்டு செயற்­ப­டு­கின்றோம்.

அத்­துடன், நான் முஸ்லிம் சமய விவ­கார அமைச்சை பொறுப்­பேற்­றதன் பின்னர் இலங்கை ஹஜ் பயண ஏற்­பா­டு­களில் உள்ள முரண்­பா­டு­களை தவிர்க்க நட­வ­டிக்கை எடுத்தேன். இதனை நிரந்­த­ர­மாக்க ஹஜ் சட்­டத்தை கொண்டு வர முழு­மூச்­சாக செயற்­பட்­டு­வ­ரு­கின்றேன். அதன் இறுதிக் கட்ட நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. எனது பதவிக் காலத்­தி­லேயே அதனை நடை­மு­றைக்கு கொண்­டு­வ­ருவேன்.

இது­த­விர இன்னும் பல்­வேறு முன்­னெ­டுப்­புகள் இடம்­பெற்று வரு­கின்­றன. குறிப்­பாக, மத்­ர­ஸாக்­க­ளுக்­கான பாடத் திட்­ட­மொன்றை கொண்­டு­வ­ரு­வ­தற்கும் முயற்­சிகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றது என்றும் அவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

இந் நிகழ்வின்போது, 100 குடும்பங்களுக்கான குடிநீர் வசதிகள் ஏற்படுத்துவதற்கான நன்கொடை வழங்கப்பட்டதுடன், 20 மௌலவிகளுக்கு மதகுருமார்களுக்கான அடையாள அட்டை வழங்கப்பட்டது. இதுதவிர, அக்குறணையில் உள்ள பதியப்படாத பள்ளிவாசல்களுக்கு பதிவுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. கண் பரிசோதனை முகாம் ஒன்றும் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.