கிழக்கு மாகா­ணத்தில் காணிகள் விடு­விப்பு

இரா­ணுவம் தெரி­விப்பு

0 680

இலங்கை இரா­ணு­வத்தின் பாவ­னையில் கிழக்குப் பிர­தே­சத்­தி­லி­ருந்த காணிகளை இம்­மாதம் 25 ஆம் திகதி விடு­விப்­ப­தற்­கான நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன என்று இலங்கை இரா­ணுவம் தெரி­வித்­துள்­ளது.
குச்­ச­வேலி, கல்­முனை மற்றும் திருக்­கோவில் பிர­தேச செய­ல­கத்­திற்­கு­ரிய திரியாய், பெரி­ய­நிலா­வெளி பிர­தே­சங்­க­ளி­லுள்ள 5.05 ஏக்கர் காணிகள் 4 ஆவது கட்­ட­மாக விடு­விப்­ப­தற்­கான நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. அவை­களில் 3.5 ஏக்கர் காணி நிலப்­ப­ரப்­புகள் தனி­யா­ருக்கு சொந்­த­மா­ன­தாகும். இந்த காணிகள் அம்­பாறை மாவட்ட செய­லாளர், அனைத்து மதத் தலை­வர்கள், ஆளுநர், மாவட்ட செய­லா­ளர்கள், கிழக்கு பாது­காப்பு படைத் தள­பதி மற்றும் கிராம சேவை­யா­ளர்­களின் முன்­னி­லையில் கைய­ளிக்­கப்­படும்.
ஜனா­தி­பதி செய­ல­கத்தின் எண்ணக் கரு­விற்­க­மைய இரா­ணுவ தள­பதி லெப்­டினண்ட் ஜெனரல் மகேஷ் சேனா­நா­யக்­கவின் பணிப்­பு­ரைக்­க­மைய இந்த காணிகள் விடு­விப்­ப­தற்கு தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்­ளது. கிழக்கு பாது­காப்பு படைத் தள­பதி மேஜர் ஜெனரல் அநுர ஜய­சே­க­ரவின் தலை­மையில் இக்காணிகள் விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் மேலும் இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.