கஞ்­சி­பான இம்­ரானின் ஒப்­பந்த கொலை­யா­ளி­ ‘ஜீபும்பா’ கம்­ப­ளையில் வைத்து அதி­ரடிப் படை­யி­னரால் கைது

0 786

தலை­நகர் கொழும்பில் இடம்­பெற்ற பல துப்­பாக்­கிச்­சூட்டு சம்­ப­வங்­களின் பிர­தான துப்­பாக்­கி­தா­ரி­யாக செயற்­பட்ட, தற்­போது டுபாயில் கைதாகி தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள பாதாள உலக தலைவன் கஞ்­சி­பான இம்­ரானின் ஒப்­பந்தக் கொலை­யா­ளி­யான ஜீபும்பா கைது செய்­யப்­பட்­டுள்ளார்.பொலிஸ் விஷேட அதி­ரடிப் படையின் பாதாள உலக ஒழிப்புப் பிரிவின் உள­வுத்­து­றைக்கு கிடைக்­கப்­பெற்ற விஷேட தகவல் ஒன்­றுக்கு அமை­வாக அவர் கம்­ப­ளையில் வைத்து நேற்று அதி­காலை கைது செய்­யப்­பட்­ட­தாக பொலிஸ் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்­சகர் ருவன் குண­சே­கர கூறினார்.

33 வய­தான மாளி­கா­வத்தை -– மைத்­திரி போதி­ராஜ மாவத்­தையைச் சேர்ந்த மொஹம்மட் சம்மூர் மொஹம்மட் சியாம் எனும் இயற்­பெ­ய­ரு­டைய ஜீபும்பா எனும் பாதாள உலக உறுப்­பி­னரே இவ்­வாறு கைது செய்­யப்­பட்­ட­தா­கவும், அவர் தொடர்பில் ஓ.சி.பி.டி. எனப்­படும் திட்­ட­மிட்ட குற்­றங்­களைத் தடுக்கும் பொலிஸார் தீவிர விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­து­வ­ரு­வ­தா­கவும் பொலிஸ் அத்­தி­யட்­சகர் ருவன் குண­சே­கர மேலும் கூறினார்.

நேற்று அதி­காலை பொலிஸ் விஷேட அதி­ரடிப் படை­யி­ன­ருக்கு, ஜீபும்பா பாதாள உலகின் ஒப்­பந்த கொலை­யா­ளி­ தொடர்பில் இர­க­சிய தக­வ­லொன்று கிடைத்­துள்­ளது. அந்த தக­வலில் ஜீபும்பா கம்­பளை, கம்­ப­ள­வெல பகு­தியில் வீடொன்றில் மறைந்­துள்­ள­தாக கூறப்­பட்­டுள்­ளது. இந்­நி­லை­யி­லேயே குற்றம், திட்­ட­மிட்ட குற்­றங்கள், போதைப்­பொருள் தடுப்புப் பிரிவின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதி­பரும் பொலிஸ் விஷேட அதி­ரடிப் படைக் கட்­டளைத் தள­ப­தி­யு­மான எம்.ஆர். லத்­தீபின் உத்­த­ர­வுக்­க­மைய பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் ஒரு­வரின் கீழான சிறப்பு அதி­ரடிப் படைக்­குழு அந்த வீட்டை சுற்றி வளைத்­துள்­ளது.

இதன்­போதே அந்த வீட்டில் இருந்து ஜீபும்பா கைது செய்­யப்பட்­டுள்ளார்.

இவ்­வாறு கைது செய்­யப்­பட்ட அவர் உட­ன­டி­யாக கம்­ப­ளை­யி­லி­ருந்து கொழும்­புக்கு அழைத்து வரப்­பட்டு திட்­ட­மிட்ட குற்­றங்­களைத் தடுக்கும் பிரி­விடம் மேல­திக விசா­ர­ணை­க­ளுக்­காக ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்ளார்.

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் எம்.ஆர். லத்­தீபின் கீழுள்ள குறித்த சிறப்புப் பிரிவின் பிரதிப் பொலிஸ்மா அதிபர் கமல் சில்வா, பதில் பணிப்­பாளர் பொலிஸ் அத்­தி­யட்­சகர் இரி­யந்த லிய­னகே ஆகி­யோரின் மேற்­பார்வை மற்றும் ஆலோ­ச­னைக்­க­மைய இதன்­போது ஜீபும்­பா­விடம் மேல­திக விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. நேற்று நண்­பகல் வரை இடம்­பெற்ற விசா­ர­ணை­களில்,

தலை­ந­கரில் இடம்­பெற்ற பல துப்­பாக்கிச் சூடுகள் மற்றும் கொலை முயற்­சி­க­ளுடன் ஜீபும்­பா­வுக்கு தொடர்­புள்­ளமை தெரி­ய­வந்­துள்­ளது. குறிப்­பாக, கடந்த காதலர் தின­மான பெப்ர­வரி 14 ஆம் திக­தி­யன்று, மாளி­கா­வத்­தையில் பாதாள உலகத் தலை­வ­னாக வலம் வந்த, சில வரு­டங்­க­ளுக்கு முன்னர் எஸ்.ரி.எப். உட­னான மோதலில் கொல்­லப்­பட்ட பாஜி என்­ப­வரின் இரண்­டா­வது மனைவி ஆஷா பாஜி எனப்­படும் குடு சூட்­டி­மீது துப்­பாக்­கிச்­சூடு நடத்­தப்­பட்­டி­ருந்­தது.

