எனது வாழ்வில் இரு தட­வைகள் பள்­ளி­வாசல் படு­கொ­லை­களை சந்­தித்­தி­ருக்­கிறேன்

0 1,282

காத்­தான்­கு­டியைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட சபீர் இஸ்­மாயில், தற்­போது நியூ­ஸி­லாந்தின் க்ரைஸ்ட்சேர்ச் நகரில் வசித்து வரு­கிறார்.  ருகுணு பல்­க­லைக்­க­ழக பட்­ட­தா­ரி­யான இவர், கடந்த ஆறு வரு­டங்­க­ளாக நியூ­ஸி­லாந்தில் தொழில்­நி­மித்தம் தனது குடும்­பத்­துடன் வசித்து வரு­கிறார்.

கடந்த வெள்­ளிக்­கி­ழமை இடம்­பெற்ற பயங்­க­ர­வாத தாக்­கு­த­லி­லி­ருந்து மயி­ரி­ழையில் உயிர் தப்­பிய பலருள் இவரும் ஒருவர். இச் சம்­பவம் தொடர்­பான தனது நேரடி அனு­ப­வங்கள் அதன் பின்­ன­ரான நிகழ்­வுகள் தொடர்பில் அவர் ‘விடி­வெள்ளி’க்கு தெரி­வித்த கருத்­துக்­களை இங்கு தரு­கிறோம்:

நேர்­காணல் : எம்.பி.எம்.பைறூஸ்

 

Q காத்­தான்­குடி பள்­ளி­வாசல் படு­கொலை பற்­றிய அனு­ப­வங்கள் உள்ள உங்­க­ளுக்கு அதே­போன்­ற­தொரு அனு­பவம் மீண்டும் ஏற்­பட்­டி­ருக்­கி­றதே?

உண்­மைதான். காத்­தான்­குடி பள்­ளி­வாசல் படு­கொலை நடந்­த­போது எனக்கு 6 வயது. எனது வீட்­டுக்கு அண்­மை­யில்தான் புலி­களால் தாக்­கப்­பட்ட இரு பள்­ளி­வா­சல்­களும் இருக்­கின்­றன. பின்னர் நான் கல்வி கற்கும் காலத்தில் மட்­டக்­க­ளப்பில் நடந்த குண்டு வெடிப்­பு­க­ளையும் நேரில் கண்­டி­ருக்­கிறேன். இப்­படி யுத்­தத்தின் பாதிப்­பு­களை நேரில் அனு­ப­வித்த எனக்கு இந்த அமை­தி­யான நாட்­டிலும் மற்­று­மொரு பள்­ளி­வாசல் படு­கொ­லையைச் சந்­திக்க வேண்டி வந்­துள்­ளது. எல்லாம் அல்­லாஹ்வின் ஏற்­பாடு என்­பதை நாம் பொருந்திக் கொள்­ளத்தான் வேண்டும்.

Q  அன்­றைய தினம் என்ன நடந்­தது? நீங்கள் பள்­ளி­வா­ச­லினுள் இருந்­தீர்­களா?

தாக்­குதல் நடந்த அந் நூர் பள்­ளி­வா­ச­லுக்கு மிக அரு­கா­மை­யில்தான் எனது வீடு இருக்­கி­றது. வழக்­க­மாக ஜும்ஆ ஆரம்­பிப்­ப­தற்கு 30 நிமி­டங்­க­ளுக்கு முன்­னரே நான் பள்­ளிக்குச் சென்று விடுவேன். நானும் எனது சோமா­லிய நாட்டு நண்பர் ஒரு­வ­ரும்தான் காரில் பள்­ளிக்குச் செல்வோம். அன்­றைய தினம்  என்னை அழைத்துச் செல்­வ­தற்­காக  சோமா­லிய நாட்டு நண்பர் வரும் வரை காத்­தி­ருந்தேன். நேர­மா­கியும் அவர் வரா­ததால் அவ­ருக்கு அழைப்­பெ­டுத்த போது தான் தூங்­கி­விட்­ட­தா­கவும் உட­ன­டி­யாக வரு­வ­தா­கவும் கூறினார். பின்னர் அவர் வந்­ததும் நாம் வழக்­க­மாகச் செல்­வதை விட 10 நிமி­டங்கள் தாம­தித்துச் சென்று பள்­ளி­வாசல் வளா­கத்தை நெருங்­கிய போதுதான் பலரும் ஓடு­வதைக் கண்டோம். எங்­க­ளையும் பள்ளிப் பக்கம் போக வேண்டாம் என்­றார்கள். அந்த நேரத்­தில்தான் பள்­ளிக்குள் துப்­பாக்கிச் சூடு நடந்து கொண்­டி­ருந்­தது. நாங்கள் உட­ன­டி­யாக எங்கள் காரைத் திருப்பி பள்­ளிக்குப் பின்­பு­ற­மா­க­வுள்ள வீதியில் வந்து நின்றோம்.

