கல்­முனை விவகாரம்: அர­சியல் குளிர்காய்தல்

0 795
  • எஸ்.றிபான்

கல்­முனைத் தொகு­தியில் மீண்டும் அர­சியல் புயல் உக்­கி­ர­மாக வீசத் தொடங்­கி­யுள்­ளது. இதனால், கல்­முனைத் தொகு­தியை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்திக் கொண்­டி­ருக்கும் முஸ்லிம் காங்­கி­ரஸின் பிரதித் தலை­வரும், இரா­ஜாங்க அமைச்­ச­ரு­மான எச்.எம்.எம்.ஹரீஸ் மற்றும் ஏனைய கட்­சி­களை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்திக் கொண்­டி­ருக்கும் அர­சி­யல்­வா­திகள் அனை­வரும் தலை­யி­டிக்­குள்­ளாகிக் காணப்­ப­டுகின்­றார்கள். கல்­முனை மாந­கர சபை­யி­லி­ருந்து பிரிந்து தனி­யான உள்­ளூ­ராட்சி சபை தரப்­பட வேண்­டு­மென்று சாய்ந்­த­ம­ருது பிர­தே­சத்­த­வர்கள் கிளர்ச்சி செய்து கொண்­டி­ருக்­கின்­றார்கள். இவர்­களை சாய்ந்­த­ம­ருது பெரிய பள்­ளி­வாசல் நிர்­வாகம் வழி­ந­டத்திக் கொண்­டி­ருக்­கின்­றது. மறு­பு­றத்தில் கல்­முனை பிர­தேச செய­ல­கத்­தி­லி­ருந்து பிரித்து தனி­யான அதி­கா­ர­மு­டைய பிர­தேச செய­ல­க­மொன்று தரப்­பட வேண்­டு­மென்று தமி­ழர்­களும் கிளர்ந்­தெ­ழுந்து கொண்­டி­ருக்­கின்­றார்கள். இவர்­களை தமிழ் அர­சியல் கட்­சிகள் வழிப்­ப­டுத்திக் கொண்­டி­ருக்­கின்­றன. நீண்ட கால­மாக இந்த இரு­வ­கை­யான கோரிக்­கை­களும் இருந்து கொண்­டி­ருக்­கின்­றன. இக்­கோ­ரிக்­கை­களை நிறை­வேற்றும் போது கல்­முனை பிர­தேச முஸ்­லிம்­களின் ஆளு­மையில் பாரிய பின்­ன­டை­வு­களை ஏற்­ப­டுத்தும் என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றன. அதே வேளை, எந்தப் பாதிப்­பையும் ஏற்­ப­டுத்­தா­தென்று பெரும்­பான்­மை­யான சாய்ந்­த­ம­ருது மக்கள் தெரி­வித்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். ஆயினும், இந்த இரண்டு கோரிக்­கை­களும் ஒன்­றுடன் ஒன்று பிணைந்­துள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

பிரிந்தால் என்ன நடக்கும்?

கல்­முனை பிர­தேச செய­ல­கத்தின் கீழ் தமி­ழர்­களின் நலன்­களை கருத்திற் கொண்டு உரு­வாக்­கப்­பட்ட உப பிர­தேச செய­லகம் இயங்கிக் கொண்­டி­ருக்­கின்­றது. இந்த உப (தமிழ்) பிர­தேச செய­லகம் இன ரீதியாக உரு­வாக்­கப்­பட்­ட­தாகும். இதனை முழு­மை­யான அதி­கா­ரங்­களைக் கொண்­ட­தொரு பிர­தேச செய­ல­க­மாக தரம் உயர்த்தித்தர வேண்­டு­மென்று தமி­ழர்கள் கோரிக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். இந்த உப (தமிழ்) பிர­தேச செய­ல­கத்தின் கீழ் 29 கிராமப் பிரி­வுகள் காணப்­ப­டு­கின்­றன. இதே வேளை, கல்­முனை பிர­தேச செய­ல­கத்தின் கீழ் உள்ள 29 முஸ்லிம் கிராமப் பிரி­வுகள் கல்­முனை பிர­தேச செய­ல­கத்தின் நேரடிக் கண்­கா­ணிப்பின் கீழ் இருக்­கின்­றன.

