புதிய ஹஜ் சட்­ட­மூலம் தயா­ரா­கி­றது

0 857
  • மஸி­ஹுத்தீன் இனா­முல்லாஹ்

இலங்­கையில் ஹஜ், உம்ரா பயண ஏற்­பா­டுகள் தனியார் துறை­யி­னா­லேயே பெரிதும் மேற்­கொள்­ளப்­பட்­டாலும் அவை தொடர்­பான சவூதி அரசு மற்றும் ஹஜ் உம்ரா சார் நிறு­வ­னங்­க­ளு­ட­னான பூர்­வாங்க பேச்­சு­வார்த்­தைகள் உடன்­பா­டுகள் மாத்­தி­ர­மன்றி இன்­னோ­ரன்ன உத்­தி­யோ­க­பூர்­வ­மான முகா­மைத்­துவம் மேற்­பார்வை ஒருங்­கி­ணைப்பு நட­வ­டிக்­கை­களை முஸ்லிம் சமய பண்­பாட்டு அலு­வல்கள் திணைக்­க­ளமும் ஜித்­தாவில் உள்ள இலங்கை தூத­ரக காரி­யா­ல­யமும் கவ­னித்து வரு­கின்­றமை நாம் அறிந்த விட­ய­மாகும்.

என்­றாலும் இது­வரை காலமும் ஹஜ், உம்ரா செயற்­பா­டு­களை ஒருங்­கி­ணைத்து முகாமை செய்யும் மேற்­படி செயற்­பா­டு­களை சட்­ட­ரீ­தி­யாக ஒழுங்­க­மைத்துக் கொள்­வ­தற்­கான சட்ட ஏற்­பாடு இல்­லா­ம­லி­ருந்­த­மையால் பல்­வேறு நடை­முறைப் பிரச்­சி­னை­களை சகல தரப்­பி­னரும் எதிர்­கொண்டு வந்­துள்­ளனர், சில சந்­தர்ப்­பங்­களில் மேற்­படி விவ­கா­ரங்கள் நீதி­மன்றம் வரை சென்று வந்­துள்­ள­மையும் குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

நீண்­ட­கா­ல­மாக ஹஜ் விவ­கா­ரங்­க­ளுக்கு பொறுப்­பாக இருந்த அமைச்­சர்கள் ஒரு ஹஜ் குழுவை நிய­மித்து முஸ்லிம் அலு­வல்கள் திணைக்­க­ளத்­துடன் மேற்­படி விவ­கா­ரங்­களை கையாண்டு வந்­த­போதும் அவை உத்­தி­யோ­க­பூர்­வ­மான பொறுப்­புக்­கூறல், வெளிப்­ப­டைத்­தன்மை ஆகிய பண்­பு­களைக் கொண்ட நிறு­வ­ன­ம­யப்­ப­டுத்­தப்­பட்ட பொறி­மு­றைக்குள் கொண்­டு­வ­ரப்­ப­டாமை பெரும் குறை­யா­கவே இருந்­தது. பல்­வேறு சந்­தர்ப்­பங்­களில் ஹஜ் சட்­ட­மூலம் தயா­ரிக்­கப்­பட்­டாலும் அந்த முயற்­சிகள் இது­வரை நிறைவு பெற­வில்லை.

அல்­ஹம்­து­லில்லாஹ். தற்­பொ­ழுது முஸ்லிம் கலா­சார விவ­கா­ரங்­க­ளிற்குப் பொறுப்­பா­க­வுள்ள அமைச்சர் ஹலீம்,  ஹஜ் சட்­ட­மூ­லத்தை தயா­ரிக்கும் பணி­களை துரி­தப்­ப­டுத்தி வரு­கின்­றமை வர­வேற்­கத்­தக்க ஒரு முயற்­சி­யாகும். தற்­பொ­ழுது ஹஜ் சட்­ட­மூல நகல் வரை­பொன்று தயார் செய்­யப்­பட்டு பல்­வேறு தரப்­பு­க­ளி­னதும் கலந்­தா­லோ­ச­னைக்கு உட்­ப­டுத்­தப்­பட்டு வரு­கி­றது.