எனது சோமா­லிய நண்­பரின் தந்தை முன்­னரே பள்­ளிக்குள் சென்­றி­ருந்தார். அந்த சோமா­லிய நண்பர்  எமது இமா­முக்கு இறைச்­சிகள் அடங்­கிய ஒரு பெட்­டியை அன்­ப­ளிப்­பாக வழங்­கு­வ­தற்­காக காரில் கொண்டு வந்­தி­ருந்தார். அதனை காரி­லி­ருந்து இறக்­கு­வ­தற்­காக நண்­பரின் தந்­தையை பள்­ளி­யி­லி­ருந்து வெளியே வரு­மாறு நாம் முன்­னரே தொலை­பே­சியில் சொல்­லி­யி­ருந்தோம். அதற்­க­மைய அவரும் பள்­ளிக்கு வெளியே வந்து எமக்­காகக் காத்­தி­ருந்தார். இதனால் அவரும் இந்த தாக்­கு­த­லி­லி­ருந்து உயிர் தப்­பி­விட்டார்.

வழக்­க­மாக எமது பள்­ளியில் முதலில் அரபு மொழியில் 5 நிமி­டங்கள் குத்பா பிர­சங்கம் நடக்கும். அதன் பின்­னரே ஆங்­கி­லத்தில் நடக்கும். இமாம் அரபு மொழியில் முடித்­து­விட்டு ஆங்­கி­லத்தில் ஆரம்­பிக்கும் போதே தாக்­கு­தலும் ஆரம்­ப­மா­கி­யி­ருக்­கி­றது. அச் சமயம் சுமார் 250 பேர­ளவில் ஜும்­ஆ­வுக்­காக வந்­தி­ருப்­பார்கள்.

எமது அந்நூர் பள்­ளி­வா­ச­லில்தான் முதல் தாக்­குதல் நடந்­தது. அங்கு 43 பேர் மர­ணித்­தார்கள். பின்னர் அங்­கி­ருந்து சுமார் 15 நிமிட தூரத்­தி­லுள்ள லின்வூட் பள்­ளிக்குச் சென்று அங்கும் தாக்­கி­யி­ருக்­கிறான். அங்கும் 7 பேர் மர­ணித்­தார்கள்.

Q பேஸ்­புக்கில் நேர­டி­யாக ஒளி­ப­ரப்பிக் கொண்டே இந்தத் தாக்­கு­தலை நடத்­தி­யி­ருக்­கிறான். இதனை பொலிசார் அறிந்து தடுக்க முன்­வ­ர­வில்­லையா?

இந்த நபர் பொலி­சாரின் கண்­கா­ணிப்புப் பட்­டி­யலில் இல்­லா­தவன். இதற்கு முன்னர் குற்­றங்­க­ளையோ சட்­ட­வி­ரோதச் செயல்­களோ செய்­த­தாக பதி­வுகள் இல்லை. முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வெறுப்புப் பேச்சில் ஈடு­பட்­ட­தா­கவும் தக­வல்கள் இல்லை. அவன் தனது தனிப்­பட்ட கணக்கில் அதனை  ஒளி­ப­ரப்­பி­யதால் யாரும் அதனை அறிந்­தி­ருக்­க­வில்லை.