இவ்­வாறு 58 கிராமப் பிரி­வுகள் உள்ள பிர­தேச செய­ல­கத்தை இரண்­டாகப் பிரிப்­பது நிர்­வாக நடை­மு­றைக்கு இல­கு­வா­கவே இருக்கும் என்­பதில் ஐய­மில்லை. அதனால், கல்­முனை உப (தமிழ்)  பிர­தேச செய­ல­கத்தை தரம் உயர்த்­து­வது அவ­சி­ய­மாகும். இதனை கல்­முனைத் தொகு­தியில் உள்ள பெரும்­பான்­மை­யான முஸ்­லிம்கள் ஏற்றுக் கொள்­கின்­றார்கள். தமி­ழர்­களின் இந்த கோரிக்­கையை நிறை­வேற்றிக் கொடுப்­ப­தற்கு முஸ்­லிம்கள் தடை­யாக இருக்­கின்­றார்கள் என்­ற­தொரு குற்­றச்­சாட்டு தமி­ழர்கள் தரப்பில் முன் வைக்­கப்­ப­டு­கின்­றது.

தமி­ழர்­களின் கோரிக்­கையில் நியா­யத்தைக் காணும் முஸ்­லிம்­க­ளினால் அவர்கள் முன்வைத்துக் கொண்­டி­ருக்கும் எல்லை தொடர்பில் நியா­யத்தைக் காண முடி­ய­வில்லை. அதா­வது கல்­முனை உப (தமிழ்) பிர­தேச செய­ல­கத்தை தரம் உயர்த்தும் போது அதன் தெற்கு எல்­லை­யாக கல்­முனை குடி­யேற்றப் பள்ளி வீதியை அடை­யா­ளப்­ப­டுத்­து­கின்­றார்கள். இவ்­வாறு எல்லை வகுக்­கப்­படும் போது கல்­முனை நக­ரத்தில் அமைந்­துள்ள வியா­பார நிலை­யங்கள் யாவும் தமி­ழர்கள் கோரிக் கொண்­டி­ருக்கும் பிர­தேச செய­ல­கத்தின் கீழ் உள்­வாங்­கப்­படும். கல்­முனை நகரில் அமைந்­துள்ள வியா­பார நிலை­யங்­களுள் 70 வீத­மா­னவை முஸ்­லிம்­க­ளுக்குச் சொந்­த­மா­ன­வை­யாகும். அது மட்­டு­மன்றி தமி­ழர்­களின் கோரிக்கை நிறை­வேற்­றப்­ப­டு­மாயின் எதிர் காலத்தில் இந்த பிர­தேச செய­ல­கத்தின் எல்­லை­களைக் கொண்ட பிர­தே­சத்தை கல்­முனை மாந­கர சபை­யி­லி­ருந்து பிரித்து தனி­யான உள்­ளூ­ராட்சி சபையைத் தரு­மாறும் கோரிக்­கை­களை முன்வைப்­பார்கள். சாய்ந்­த­ம­ரு­திற்கு தனி­யான உள்­ளூ­ராட்சி சபை தரப்­பட வேண்­டு­மென்ற கோரிக்­கைக்கு தமி­ழர்கள் முழு­மை­யான ஆத­ரவைத் தெரி­வித்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். அதே வேளை, அவர்கள் பிர­தேச செய­ல­கத்தின் கோரிக்­கை­யுடன் தொடர்­பு­டைய எல்­லை­களைக் கொண்ட பிர­தே­சத்தை உள்­ளூராட்சி சபை­யாக தரப்­பட வேண்­டு­மென்று இப்­போதே கேட்டுக் கொண்­டி­ருக்­கின்­றார்கள்.