அந்­த­வ­கையில் மேற்­படி ஹஜ், உம்ரா சட்ட நகல் வரைபு கடந்த பெப்­ர­வரி மாதம் 23 ஆம் திகதி கொழும்பு தபால் தலை­மை­யக கேட்போர் கூட அரங்கில் இடம்­பெற்ற முஸ்லிம் சமூக அமைப்­புகள், ஹஜ் முக­வர்கள்,  முஸ்லிம் சமய பண்­பாட்டு அலு­வல்கள் திணைக்­கள மற்றும் அமைச்சு  அதி­கா­ரிகள் கலந்­து­கொண்ட ஆலோ­சனைக் கூட்­டத்தில் விரி­வாக ஆராயப் பட்­டது. அதனைத் தொடர்ந்து கடந்த வியா­ழக்­கி­ழமை   முஸ்லிம்  பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளது கவ­னத்­திற்கு கொண்­டு­வ­ரப்­பட்­டது, பாரா­ளு­மன்ற கட்­டடத் தொகுதி குழு அறை­யொன்றில் அமைச்சர் ஹலீ­மினால் ஏற்­பாடு செய்­யப்­பட்ட கூட்­டத்தில் 21 உறுப்­பி­னர்­களில் கரி­ச­னை­யுடன் 7 உறுப்­பி­னர்­களே பங்­கு­பற்­றி­யி­ருந்­தனர்.

மேற்­படி கலந்­து­ரை­யா­டல்­க­ளுக்குப் பின்னர்  முஸ்லிம் அமைப்­புக்­களின் பிர­தி­நி­திகள், முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், முஸ்லிம் சமய பண்­பாட்டு அலு­வல்கள் திணைக்­கள மற்றும் அமைச்சு அதி­கா­ரிகள் கலந்து கொள்ளும் மற்­று­மொரு (இறு­திக்­கட்ட) ஆலோ­சனைக் கூட்டம் நாளை 26 ஆம் திகதி இடம்­பெறும் அதைத் தொடர்ந்து நகல் சட்­ட­மூலம் தயா­ரிக்கப் படு­வ­தற்­காக சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்­திற்கு சமர்ப்­பிக்­கப்­பட உத்­தே­சிக்­கப்­பட்­டுள்­ளது.

உத்­தேச சட்ட மூலம் முழு­மை­யா­னதா?

தற்­பொ­ழுது வரை­யப்­பட்­டுள்ள நக­லின்­படி அது அதி­கா­ர­ம­ளிக்­கப்­பட்ட ஒன்­ப­துபேர் கொண்ட ஒரு ஹஜ் குழுவை நிய­மிப்­பது தொடர்­பாக மாத்­தி­ரமே எழு­தப்­பட்­டுள்­ளது. இதில் கணி­ச­மான உறுப்­பி­னர்கள் ஹஜ் விவ­கார அமைச்­ச­ரினால் நிய­மனம் செய்­யப்­ப­டுவர் என்­ப­தனை அமைச்சர் இரு­வ­ரையும் ஏனை­ய­வர்கள் பிர­தான சமூக நிறு­வ­னங்­களின் சிபா­ரிசின் பேரிலும் அமைச்சு மற்றும் திணைக்­கள அதி­கா­ரி­க­ளையும் கொண்­டி­ருத்தல் வேண்டும் என்றும் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் வலி­யு­றுத்­தி­யுள்­ளனர்.

இதே­வேளை, ஹஜ் குழு தெரிவு மாத்­தி­ர­மன்றி ஹஜ், உம்ரா நிறு­வ­னங்­களின் பதிவு தொடர்­பான நிபந்­த­னைகள், நிதிக் கையா­ளுகை, பொறுப்­புக்­கூறல், வெளிப்­ப­டைத்­தன்மை சார் நிய­மங்கள், பயண ஏற்­பா­டுகள் தொடர்­பான வழி­காட்­டல்கள், முஸ்லிம் விவ­காரத் திணைக்­களம், ஜித்­த­ாவி­லுள்ள இலங்­கை கொன்ஸல் ஜெனரல் காரி­யா­ல­யங்­க­ளுடன் தொடர்­பு­படும் பணிகள்,  சட்­டங்கள் மீறப்­ப­டு­கின்­ற­போது எடுக்­கப்­ப­டு­கின்ற நட­வ­டிக்­கைகள், பாதிக்­கப்­படும் யாத்­தி­ரி­கர்­க­ளது நலன்கள், இழப்­பீ­டுகள் என இன்­னோ­ரன்ன பின் இணைப்­புக்­களும் தயா­ரா­னதன் பின்னர் முழு­ம­யான சட்ட வரைவை அவ­ச­ரப்­ப­டாது சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்தில் சட்ட வரை­ஞர்­க­ளிடம் ஒப்­ப­டைப்­பதே சிறந்­தது என்­பதே எனது தனிப்­பட்ட அபிப்­பி­ரா­ய­மாகும்.

