இஸ்ரேலின் தீர்ப்பில் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு அதிருப்தி

0 707

ஆக்­கி­ர­மிக்­கப்­பட்­டுள்ள கிழக்கு ஜெரூ­சலம் நகரில் அமைந்­துள்ள அல்-­அக்ஸா பள்­ளி­வா­சலின் பாப் அல்-­ரஹ்மா நுழை­வா­யிலை மூடி வைத்­தி­ருக்கும் காலத்­தினை நீடித்து இஸ்­ரே­லிய நீதி­மன்­ற­மொன்று உத்­த­ரவு பிறப்­பித்­துள்­ளமை தொடர்பில் உலகின் முன்­னணி இஸ்­லா­மிய அமைப்பு விசனம் தெரி­வித்­துள்­ளது.

அல்-­அக்ஸா பள்­ளி­வாசல் தொகு­தி­யினுள் அமைந்­துள்ள பள்­ளி­வாசல் கட்­ட­டங்­களின் நுழை­வா­யில்­களுள் ஒன்­றான பாப் அல்-­ரஹ்மா நுழை­வா­யிலை மூடி வைத்­தி­ருப்­பது தொடர்பில் தடை­யினைப் புதுப்­பிப்­பது சம்­பந்­த­மாக இஸ்­ரே­லிய சட்­டமா அதி­பரால் முன்­வைக்­கப்­பட்ட கோரிக்­கை­யினை ஜெரூ­சலம் நீதிவான் நீதி­மன்றம் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை ஏற்­றுக்­கொண்­டது.

இந்த நீதி­மன்றத் தீர்ப்பு அடிப்­ப­டை­யற்­றதும் சட்­ட­வி­ரோ­த­மா­ன­தா­கு­மென கடந்த செவ்­வாய்க்­கி­ழமை இஸ்­லா­மிய ஒத்­து­ழைப்­புக்­கான அமைப்பு வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

குறித்த தீர்ப்பு சர்­வ­தேச சட்டம், மனி­தா­பி­மான சட்டம் மற்றும் ஜெனிவா பிர­க­டனம் ஆகி­ய­வற்றை மீறு­கின்ற ஒன்­றா­கு­மென ஜித்­தாவைத் தள­மாகக் கொண்ட அவ்­வ­மைப்பு தெரி­வித்­துள்­ளது.

ஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட பலஸ்­தீன தேசத்தின் தலை­ந­க­ரான கிழக்கு ஜெரூ­சலம் (அல்-குத்ஸ்) 1967 ஆம் ஆண்டு இஸ்­ரே­லினால் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட பலஸ்­தீன ஆள்­புலப் பிர­தே­சத்தின் பகு­தி­யாகும். இது இஸ்­ரேலின் நியா­யா­திக்க எல்­லைக்­குட்­பட்ட பகு­தி­யல்ல என தெரி­வித்­துள்ள இஸ்­லா­மிய ஒத்­து­ழைப்­புக்­கான அமைப்பு இஸ்­ரேலின் அந்த நட­வ­டிக்கை நிரா­க­ரிக்­கப்­பட வேண்­டு­மெனத் தெரி­வித்­துள்­ளது.

பாப் அல்-­றஹ்மா பள்­ளி­வாசல் அல்­லது அல்-­றஹ்மா நுழை­வாயில் என அழைக்­கப்­படும் அப் பகுதி 2003, 2017 ஆகிய ஆண்­டு­களில் இஸ்­ரே­லிய நீதி­மன்­ற­மொன்­றினால் மூடு­வற்­கான தடை நீடிக்­கப்­பட்­டதன் அடிப்­ப­டையில் மூடப்­பட்­டது.

அல்-­அக்ஸா வளா­கத்தை மேற்­பார்வை செய்­வ­தற்­காக ஜோர்­தா­னினால் நிய­மிக்­கப்­பட்ட குழுவான இஸ்லாமிய வக்ப் சபை கடந்த 16 வருடங்களாக இஸ்ரேல் விதித்துள்ள தடையினையும் மீறி புனிதத் தலத்தினுள் அமைந்துள்ள பாப் அல்-றஹ்மா கட்டடத்தினை தொழுகையில் ஈடுபடும் முஸ்லிம்களுக்காக திறந்து விட்டமை குறிப்பிடத்தக்கது.

 

Leave A Reply

Your email address will not be published.