கல்­முனை மாந­கர சபை­யி­லி­ருந்து கல்­முனை நகரம் பிரிக்­கப்­ப­டு­மாயின் மாந­கர சபை என்­ப­தற்கு அர்த்­த­மில்­லாது போய்­விடும். மட்­டு­மன்றி தமி­ழர்கள் கேட்டுக் கொண்­டி­ருக்கும் புதிய உள்­ளு­ராட்சி சபை­யையே மாந­கர சபை என்றும் குறிப்­பிட வேண்­டி­யேற்­படும். மீத­மாக இருக்­கின்ற கல்­முனை குடி­யேற்­றப்­பள்ளி வீதி முதல் ஸாஹிரா கல்­லூரி வீதி வரை­யான பிர­தே­சத்தை சாதா­ரண பிர­தேச சபை­யா­கவே கொள்ள வேண்­டி­யேற்­படும். ஏனெனில், தற்­போது மாந­கர சபைக்கு கிடைத்துக் கொண்­டி­ருக்கும் வரு­மா­னத்தில் பெரும்­ப­குதி தமி­ழர்கள் கோரிக் கொண்­டி­ருக்கும் பிர­தேச செய­ல­கத்தின் கீழ் (உள்­ளு­ராட்சி சபைக்கு) கொண்டுவரப்­படும். இந்த ஆபத்­திற்கு தீர்வு காண்­பதில் உள்ள சிக்கல் நிலை­மைதான் சாய்ந்­த­ம­ரு­திற்கு தனி­யான உள்­ளூ­ராட்சி சபை வேண்­டு­மென்ற நியா­ய­மான கோரிக்­கைக்கு தடை­யாக இருக்­கின்­றது.

சாய்ந்­த­ம­ரு­திற்கு தனி­யான உள்­ளூ­ராட்சி சபையை ஏற்­ப­டுத்­தி­விட்டால் கல்­முனை முஸ்­லிம்­களின் ஆளு­மையில் பாதிப்பு ஏற்­படும் என்­ப­தனை சாய்ந்­த­ம­ருது மக்­களில் பெரும்­பான்­மை­யினர் ஏற்றுக் கொள்­வ­தில்லை. இதற்­காக அவர்கள் முன் வைத்துக் கொண்­டி­ருக்கும் சனத்­தொகை, வாக்­கா­ளர்­களின் எண்­ணிக்கை என்­பன போது­மா­ன­தாக இருக்­கின்­றன. ஆனால், இந்த புள்ளி விப­ரங்கள் இப்­போ­தைக்கு ஆபத்­தில்­லா­தது போன்று இருந்­தாலும் எதிர் காலத்தில் கல்­முனை முஸ்­லிம்­களின் ஆளு­மை­யிலும், அர­சியல் அதி­கா­ரத்­திலும் பின்­ன­டைவை ஏற்­ப­டுத்தும் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. அதா­வது, சாய்ந்­த­ம­ருது மக்கள் சாய்ந்­த­ம­ருது பிர­தேச செய­ல­கத்தின் எல்­லை­களைக் கொண்ட பிர­தே­சத்­தையே உள்ளூ­ராட்சி சபை­யாக பிர­க­ட­னப்­ப­டுத்த வேண்­டு­மென்று கேட்டுக் கொண்­டி­ருக்­கின்­றார்கள்.

தமி­ழர்கள் சாய்ந்­த­ம­ருது தனி­யாக பிரிக்­கப்­பட்­டதன் பின்­னரும் கூட உப(தமிழ்) பிர­தேச செய­ல­கத்தை தரம் உயர்த்த வேண்­டு­மென்ற தமது கோரிக்­கையை கைவி­டமாட்­டார்கள். முதலில் பிர­தேச செய­ல­கத்தைப் பெற்றுக் கொள்­வார்கள். பின்னர் உள்­ளூ­ராட்சி சபையை கேட்­பார்கள். அதன் பின்னர் அந்த உள்­ளூ­ராட்சி சபைதான் மாந­கர சபைக்­கு­ரிய வரு­மானம் முதல் ஏனைய அடிப்­படைத் தகை­மை­களைக் கொண்­டுள்­ள­தென்று தெரி­வித்து மாந­கர சபை­யாக தரம் உயர்த்த வேண்­டு­மென்று கேட்­பார்கள் என்­ப­தனை யாரும் சந்­தேகங் கொண்டு பார்க்க வேண்­டி­ய­தில்லை. இதுவே தமி­ழர்­களின் திட்­ட­மு­மாகும். தமி­ழர்கள் தங்­களின் நியா­ய­மாக கோரிக்­கையை அடைந்து கொள்­வ­தற்கு முன்வைத்துக் கொண்­டி­ருக்கும் நியா­ய­மற்ற எல்லை பகுப்பால் சாய்ந்­த­ம­ருது மக்­களின் நியா­ய­மான கோரிக்­கையை நிறை­வேற்­று­வதில் அர­சியல் கட்­சி­க­ளி­டையே தயக்க நிலை காணப்­ப­டு­கின்­றன.