இன்ஷா அல்லாஹ் நாளை 26 ஆம் திகதி இடம்­பெ­ற­வுள்ள கூட்­டத்தில் மேற்­படி விட­யங்­களும் விரி­வாக கலந்­து­ரை­யா­டப்­பட்டு அவ­ச­ரப்­ப­டாது இந்த வர­லாற்று முக்­கி­யத்­துவம் வாய்ந்த விட­யத்­தினை முஸ்லிம் விவ­கார அமைச்சும் திணைக்­க­ளமும் மேற்­கொள்­வதே சிறந்­த­தாகும்.

இன்றேல் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக நிய­மிக்­கப்­படும் ஹஜ் குழு­வி­னதும் ஏனைய தரப்­புக்­க­ளி­னதும் நியா­யா­திக்­கங்கள், கடப்­பா­டுகள், வரை­முறை எல்­லைகள், அவர்­க­ளது அதி­கா­ரங்கள் ஹஜ் உம்ரா நிறு­வ­னங்கள் மீதான நிபந்­த­னைகள், கடப்­பா­டுகள், நிதி கையா­ளுகை தொடர்­பான வழி­காட்­டல்கள் எது­வுமே இல்­லாத நிலையில் உத்­தேச ஹஜ் குழு­வி­னரும் பல்­வேறு சவால்­களை எதிர்­கொள்ள வேண்­டிய நிலையே ஏற்­படும்!

நுகர்வோர், பய­னா­ளிகள், சேவை பெறு­னர்­க­ளது நலன்கள் குறித்து தெளி­வான சட்ட திட்­டங்கள் உள்­ள­டக்­கப்­ப­டாது எந்­த­வொரு அதி­கார சபை­க­ளுக்கும் சட்­டங்கள் இயற்­றப்­பட முடி­யாது, அதே­போன்று அவர்­க­ளது நலன்கள் அதி­கார சபை­களின் சுயேச்­சை­யான தீர்­மா­னங்­களால் அவ்­வப்­போது மேலா­திக்கம் செய்­யப்­ப­டவும் முடி­யாது, ஆகவே முஸ்­லிம்­க­ளது புனித யாத்­திரை குறித்த சட்­ட­மூலம் தயா­ரா­கும்­போது பய­னா­ளிகள் அல்­லது யாத்­தி­ரி­கர்­க­ளது நலன்கள் எவ்­வாறு பேணப்­ப­டு­கின்­றன என்ற தெளி­வான சட்­ட­திட்­டங்கள் ஹஜ் உம்ரா சட்­ட­மூ­லத்தில் உள்­ள­டக்­கப்­ப­டாது சட்­ட­வ­ரைஞர் திணைக்­க­ளத்­திற்கு அனுப்­பப்­ப­டு­வதோ பாரா­ளு­மன்­றத்தில் சமர்­பிக்­கப்­பட்டு சட்­ட­மாக்­கப்­ப­டு­வதோ  பிர­தான பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வாக அமையப் போவ­தில்லை.

2002- – 2004 காலப்­ப­கு­தியில் அமைச்சர் ரவூப் ஹக்­கீமின் வேண்­டு­கோளின் பெயரில் ஹஜ் குழு­விற்கு பொறுப்­பா­கவும் பின்னர் 2005 – -2007 காலப் பகு­தியில் ஜித்­தாவில் இலங்கை கொன்ஸல் ஜென­ர­லா­கவும் இருந்த காலப்­ப­கு­தியில் இந்த ஹஜ் உம்ரா விவ­காரம் இங்கும் அங்கும் எவ்­வாறு கையா­ளப்­ப­டு­கின்­றது, எத்­த­கைய சவால்கள், பிரச்­சி­னைகள்  எழு­கின்­றன என்­பது குறித்து ஓர­ளவு நேர­டி­யாக அறிந்­து­கொள்ள முடி­யு­மாக இருந்­தது.

