சுவீடனின் அரசியல்வாதி ஒருவர் பள்ளியொன்றை கட்ட கோரிக்கை 

0 703

குடி­யேற்­றத்­திற்கு எதி­ராக செயற்­படும் கட்­சி­யினைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் சுவீ­டனின் தீவிர வல­து­சாரி அர­சி­யல்­வா­தி­யொ­ருவர் குடி­யேற்­ற­வா­சி­களை அதிகம் கவர்ந்­தி­ழுப்­ப­தற்­காக பள்­ளி­வா­சலும் கலா­சார மத்­திய நிலை­யமும் அமைக்­கப்­பட வேண்டும் எனக் கோரி­யுள்­ள­தாக உள்ளூர் ஊட­கங்கள் தெரி­வித்­துள்­ளன.

நக­ரத்­தி­லுள்ள சனத்­தொகை வீழ்ச்­சி­யினைக் சீர்­செய்­வ­தற்கு குடி­யேற்­ற­வா­சி­களின் வருகை அவ­சியம் எனத் தான் கரு­து­வ­தாக தீவிர வல­து­சாரி சுவீடன் ஜன­நா­யகக் கட்­சியைச் சேர்ந்த மார்க் கொலின்ஸ் தெரி­வித்­த­தாக தி லோக்கல் சுவீடன் தெரி­வித்­துள்­ளது.

வடக்கு சுவீ­டனின் வாஸ்­டேர்­னோர்லேண்ட் மாநி­லத்தின் கிரம்போர்ட்ஸ் நகரில் பள்­ளி­வா­சலும் கலா­சார மத்­திய நிலை­யமும் அமைக்­கப்­பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்­துள்ளார்.

எனது நோக்கம் என்­ன­வென்றால் இங்கு பள்­ளி­வா­சலும் கலா­சார மத்­திய நிலை­யமும் அமைக்­கப்­ப­டு­மானால் நக­ரத்­திற்கு பொறுப்­பா­ன­வர்­க­ளாக அவர்­களை வலு­வூட்ட முடியும் என அவரை மேற்­கோள்­காட்டி ஊடக வலை­ய­மைப்பு தெரி­வித்­துள்­ளது.

சுவீ­டனில் நகர்ந்­து­கொண்­டி­ருக்கும் குடி­யேற்­ற­வா­சிகள் வியா­பார நோக்கம் கொண்­ட­வர்கள். அவர்­கள்தான் எமக்குத் தேவை எனவும் அவர் தெரி­வித்­துள்ளார்.

நகரப் பகு­தியில் வரு­டத்­திற்கு 100 பேர் என்ற அடிப்­ப­டையில் குறை­வ­டைந்து செல்கின்றனர். ஒட்டுமொத்தமாக வாஸ்டேர்னோர்லேண்ட் மாநிலத்தில் வருடமொன்றிற்கு சுமார் 500 பேர் குறைவடைகின்றனர் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.