முசலி பிரதேச சபைக்குட்பட்ட சிலாவத்துறையில் கடற்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணியை விடுவித்து மக்களின் பாவனைக்கு கையளிக்குமாறு முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்திற்கு ஆதரவளிப்பதாக மன்னார் பிரதேச சபையில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
குறித்த போராட்டத்திற்கு ஆதரவளிக்க வேண்டும் என சபையின் தவிசாளர் முஜாஹிர் முன்வைத்த யோசனைக்கு 21 சபை உறுப்பினர்களும் ஏகமனதாக அங்கீகாரம் வழங்கியதுடன் இத் தீர்மானத்தை உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு சமர்ப்பிப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது. இன மத பேதங்களுக்கு அப்பால் 21 நாட்களாக முசலி பிரதேசத்தில் இந்த போராட்டம் நடைபெற்று வருகின்றது.
இந்த முசலி பிரதேசத்தில் 32 கிராமங்களுக்கும் தலைநகராக சிலாவத்துறை நகர் காணப்படுகிறது. இந்த நகரில் அமைந்துள்ள கடற்படை முகாம் அகற்றப்படவேண்டும். இதனை நிவர்த்தி செய்யும் முகமாக இந்த போராட்டம் நடைபெற்று வருகின்றது. இந்த போராட்டத்தை முன்னெடுக்கும் மக்களுக்கு எமது பிரதேச மக்கள் சார்பாக மன்னார் பிரதேச சபை முழுமையான ஆதரவினை வழங்கும் என்றும் இதன்போது தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
-Vidivelli