முகவர் நிறு­வ­னங்­களை பதிவு செய்தல் தொடர்­பான நிபந்­த­னைகள்

குறிப்­பாக ஹஜ் முகவர் நிறு­வ­னங்­களைப் பொறுத்­த­வரை அவர்­களைத் தெரிவு செய்­யும்­போது சர்­வ­தேச அள­விலும் இலங்­கை­யிலும் சுற்­று­லாத்­துறை மற்றும் பயண ஏற்­பா­டுகள் சார்ந்த இன்­னோ­ரன்ன கடப்­பா­டுகள், நிபந்­த­னை­களை அவர்கள் கொண்­டி­ருக்­கி­றார்­களா? என்­ப­தனை உறு­தி­செய்து பதிவு செய்­கின்ற ஒரு பொறி­முறை கட்­டா­ய­மாகும். இலங்கை சுற்­று­லாத்­துறை அமைச்சில் அவர்­க­ளது சுற்­றுலா மற்றும் பயண முக­வர்­களை பதிவு செய்­வ­தற்கு கண்­டிப்­பான பல நிபந்­த­னைகள் இருக்­கின்­றன.

உ+ம்: ஹஜ் உம்ரா முக­வர்­களை பதிவு செய்யும் பொழுது இலங்கை சுற்­று­லாத்­துறை அதி­கார சபை விதிக்­கின்ற நிபந்­த­னைகள் போன்று அவர்­க­ளது வர்த்­தக பதிவு, காரி­யா­லயம், கணக்­காய்வு அறிக்­கைகள், ஆத­னங்கள், வங்கிக் கொடுக்கல் வாங்­கல்கள் சார்ந்த கிரிப் அறிக்கை பொலிஸ் அறிக்கை என இன்­னோ­ரன்ன ஆவ­ணங்கள் உத்­த­ர­வா­தங்கள் பெறப்­படல் வேண்டும், அதே­போன்று பய­ன­ளி­க­ளுடன் செய்து கொள்­ளப்­படும் உடன்­ப­டிக்கை பின் இணைப்­பாக சேர்க்­கப்­பட வேண்டும்.

2003 ஆம் ஆண்டு என நினைக்­கின்றேன் குறிப்­பிட்ட ஒரு முகவர் சுமார் 300 ஹஜ் யாத்­தி­ரி­கர்­க­ளுக்கு பயண ஏற்­பா­டு­களை செய்­து­விட்டு துல்ஹஜ் 5, 6ஆம் நாட்கள் விமான நிலை­யத்­திற்கு வர­வ­ழைத்து விமானம் இல்­லாமல் ஹாஜி­களை தவிக்­க­விட்டார், சவூதி விமான சேவை மற்றும் சவூதி தூதுவர் மூலம் பல முயற்­சிகள் செய்தும் விமானம் கிடைக்­க­வில்லை.

யாத்­தி­ரி­கர்கள் அமைச்­ச­ரையும் எங்­க­ளையும் முஸ்லிம் விவ­காரத் திணைக்­க­ளத்­தையும் திட்டித் தீர்த்­தனர், அச்­சு­றுத்­தினர், ஆனால் தனி­யார்­துறை பயண ஏற்­பா­டு­க­ளுக்கு அரசு எவ்­வாறு பதில் கூற முடியும்? என்­றாலும் அன்­றி­ருந்த சவூதி தூதுவர் முஹம்மத் மஹ்மூத் அல் அலி மற்றும் சவூதி அரே­பி­யாவில் உள்ள சில அதி­கா­ரி­களை தொடர்­பு­கொண்டு துல்ஹாஜ் 7 ஆம் நாள் அதி­காலை யாத்­தி­ரி­கர்­களை அனுப்பி வைத்தோம்.

