கஷோக்ஜி படு­கொலை சவூதி கொள்­கையின் ஒரு பகு­தி­யாகும்; தனிப்­பட்ட சம்­ப­வ­மல்ல

அறிக்­கையில் தெரி­விப்பு

0 750

ஊட­க­வி­ய­லாளர் ஜமால் கஷோக்ஜி படு­கொலை செய்­யப்­பட்­டமை தனிப்­பட்­ட­தொரு சம்­ப­வ­மல்ல, ஒரு வரு­டத்­திற்கு முன்­னரே பட்­டத்­திற்­கு­ரிய இள­வ­ரசர் மொஹமட் பின் சல்­மா­னினால் அதி­கா­ர­ம­ளிக்­கப்­பட்ட சவூதி அரே­பி­யாவின் மாற்றுக் கருத்­து­டை­ய­வர்­களை பல­வந்­த­மாக நாடு­க­டத்தல், தடுத்து வைத்தல் மற்றும் சித்­தி­ர­வதை செய்தல் போன்ற பரந்­து­பட்ட கொள்­கையின் ஒரு பகு­தி­யாகும் என புதிய அறிக்­கை­யொன்று தெரி­வித்­துள்­ளது.

இந்தக் கொடூரக் கொலை தொடர்பில் விசா­ர­ணைக்­காக அமர்த்­தப்­பட்­டுள்ள குழுக்கள் தமது விசா­ர­ணை­களைத் தீவி­ர­மாக முன்னெடுத்­து­வரும் அதே­வேளை கால அவ­கா­சமும் கோரி­யி­ருந்­த­தாக நியூயோர்க் டைம்ஸ் தெரி­வித்­துள்­ளது.

பல்­வேறு புல­னாய்வு அறிக்­கை­களை ஆய்வு செய்­து­வரும் அமெ­ரிக்க அதி­கா­ரி­க­ளி­ட­மி­ருந்து கிடைக்­கப்­பெற்ற தக­வல்கள், செயற்­பா­டுகள் தொடர்பில் நேர­டி­யாக அறிந்­துள்ள சவூதி அரே­பி­யர்­க­ளி­ட­மி­ருந்து கிடைக்­கப்­பெற்ற தக­வல்கள் என்­ப­வற்றின் அடிப்­ப­டையில் நியூயோர்க் டைம்ஸ் இதனைத் தெரி­வித்­துள்­ளது.

இர­க­சியத் தக­வல்­களை வெளி­யிட்­ட­மைக்­காக தாம் தண்­டிக்­கப்­ப­டுவோம் என அஞ்­சு­வதன் கார­ண­மா­கவும், கோபம் ஏற்­பட்டால் தமது அர­சாங்கம் எவ்­வாறு நடந்­து­கொள்ளும் என சவூதி நாட்­ட­வர்கள் அறிந்து வைத்­தி­ருப் ப­த­னாலும், பேசிய அனை­வ­ருமே தம்மை அடை­யா­ளப்­ப­டுத்­திக்­கொள்ள விரும்பா­ம­லேயே கருத்­துக்­களை வெளி­யிட்­டுள்­ளனர்.

முகவர் கும்­ப­லொன்­றினால் விட­யங்கள் கையா­ளப்­பட்டு கடந்த ஒக்­டோபர் 02 ஆம் திகதி மாற்­றுக்­க­ருத்­து­டைய ஊடக­வி­ய­லாளர் கொல்­லப்­பட்­டமை தொடர்பில் ஆரம்­பத்தில் சவூதி அரே­பி­யா­வினால் வெளிப்­ப­டுத்­தப்­பட்ட உறு­திப்­ப­டுத்­தல்கள் தெளி­வான முரண்­பா­டு­களைக் கொண்­ட­வை­களாகக் காணப்­ப­டு­கின்­றன.