தமி­ழர்­களின் நியா­ய­மற்ற எல்லைப் பிரிப்பு கார­ண­மா­கவே கடந்த 25 வரு­டங்­க­ளாக அவர்­களின் கோரிக்­கை­க­ளுக்கு முஸ்லிம் அர­சியல் தலை­வர்கள் தடை­களை ஏற்­ப­டுத்திக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். கல்­முனை தமிழ் உப (தமிழ்) பிர­தேச செய­ல­கத்தை தரம் உயர்த்­து­வ­தற்கு 1993ஆம் ஆண்டு ஜூலை மாதம் 28ஆம் திகதி அமைச்­ச­ரவை அங்­கீ­காரம் வழங்­கிய போதிலும் முஸ்லிம் அர­சியல் தலை­மை­களின் தலை­யீடு கார­ண­மாக கல்­முனை தமிழ் உப பிர­தேச செய­லகம் தரம் உயர்த்­தப்­ப­டா­ம­லேயே உள்­ளது. சம்­பந்­தப்­பட்ட அமைச்­ச­ரவை தீர்­மா­னத்­தோடு சேர்ந்­த­தா­கவே காரை­தீவு, ஈச்­சி­லம்­பற்று, ஒட்­டு­சுட்டான் ஆகிய உப பிர­தேச செய­ல­கங்கள் பிர­தேச செய­ல­கங்­க­ளாக தரம் உயர்த்­தப்­பட்­டன.

அர­சி­யல்­வா­தி­களும், தீர்­வு­களும்

கல்­முனைத் தொகு­தி­யி­லுள்ள தமிழ் மற்றும் முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் தங்­களின் அர­சி­யலை மேற்­படி பிரச்­சி­னை­களை வைத்தே நகர்த்திக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். இந்தப் பிரச்­சி­னைக்கு தீர்வு காண வேண்­டு­மாயின் விட்டுக் கொடுப்பு அவ­சி­ய­மாகும். தமி­ழர்கள் தாம் முன் வைத்துக் கொண்­டி­ருக்கும் எல்­லை­களில் விட்டுக் கொடுப்பை செய்­வ­தற்கு தயா­ரில்லை. அதே வேளை, முஸ்­லிம்கள் தமது பிர­தே­சத்தை இழப்­ப­தற்கும் தயா­ரில்லை.

கல்­மு­னையில் தமி­ழர்கள் இன­ரீ­தி­யாக பிர­தேச செய­ல­கத்­தையும், உள்­ளூராட்சி சபை­யையும், சாய்ந்­த­ம­ருது முஸ்­லிம்கள் பிர­தேச ரீதி­யாக தனி­யான உள்­ளூ­ராட்சி சபை­யையும் கேட்டுக் கொண்­டி­ருப்­ப­தற்கு தீர்­வு­களைக் காண்­ப­தற்கு பதி­லாக தீர்­வு­க­ளுக்கு தடை­களை ஏற்­ப­டுத்தி அதில் எவ்­வாறு அர­சியல் குளிர் காய்ந்து கொள்­ள­லா­மென்றே அர­சி­யல்­வா­திகள் செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். செய்­வ­து­மில்லை, செய்­ய­வி­டு­வ­து­மில்லை என்­பதே கல்­முனை அர­சியலின் சித்­தாந்­த­மாக இருக்­கின்­றது.

மஹிந்­த ­ரா­ஜ­ப­க் ஷவின் ஆட்சியின் போது இதற்கு நிரந்­தர தீர்­வு­களை நியா­யத்தின் அடிப்­ப­டையில் பெற்றுக் கொள்ளக் கூடிய அர­சியல் சூழல் காணப்­பட்­டது. அதனை முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் குறிப்­பாக முஸ்லிம் காங்­கி­ரஸும், கல்­முனை தொகு­தியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எச்.எம்.எம்.ஹரீஸும் பயன்­ப­டுத்திக் கொள்­ள­வில்லை. சாய்ந்­த­ம­ருது பிரிந்தால் கல்­மு­னைக்கு ஆபத்து என்று சிந்­தித்­தார்­களே அல்­லாமல் தமி­ழர்­களின் ஆதிக்கம் அர­சி­யலில் அதி­க­ரித்தால் என்ன நடக்கும் என்று சிந்­தித்து அறிந்து கொள்ள முடி­ய­வில்லை. இன்­றைய அர­சாங்­கத்தில் முஸ்லிம் கட்­சி­களை விடவும் தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்­புக்கே அதிக செல்­வாக்கு இருக்­கின்­றது. இந்தச் சூழ­லில்தான் தாங்கள் தவறு செய்து விட்­டோ­மென்று தீர்­வு­களை காண வேண்­டு­மென்று முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் ஓடிக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். தமிழர் தரப்­பினர் குறிப்­பாக தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பு அர­சாங்­கத்தின் போக்கை தீர்­மா­னிப்­பதில் தமக்­குள்ள செல்­வாக்கை பயன்­ப­டுத்தி கல்­முனை மாந­கர சபையின் எல்­லை­களை தமக்­கேற்ற வகையில் பிரிப்­ப­தற்கு அழுத்­தங்­களை கொடுத்துக் கொண்­டி­ருக்­கின்­றது.