அதே­போன்று, மக்கா, மதீனா, மினா, அரபா போன்ற இடங்­களில் யாத்­தி­ரி­கர்கள் முக­வர்­களின் கவன­யீ­னங்­களால் எதிர்­கொள்ளும் பிரச்­சி­னைகள் சில வேளை­களில் நோயுற்­ற­வர்­களை நாட்­டுக்கு அனுப்பி வைப்­ப­தி­லுள்ள சவால்கள் என இன்­னோ­ரன்ன விட­யங்­களில் தெளி­வான வழி­காட்­ட­ல்கள் அல்­லது ஒழுக்­காற்று மற்றும் சட்ட நட­வ­டிக்­கைகள் எடுப்­ப­தற்­கான ஏற்­பா­டுகள் இல்­லா­மையை காண முடிந்­தது.

ஹஜ் நிதியம், கணக்­காய்­வுகள்

அதே­போன்றே முஸ்லிம் விவ­காரத் திணைக்­களம் ஹஜ் குழு­வி­ன­ருடன் ஒருங்­கி­ணைப்பு நட­வ­டிக்­கை­களில் ஜித்­தாவில் உள்ள கொன்­ஸி­யூலர் காரி­யாலயம் எதிர்­கொண்ட சவால்­களும் இருக்­கின்­றன, மக்­கா­வி­லுள்ள இலங்கை இல்­லத்தை பயன்­ப­டுத்­துதல், விமான நிலைய தொண்டர் சேவைகள், மருத்­துவ சேவைகள், அவற்­றிற்­கான நிதி ஒதுக்­கீ­டுகள் என பல சவால்­களை எதிர்­கொள்ள வேண்­டி­யி­ருந்­தது, 2007 ஆம் ஆண்டு முதல் எனது வேண்­டு­கோளின் பின்­னரே வெளி­வி­வ­ாகர அமைச்­சினால் முறையான ஒரு நிதி­யொ­துக்­கீடு செய்து தரப்­பட்­டது.

அதி­கா­ர­ம­ளிக்­கப்­ப­டு­கின்ற ஹஜ் குழு­வினர் ஹஜ் – உம்ரா பய­ணி­களின் நலன்கள் தவிர்த்து வேறு நிதி­யங்­களை ஏற்­ப­டுத்­தவோ பொது சேவைகள் மனித நேயப் பணிகள் செய்­யவோ, கட­மை­யில்­லாத ஏழை­களை ஹஜ்­ஜுக்கு அனுப்­பவோ இப்­போ­தைக்கு கவனம் செலுத்த வேண்­டிய தேவை கிடை­யாது, ஆனால் நன்கு ஆரா­யப்­பட்ட, கலந்­தா­லோ­சிக்­கப்­பட்ட திட்­டங்­களை பின்னர் அறி­முகம் செய்­வதில் தவ­றில்லை.

இவ்வா­றான கருத் திட்­டங்கள் யாத்­தி­ரி­கர்­க­ளி­ட­மி­ருந்து பெறப்­படும் நிதி­யினால் மேற்­கொள்­ளப்­படக் கூடாது, ஏனெனில் யாத்­தி­ரையை மேற்­கொள்ளும் பெரும்­பான்­மை­யா­ன­வர்கள் வருடா வருடம் ஸகாத் கொடுக்­கு­ம­ளவு பணக்­கா­ரர்கள் அல்ல. தமது அல்­லது பெற்­றோர்­க­ளது வாழ்­நாள கன­வு­களை நிறை­வேற்ற நீண்ட கால­மாக சிர­மங்­க­ளுக்கு மத்­தியில் சேமிக்­கப்­படும் பணத்­தி­னாலும் சிலர் யாத்­திரை மேற்­கொள்­கின்­றனர், அதேபோல் ஹஜ்­ஜா­ஜி­க­ளி­ட­மி­ருந்து ஹஜ்­குழு அற­வி­டப்­படும் தொகை­களை யாத்­தி­ரி­கர்­க­ளி­ட­மி­ருந்தே அவர்கள் பெற­வேண்­டிய கடப்­பாடு இருப்­ப­தனால் யாத்­திரி­கர்கள் மீதான சுமைகள் அதி­க­ரிக்­காத வண்ணம் சட்­டங்கள் இயற்­றப்­படல் வேண்டும்.