சவூதி அரே­பி­யாவின் பட்­டத்­திற்­கு­ரிய இள­வ­ர­ச­ரான மொஹமட் பின் சல்­மானை கடு­மை­யாக விமர்­சித்­து­வந்த கஷோக்ஜி தனது துருக்கி நாட்டுக் காத­லி­யான ஹாடிஸ் சென்­ஜிஸை திரு­மணம் செய்­து­கொள்­வ­தற்கு ஏது­வாக சில ஆவ­ணங்­களை பெறு­வ­தற்­காக இஸ்­தான்­பூ­லி­லுள்ள சவூதி அரே­பிய துணைத் தூத­ர­கத்­தினுள் 2018 ஆம் ஆண்டு ஒக்­டோபர் மாதம் 02 ஆந் திகதி சென்றார்.

அன்­றைய தினமே அவர் கொலை­காரக் கும்­ப­லொன்­றினால் கொல்­லப்­பட்டு அவ­ரது உடல் பாகங்கள் பிரிக்­கப்­பட்­டன.

தற்­போ­தைய புதிய குற்­றச்­சாட்டு வெளிச்­சத்­திற்கு வரு­வ­தற்கு இரு வாரங்­க­ளுக்கு முன்­ன­தாக பட்­டத்­திற்­கு­ரிய இள­வ­ரசர் மொஹமட் பின் சல்­மான் முக்­கிய உயர்­மட்ட நிகழ்­வு­களில் பங்­கேற்­காமை குறிப்­பாக அவ­தா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

இது அவ­ரது பொரு­ளா­தார மற்றும் நிதி­சார்ந்த அதி­கா­ரங்கள் களை­யப்­பட்­டி­ருக்­காலம் என்ற சந்­தே­கத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளன என கடந்த திங்­கட்­கி­ழமை கார்­டியன் பத்­தி­ரிகை குறிப்­பிட்­டுள்­ளது.

கிடைக்­கப்­பெற்­றுள்ள தக­வல்­களின் பிர­காரம், பட்­டத்­திற்­கு­ரிய இள­வ­ரசர் மொஹமட் பின் சல்­மானின் தந்­தை­யான மன்னர் சல்­மானின் நம்­பிக்­கைக்­கு­ரிய ஆலோ­ச­க­ரான ஹாவாட் பல்­க­லைக்­க­ழ­கத்தில் கல்­வி­கற்ற முசாயிட் அல்-­அ­யிபான் முத­லீட்டுத் திட்­டங்­களில் எடுக்­கப்­பட்ட தவ­றான தீர்­மா­னங்கள் தொடர்பில் மீளாய்­வு­களை மேற்­கொண்டு வரு­கின்றார் எனவும் கார்­டியன் தெரி­வித்­துள்­ளது.

இக் கொலை தொடர்பில் கடந்த நவம்பர் மாதம் ட்ரம்ப் நிரு­வா­கத்தால் குற்­றம்­சாட்­டப்­பட்ட 17 சவூதி அதி­கா­ரி­களுள் பெரும்­பா­ல­ன­வர்கள், சவூதி அர­சாங்­கத்­தி­னா­லேயே குற்­ற­மி­ழைத்­த­வர்­க­ளாகக் குற்­றம்­சாட்­டப்­பட்­டுள்­ளனர்.

கடந்த சில மாதங்­க­ளாக அமெ­ரிக்க நிறு­வ­னங்கள் நூற்­றுக்­க­ணக்­கான மில்­லியன் டொலர் முத­லீ­டு­களை சவூதி அரே­பி­யா­வி­லி­ருந்து மீளப் பெற்­றுள்­ளன.

கடந்த புதன்­கி­ழமை அமெ­ரிக்க இரா­ஜாங்கத் திணைக்­களம் தனது வரு­டாந்த மனித உரி­மைகள் அறிக்­கையில் இந்த மத்­திய கிழக்கு நாட்­டினை இக்­கொ­லை­யுடன் தொடர்­பு­ப­டுத்­தி­யுள்­ளது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.