பொலிஸ் நிலையம் பள்­ளி­வா­ச­லுக்கு அண்­மை­யில்தான் இருக்­கி­றது. ஆனாலும் சம்­பவம் நடந்து 15 அல்­லது 20 நிமி­டங்­க­ளுக்குப் பின்­னரே பொலிசார் அங்கு வந்­தனர். அது மட்­டு­மன்றி அம்­பி­யூ­லன்ஸ்­களைக் கூட பொலிசார் உட­ன­டி­யாக பள்­ளி­வா­ச­லுக்குள் செல்ல அனு­ம­திக்­க­வில்லை.

தாக்­கு­தல்­தா­ரிகள் இன்னும் அங்கு இருக்­கலாம் என்ற அச்­சமே அதற்குக் காரணம். அந்த நேரத்தில் 2 அம்­பி­யூ­லன்ஸ்கள் மட்­டும்தான் ஸ்தலத்­துக்கு வந்­தன. இது போதாது, பலர் காயப்­பட்­டி­ருக்­கி­றார்கள் எனக் கூறி எமது சகோ­த­ரர்­கள்தான் சென் ஜோன்ஸ் அம்­பி­யூ­லன்ஸ்­களை வர­வ­ழைத்­தார்கள். இது இவர்­க­ளுக்கு புதிய அனு­பவம். இதற்கு முன்னர் இவ்­வா­றான நெருக்­கடி நிலை­மை­களை இவர்கள் எதிர்­கொண்­ட­தில்லை.

இங்கு சட்­டங்கள் மிக இறுக்­க­மாகும். காய­ம­டைந்­தோரை நினைத்­த­மா­திரி நாம் தூக்கிக் கொண்டு தனிப்­பட்ட வாக­னங்­களில் கொண்டு செல்ல முடி­யாது. அம்­பி­யூ­லன்ஸ்­க­ளில்தான் கொண்டு செல்ல வேண்டும். அதனால் அம்­பி­யூ­லன்ஸ்கள் வர அதிகம் தாம­த­மா­ன­மையும் பலர் உயி­ரி­ழக்க காரணம் என நாம் நம்­பு­கிறோம். அதிக இரத்த இழப்பு ஏற்­பட்டே பலர் உயி­ரி­ழந்­தி­ருக்­கி­றார்கள்.

Q ஜனா­ஸாக்­களை அடக்­கு­வதில் ஏன் இவ்­வ­ளவு தாமதம்?

இன்­று­வரை (வியா­ழக்­கி­ழமை) 15 ஜனா­ஸாக்­களே அடக்கம் செய்­யப்­பட்­டி­ருக்­கின்­றன. இங்கு சட­லங்­களை பிரேத பரி­சோ­தனை செய்­வ­தற்கு நிறைய சட்ட ஏற்­பா­டுகள் உள்­ளன. அத்­துடன் சட­லங்­களை சரி­யாக அடை­யாளம் கண்டு உற­வி­னர்­கள்தான் ஒப்­ப­மிட்டு பொறுப்­பேற்க வேண்டும்.  இந்த தாமதம் எமக்கு விரக்­தியைத் தந்­தாலும் இந்த நாட்டின் சட்­டத்­திற்கு கட்­டுப்­பட்­டுத்தான் ஆக வேண்டும்.

உயி­ரி­ழந்த அனை­வ­ருக்­கா­கவும் இந்த வெள்­ளிக்­கி­ழமை இங்கு பொது­வான ஜனாஸாத் தொழு­கையும் இரங்கல் கூட்­டமும் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. நியூ­ஸி­லாந்து பிர­த­மரும் அதில் பங்­கேற்று உரை­யாற்­ற­வுள்­ள­தாக அறி­கிறேன்.

சம்­பவம் நடந்த பள்­ளி­வா­சல்கள் மூடப்­பட்­டுள்­ளன. அவற்றை கழுவித் திருத்தி மீண்டும் தொழு­கை­களை ஆரம்­பிப்­ப­தற்­காக ஓரிரு தினங்­களில் கைய­ளிப்­ப­தாக பொலிசார் அறி­வித்­தி­ருக்­கி­றார்கள்.

Q உயி­ரி­ழந்­த­வர்­களில் பலரை உங்­க­ளுக்கு நன்கு தெரிந்­தி­ருக்கும் என நினைக்­கிறேன்?

