பாகிஸ்தானுக்கு எதிராக தண்ணீர் யுத்தத்தை இந்தியா ஆரம்பித்தது

0 754

இந்­தியக் கட்­டுப்­பாட்டு காஷ்­மீரில் கிளர்ச்­சி­கா­ர­ரினால் மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­கு­த­லை­ய­டுத்து ஏற்­பட்ட இந்­தியா – பாகிஸ்தான் பதற்­ற­நிலை பல வாரங்கள் நீடித்து தற்­போது தனிந்து வரும் நிலையில், இந்­தியா மற்­று­மொரு ஆத்­தி­ர­மூட்டும் செயற்­பாட்டில் இறங்­கி­யுள்­ளது. அது தண்ணீர் தொடர்­பா­ன­தாகும்.

பாகிஸ்­தா­னுக்குள் செல்லும் கிழக்­குப்­ப­குதி மூன்று நதி­களின் அரை பில்­லியன் ஏக்கர் அடிக்கும் அதி­க­மான நீரை தடை­போட்டுத் தடுத்­துள்­ள­தாக கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை இந்­தியா அறி­வித்­தது. இந்­தி­யாவின் இந்த நகர்வு பாகிஸ்­தானை பாதிக்கும் சாத்­தியம் இல்லை என நிபு­ணர்கள் தெரி­வித்­துள்­ளனர்.

நீர்­வ­ளங்கள் தொடர்­பான மாநில யூனியன் அமைச்சர் அர்ஜுன் மெக்ஹ்வால் ஞாயிற்­றுக்­கி­ழமை மேற்­கொண்ட நட­வ­டிக்­கை­யினை உறு­திப்­ப­டுத்­தினார். ரவி, பீயாஸ், சுல்டேஸ் ஆகிய நதி­களின் தண்ணீர் கட்­டுப்­ப­டுத்­தி­ய­தாக அவர் தெரி­வித்தார்.

சுமார் 0.53 மில்­லியன் ஏக்கர் அடி தண்ணீர் பாகிஸ்­தா­னுக்குள் செல்­லா­த­வாறு தடுக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும், அந்தத் தண்ணீர் சேமிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் தெரி­வித்தார். ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் மாநி­லங்­க­ளுக்கு எப்­போது தேவைப்­ப­டு­கின்­றதோ அப்­போது குடிநீர்த் தேவைக்­கா­கவும், நீர்ப்­பா­சன நோக்­கங்­க­ளுக்­கா­கவும் அது பயன்­ப­டுத்­தப்­படும் எனவும் மெக்ஹ்வால் தனது சொந்த ஊரான பிக்­கா­னெரில் வைத்து ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளிடம் தெரி­வித்தார்.

இந்­தியப் பகு­தி­யி­லி­ருக்கும் இம் மூன்று கிழக்கு நதி­க­ளிலும் சரா­ச­ரி­யாக 33 மில்­லியன் ஏக்கர் அடி தண்ணீர் காணப்­ப­டு­கின்­றது.

இந்­தியா எமக்­கு­ரிய பங்­கினைத் தடுத்து நிறுத்­து­வதால் பாகிஸ்­தா­னுக்கு எவ்­வித பாதிப்பும் ஏற்­படப் போவ­தில்லை என பாகிஸ்­தானின் முன்னாள் தண்ணீர் ஆணை­யாளர் செயிட் ஜமாத் அலி ஷாஹ் தெரி­வித்தார்.
மூன்று கிழக்கு நதி­களின் அணைக்­கட்­டுக்­க­ளினால் நிரம்பி வழியும் அல்­லது கசிந்­தோடும் மேல­திக தண்­ணீ­ரையே இந்­தியா கட்­டுப்­ப­டுத்­தி­யுள்­ளது எனவும் அவர் தெரி­வித்தார்.

1960 ஆம் ஆண்டு மேற்­கொள்­ளப்­பட்ட இரு நாடு­க­ளுக்கும் இடை­யே­யான தண்ணீர் தொடர்­பான உடன்­பாட்டில் இம் மூன்று கிழக்கு நதிகள் தொடர்பில் எவ்­வித கோரிக்­கை­க­ளையும் முன்­வைக்­க­வில்லை எனவும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

அந்தத் தண்ணீர் உண்­மை­யி­லேயே இந்­தி­யா­வுக்குச் சொந்­த­மா­ன­துதான். அத­னையே பாகிஸ்­தா­னினுள் வந்து விடாமல் தடுக்­கின்­றது. அது கிடைத்தால் அதை நாம் பயன்­ப­டுத்­துவோம், கிடைக்­க­வில்­லை­யென்றால் அது தொடர்பில் கவலைப்பட மாட்டோம் எனவும் அவர் தெரிவித்தார்.
மேற்கில் உள்ள மூன்று நதிகளின் தண்ணீரை இந்தியா கட்டுப்படுத்துமானால் அதனை பாகிஸ்தான் ஆட்சேபிக்கும், ஏனெனில் அதற்கு பாகிஸ்தான் உரிமைகோரியுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
-Vidvivelli

Leave A Reply

Your email address will not be published.