இங்­கி­ருந்து தொண்­டர்­களை அல்­லது அதி­கா­ரி­களை அனுப்பும் பொழுதும் கடந்த காலங்­களில் ஹஜ்­ஜா­ஜி­க­ளி­ட­மி­ருந்து அற­வி­டப்­படும் பணம் பொறுப்­புக்­கூறல், வெளிப்­படைத் தன்­மைகள் இல்­லாமல் கையா­ளப்­பட்­டமை பலரும் அறிந்த விட­ய­மாகும், எனவே இவ்­வா­றான சேவைகள் குறித்தும் அழைத்துச் செல்­லப்­படும் தொண்­டர்கள் குறித்தும் சில தெளி­வான வழி­காட்­டல்கள் அவ­சி­யப்­ப­டு­கின்­றன.

மக்­காவில் உள்ள இலங்கை இல்லம்

எமது முன்­னோர்­களால் இலங்கை யாத்­தி­ரி­கர்­க­ளுக்­காக அமைக்­கப்­பட்ட மக்கா இல்லம் தற்­பொ­ழுது ஹரத்தின் விஸ்­தீ­ர­ணத்­திற்­காக அகற்­றப்­பட்டு வழங்­கப்­பட்ட நஷ்­ட­ஈட்டின் மூலம் அதனை பரா­ம­ரிப்­ப­தற்கும் மீட்­டெ­டுப்­ப­தற்கும் இலங்கை அர­சு­டனும் தூது­வ­ரா­ல­யங்­க­ளு­டனும் ஒத்­து­ழைத்த சக­ல­ரதும் நம்­பிக்­கைக்கும் விசு­வா­சத்­திற்­கு­மு­ரிய இலங்கை சவூதிப் பிரஜை அஷ்ஷெய்க் சாதிஹான் அவர்­க­ளது முயற்­சி­களின் பல­னாக இன்று அசீ­சி­யாஹ்வில் ஒரு கட்­டடம் பெறப்­பட்டு மேற்­பார்வை செய்­யப்­பட்டு வரு­கி­றது.

எனவே, ஹஜ், உம்ரா யாத்திரிகர்களின் நலன்கள் பேணக்கூடிய வகையில் தற்பொழுது இலங்கை இல்லத்தின் மேலாளராக அதிகாரமளிக்கப்பட்டுள்ள சாதிஹானுடன் முஸ்லிம் சமய கலாசார திணைக்களம் சவூதியிலுள்ள இலங்கை தூதுவராலயம், ஜித்தாவிலுள்ள கொன்ஸல் ஜெனரல் காரியாலயம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் மிகத் தெளிவான உடன்பாடுகளை வழிகாட்டல்களை உத்தியோகபூர்வமாக செய்துகொள்வது கட்டாயமாகும்.

மக்கா இல்லம் அகற்றப்பட அறிவித்தல் வழங்கப்பட்டிருந்த நிலையில் 2005 – -2007 காலப் பகுதியில் (சொந்த செலவிலும்) அதனை மீட்கப் போராடிய சாதிஹான் மற்றும் இலங்கை தூதாண்மைகளுக்கு ஏற்கனவே வபாத்தாகிவிட்ட வக்பு செய்த முன்னோர்களின் வாரிசுகளை கண்டறிந்து அவர்களிடமிருந்து அதிகாரமளிக்கப்பட்ட ஆவணங்களை பெறுவதற்கு இலங்கை முன்னணி முஸ்லிம் சட்டத்தரணிகளை சவூதியிற்கான முன்னாள் தூதுவர்களை கொண்ட ஒரு குழுவினை நியமிக்குமாறு  இலங்கை வெளிவிவகார அமைச்சிற்கு அன்று கொன்ஸல் ஜெனரலாக இருந்தபோது நான் ஆலோசனை வழங்கியமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

முன்னாள் முஸ்லிம் விவகார அமைச்சர்கள், முன்னாள் சவூதி அரேபியாவிற்கான தூதுவர்கள், மக்காவில் உள்ள இலங்கை சவூதிப் பிரஜை தற்போதைய இலங்கை இல்ல மேலாளர் சகலரும் நன்றியுடன் நினைவு கூரப்பட வேண்டியவர்களாவர்.

ஹஜ் சட்டத்தில் ஏற்பாடுகள்  இல்லாவிட்டாலும் மேற்படி மக்கா இலத்தினை இலங்கை வக்பு சபையிலாவது பதிவு செய்து கொள்வது சிறந்ததாகும்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.