கிட்­டத்­தட்ட இரு பள்­ளி­வா­சல்­க­ளிலும் மர­ணித்த எல்­லோ­ருமே எனக்கு நன்கு அறி­மு­க­மா­ன­வர்­கள்தான். நாங்கள் எல்­லோரும் இங்கு ஒரே குடும்­ப­மா­கவே பழ­குவோம். எமக்கு பள்­ளி­வா­சல்தான் எல்­லாமே. வேலை முடிந்தால் நாம் பள்­ளி­வா­சல்­க­ளில்தான் சந்­தித்துக் கொள்வோம். இங்கு போது­மான இஸ்­லா­மிய சூழல் இல்­லா­ததால் நாம் பள்­ளி­யையே அதிகம் நாடி­யி­ருக்­கிறோம்.

அந்தப் பள்­ளிதான் எமக்கு எல்­லாமே. இந்தப் பகு­தியில் வசிக்கும் முஸ்­லிம்கள் அனை­வரும் இங்­குதான் தொழ வருவோம். பள்­ளி­வா­ச­லுக்கு மனைவி, பிள்­ளை­களை அழைத்துச் செல்வோம்.

பள்­ளியில் நடக்கும் இஸ்­லா­மிய வகுப்­பு­களில் நாங்கள் பங்­கேற்போம். எல்­லோரும் எங்கள் வீட்­டுக்கு வரு­வார்கள். நாங்கள் அவர்­க­ளது வீடு­க­ளுக்குச் செல்வோம். இவ்­வாறு அனை­வரும் மிகவும் நெருக்­க­மா­கவே வாழ்ந்து வரு­கிறோம்.

இந்த சம்­பவம் என்னை கடு­மை­யாக பாதித்­துள்­ளது. இவர்­க­ளது இழப்­பு­களை என்னால் தாங்க முடி­யா­துள்­ளது. உடன் பிறப்­பு­களை இழந்­தது போன்ற வேத­னையில் நான் உள்ளேன்.

தாக்­குதல் நடந்த முதல் நாளில் இனி நியூ­ஸி­லாந்து வேண்டாம்… இலங்­கைக்கே சென்­று­வி­டுவோம் என தீர்­மானம் எடுக்­கு­ம­ள­வுக்கு நான் வந்தேன். ஆனாலும் அதன் பின்னர் இந்த நாட்டின் அர­சாங்­கமும் மக்­களும் எம் மீது காட்­டு­கின்ற அன்பும் எமக்கு வழங்­கு­கின்ற ஆறு­தலும் நம்­பிக்­கையைத் தரு­கின்­றன. இங்கு தொடர்ந்தும் வாழ்­வதில் எந்தப் பிரச்­சி­னை­யு­மில்லை என்ற நம்­பிக்­கையை தினம் தினம் அவர்கள் எமக்குத் தந்து கொண்­டி­ருக்­கி­றார்கள். அல்­ஹம்­து­லில்லாஹ்.

Q இந்தத் தாக்­கு­த­லுக்குப் பிறகு நியூ­ஸி­லாந்து அர­சாங்கம் முஸ்­லிம்­க­ளுக்கும் இஸ்­லாத்­துக்கும் ஆத­ர­வாக நடந்து கொள்­வது பற்றி என்ன நினைக்­கி­றீர்கள்?

இந்தத் தாக்­கு­தலின் பின்­ன­ரான நியூ­ஸி­லாந்து அர­சாங்­கத்­தி­னதும் அந்­நாட்டு மக்­க­ளி­னதும் செயற்­பா­டுகள் எம்மை 100 வீதம் திருப்­திப்­ப­டுத்­து­வ­தாக உள்­ளன. நாம் இதனால் மகிழ்ச்­சி­ய­டை­கிறோம்.

நியூ­ஸி­லாந்­தி­ட­மி­ருந்து இலங்கை போன்ற நாடுகள் கற்றுக் கொள்ள வேண்­டிய பாடங்கள் நிறைய இருக்­கின்­றன. இலங்­கையில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக எவ்­வ­ளவோ சம்­ப­வங்கள் நடந்தும் இலங்கை அர­சாங்கம் எவ்­வாறு அலட்­சி­ய­மா­கவும் பார­பட்­ச­மா­கவும் நடந்து கொண்­டது என்­பதை நாம் அறிவோம்.