இந்­நி­லை­யில்தான் கல்­முனைப் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஹரீஸும், முஸ்லிம் காங்­கி­ரஸும் கல்­முனை மாந­கர சபையை நான்­காகப் பிரித்து தீர்­வு­களை காண்­ப­தற்கு நினைக்­கின்­றார்கள். இன்று இந்தப் பிரச்­சினை பூதா­கா­ர­மாகக் காணப்­ப­டு­வ­தற்கு முஸ்லிம் காங்­கி­ரஸே கார­ண­மாகும். சாய்ந்­த­ம­ருது மக்­களை ஆசு­வா­சப்­ப­டுத்­து­வ­தற்கு போலி­யான வாக்­கு­று­தி­களை தொடர்ச்­சி­யாக வழங்கிக் கொண்­டி­ருந்­தமை முஸ்லிம் காங்­கி­ரஸின் மிகப் பெரிய வழி­கே­டாகும்.

கல்­முனை மாந­கர சபையின் எல்­லைக்குள் 1988ஆம் ஆண்­டிற்கு முன்னர் நான்கு உள்­ளூ­ராட்சி மன்­றங்கள் காணப்­பட்­டன. அதா­வது, 1897ஆம் ஆண்டு முதல் 1987ஆம் ஆண்டு வரை கல்­மு­னையில் 04 உள்­ளூ­ராட்சி சபைகள் இயங்­கின. அவை கல்­முனை பட்­டின சபை கல்­மு­னை­யிலும், கரை­வாகு தெற்கு கிராம சபை சாய்ந்­த­ம­ரு­திலும், கரை­வாகு வடக்கு கிராம சபை மரு­த­முனை, பாண்­டி­ருப்பு போன்­ற­வற்றை சேர்த்­த­தா­கவும், கரை­வாகு மேற்கு கிராம சபை சேனைக்­கு­டி­யி­ருப்பு, நற்­பிட்­டி­முனை போன்­ற­வற்றை சேர்த்­த­தா­கவும் காணப்­பட்­டன. இந்த உள்­ளூ­ராட்சி சபை­களை  மக்­களின் அபிப்­பி­ராயம், ஒப்­புதல் ஆகி­ய­வற்றை பெறாமல், ஒன்­றாக இணைத்து 1987 ஆம் ஆண்டு கல்­முனை பிர­தேச சபை உரு­வாக்­கப்­பட்­டது. தற்­போது மாந­கர சபை­யாக இருக்­கின்­றது.

கல்­மு­னையில் காணப்­படும் இந்தப் பிரச்­சினை நீண்ட காலத்தில் கல்­முனை முஸ்­லிம்­க­ளுக்கு பெரும் தலை­யி­டி­யாக மாறும் என்று உள்­ளூ­ராட்சி, மாகாண சபைகள் முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதா­வுல்லாஹ் சாய்ந்தம­ரு­திற்கு தனி­யாக உள்­ளூ­ராட்சி சபை­யையும், ஏனைய பிர­தே­சங்­களை சில விட்டுக் கொடுப்­புக்­க­ளுடன் தமி­ழர்கள் ஏற்றுக் கொள்ளக் கூடி­ய­வ­கையில் மூன்­றாக பிரிப்­ப­தற்­கு­ரிய நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டார். இதன் போது கல்­முனை அர­சியல் பிர­தி­நி­தியும், அவர் அங்கம் வகிக்கும் கட்­சியின் தலை­மையும் அதா­வுல்­லாஹ்வின் முயற்­சிக்கு தடை­களை ஏற்­ப­டுத்­தினர். அதா­வுல்­லாஹ்வின் முயற்­சி­களில் தவ­றுகள் இருந்தால் அல்­லது ஆபத்து இருந்தால் அதில் திருத்­தங்­களை மேற்­கொண்டு தீர்­வு­களை கண்­டி­ருக்க வேண்டும். அன்­றைய அர­சியல் சூழலில் முஸ்­லிம்­களின் அர­சியல் கட்­சிகள் யாவும் ஆளுந் தரப்­பி­லேயே இருந்­தன. தமி­ழர்­களின் அர­சியல் இன்­றைய செல்­வாக்கைக் கொண்­ட­தாக இருக்­க­வில்லை. ஆனால், அந்த சந்­தர்ப்­பத்தை கைந­ழு­வ­விட்­டார்கள். தொடர்ச்­சி­யாக சாய்ந்­த­ம­ரு­தையும், தமி­ழர்­க­ளையும் ஏமாற்­ற­லா­மென்றே எண்­ணி­னார்கள்.