நியூ­ஸி­லாந்தின் இந்த நகர்வு அதி விசே­ட­மா­னது. இந்த மக்கள் அடுத்­த­வர்­களின் உணர்­வு­களை நன்கு மதிக்கத் தெரிந்­த­வர்கள். இந்­த­ளவு தூரம் அன்பை வெளிப்­ப­டுத்­து­வார்கள் என யாரும் எதிர்­பார்க்­க­வில்லை. இந்த தாக்­கு­தலால் முழு நியூ­ஸி­லாந்­துமே தலை­கு­னிந்து நிற்­கி­றது. அவர்கள் எமக்கு முன் மிகவும் வெட்­கப்­ப­டு­கி­றார்கள்.

இது­வரை காலமும் எம்­மோடு பெரி­தாக நெருங்­காத எமது அய­ல­வர்கள் இன்று எமது வீடு­க­ளுக்­குள்­ளேயே வந்து இருக்­கி­றார்கள். ஆறுதல் சொல்லிக் கொண்­டி­ருக்­கி­றார்கள். உதவி செய்­கி­றார்கள்.

தற்­போது பாதிக்­கப்­பட்­டோ­ருக்கும் ஜனாஸா நல்­ல­டக்­கத்­திற்­கான தயார்­ப­டுத்­தலில் ஈடு­பட்­டி­ருக்கும் தொண்­டர்­க­ளுக்கும் தேவை­யான சகல உத­வி­க­ளையும் பாது­காப்­பையும் அவர்­களே முன்­வந்து வழங்­கு­கி­றார்கள். எமக்கு இப்­போது எந்த வேலையும் இல்லை. எல்­லா­வற்­றையும் அவர்­களே முன்­வந்து செய்­கி­றார்கள்.

இப் பகு­தியில் வாழும் சீக்­கி­யர்கள் கூட மிகவும் உத­வி­யாக இருக்­கி­றார்கள். அதி­க­மான சீக்­கி­யர்கள் இங்கு வாகன சார­தி­க­ளாக இருக்­கி­றார்கள். ஜனா­ஸாக்­களை தேவை­யான இடங்­க­ளுக்கு கொண்டு செல்ல தமது வாக­னங்­களை எந்த நேரத்­திலும் எடுத்­து­வரத் தயார் எனக் கூறிச் சென்றார்கள்.

Q இந்த சம்பவத்தின் பின்னர் நியூஸிலாந்தில் இஸ்லாம் பற்றியும் முஸ்லிம்கள் பற்றியும் நல்லபிப்பிராயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறதே?

உண்மைதான். இஸ்லாம் பற்றியும் முஸ்லிம்கள் பற்றியும் தற்போது நிறைய விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது.

நோன்பு காலங்களிலும் ஏனைய தொழுகை நேரங்களிலும் பணியிடங்களில் சலுகைகளை தருவார்கள்.  இதற்கு முன்னரும் இங்குள்ள மக்கள் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் மதித்து நடந்த போதிலும் இந்தளவு தூரம் விழிப்புணர்வு இருக்கவில்லை.

தற்போது இந்த ஷஹீதுகளின் பெயரால் இஸ்லாம் பற்றியதொரு அலை இந்த நாட்டில் தோற்றம் பெற்றுள்ளதைக் காண முடிகிறது.

Q நியூஸிலாந்து தாக்குதலை அடிப்படையாகக் கொண்டு பல பொய்யான செய்திகளும் பரவுகின்றனவே?

பேஸ் புக்கில் வரும் பல செய்திகள் எந்தளவு தூரம் அடிப்படையற்றவை, உண்மைக்குப் புறம்பானவை என இந்த சம்பவத்தின்போதுதான் நான் அறிந்து கொண்டேன். இங்கு எடுக்கப்படாத பல புகைப்படங்கள், பல வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பகிர்கிறார்கள். அவற்றை உடன் நிறுத்திக் கொள்ளுமாறு கேட்கிறேன்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.