இன்று தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பின் செல்­வாக்கு அதி­க­ரித்­துள்­ளது. தமி­ழர்­களின் மீது சர்­வ­தே­சத்தின் பார்வை சாத­க­மாக இருக்­கின்­றது. இந்­நி­லையில் 1988ஆம் ஆண்­டிற்கு முன்னர் இருந்­ததைப் போன்று நான்­காக பிரிப்­போ­மென்று தெரி­வித்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். ஆனால், தமிழர் தரப்­பினர் அகன்ற பிர­தேச செய­ல­கத்­தையும், உள்­ளூ­ராட்சி சபை­யையும் கேட்டுக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். அமைச்சர் பத­வியில் காட்­டிய அக்­க­றையை மக்­களின் பிரச்­சி­னை­களை தீர்ப்­ப­தற்கு காட்­டா­தி­ருந்­த­மையே பிரச்­சினை இன்­றைய பூதா­கார நிலையை அடை­வ­தற்கு கார­ண­மாகும். 1988ஆம் ஆண்­டிற்கு முன்னர் இருந்த எல்­லை­களை அடிப்­ப­டை­யாகக் கொண்டு நான்கு உள்ளூராட்சி சபைகளை உருவாக்குவதே பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வுகளைக் காண்பதற்குரிய இலகுவான வழியாகும். இதற்கு தமிழர்களும், முஸ்லிம்களும் தம்மை தயார்படுத்திக் கொள்ளும் மனநிலைக்கு வருதல் வேண்டும்.

இதே வேளை, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கல்முனையில் தமிழர்களுக்கு பிரதேச செயலகம், பிரதேச சபை உருவாக்கப்பட வேண்டுமென்று தெரிவித்துக் கொண்டிருக்கும் அதே வேளை, மூதூர் பிரதேச செயலகத்தின் கீழு உள்ள தோப்பூர் பிரதேசத்தை அடிப்படையாக் கொண்ட புதிய பிரதேச செயலகமொன்று உருவாக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கைக்கு எதிராக இருக்கின்றார். மூதூர் பிரதேச செயலகத்தை இரண்டாகப் பிரித்தால் முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட இரண்டு பிரதேச செயலகங்கள் அமைந்துவிடுமென்று தெரிவித்துள்ளார். இங்கு இரண்டு பிரதேச செயலகங்கள் உருவாவது தமிழர்களுக்கு எந்த தீங்கையும் ஏற்படுத்தப் போவதில்லை. ஆயினும், முஸ்லிம்களுக்கு இரண்டு பிரதேச செயலகங்களா என்று தடுக்கின்றார். இந்த மனநிலையைக் கொண்டுள்ளவர்கள் முஸ்லிம்களின் அங்கீகாரத்தோடு வடக்குடன் கிழக்கை இணைக்க நினைக்கின்றார்கள்.

ஆகவே, தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகள் மக்களின் கோரிக்கைகளுடன் தொடர்புடைய பிரச்சினைகளில் அரசியல் குளிர்காய்ந்து கொள்ளாது தீர்வுகளை காண்பதற்குரிய நடவடிக்கைகளை இதயசுத்தியுடன் எடுக்க வேண்டும். தூய்மையான சிந்தனைதான் தம்மையும், சமூகத்தையும் வாழ வைக்கும் என்பதில் நமது அரசியல்வாதிகள் நம்பிக்கை வைக்க வேண்டும்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.