இந்த சம்­ப­வத்­தி­னதும் பிர­தான சந்­தே­க­நபர் ஜீபும்­பாவே என தெரி­ய­வந்­துள்­ளது. கொட்­டாஞ்­சேனை பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட, கிராண்ட்பாஸ் – மெல்­வத்த பகு­தியின் மைத்­திரி போதி­ராஜ மாவத்­தை­யி­லுள்ள குடு சூட்­டியின் வீட்­டுக்குள் இரவு உணவு வேளையில் உட்­பு­குந்து நடாத்­தப்பட்ட துப்­பாக்­கிச்­சூட்டு சம்­ப­வத்தின் பிர­தான துப்­பாக்­கி­தா­ரி­யாக ஜீபும்பா செயற்­பட்­டுள்­ள­தாக விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ளது. இந்த துப்­பாக்கிச் சூட்­டின்­போது குடு சூட்டி படு­கா­ய­ம­டைந்­தி­ருந்தார்.

இதே­வேளை, கரை­யோர பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட கொட்­டாஞ்­சேனை – ஹின்னி அப்­பு­ஹாமி மாவத்தை மற்றும் மெலிபன் சந்தி வீதியில் அடை­யாளம் தெரி­யாதோர் கடந்த ஜன­வரி 20 ஆம் திகதி துப்­பாக்­கியால் சுட்­டதில் ஒருவர் படு­கா­ய­ம­டைந்­தி­ருந்தார்.

சம்­ப­வத்தில் கொழும்பு 13 ஐச் சேர்ந்த 32 வய­தான என்டன் மைக்கல் நிஷாந்தன் குறூஸ் என்­ப­வரே இவ்­வாறு காய­ம­டைந்­தி­ருந்தார். குறித்த நபர் முச்­சக்­கர வண்­டி­யொன்றில் பய­ணிக்­கும்­போது அவரைப் பின்­தொ­டர்ந்து வந்­துள்ள அடை­யாளம் தெரி­யாத ஆயு­த­தா­ரிகள் இந்த துப்­பாக்கிச் சூட்டை நடாத்­தி­யி­ருந்­தனர். இந்த சம்­ப­வத்­திலும் பிர­தான துப்­பாக்­கி­தா­ரி­யாக ஜீபும்பா செயற்­பட்­டுள்­ள­தாக பொலிஸார் கூறினர்.

இத­னை­விட கரை­யோர பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட ஜம்­பட்டா வீதியில் கடந்த ஜன­வரி முதலாம் திகதி நண்­பகல் அடை­யாளம் தெரி­யா­தோரால் துப்­பா­க்கிப் பிர­யோகம் நடாத்­தப்­பட்­டி­ருந்­தது. அன்­றை­ய­தினம் நண்­பகல் 12.00 மணிக்கு புத்­தாண்டை கொண்­டா­டு­மு­க­மாக பட்­டாசு கொளுத்­தப்­பட்­டி­ருந்த சந்­தர்ப்­பத்தில், அந்த சப்­தத்தின் இடை­ந­டுவே மோட்டார் சைக்­கிளில் வந்த இருவர் ஜம்­பட்டா வீதி, செல்­வியின் தோட்டம் பகு­தியில் பாதையால் நடந்து சென்று கொண்­டி­ருந்த ஒருவர் மீது இந்த துப்­பாக்கிச் சூட்டை நடத்­தி­யி­ருந்­தனர்.

சம்­ப­வத்தில் 37 வய­தான நந்­தன ஆராச்­சிகே பெல்கம் காவிந்த பெரேரா என அறி­யப்­படும் நபரே காய­ம­டைந்­தி­ருந்தார். இந்த சம்­ப­வத்­திலும் ஜீபும்பா பிர­தான துப்­பாக்­கி­தா­ரி­யாக செயற்­பட்­டுள்ளார்.

இத­னை­விட கடந்த 2007 இல் கொட்­டாஞ்­சேனை பொலிஸ் பிரிவில் சட்­ட­வி­ரோத ஆயு­தங்­களை உடன் வைத்­தி­ருந்­தமை தொடர்பில் கைதாகி குற்­ற­வா­ளி­யாகக் காணப்­பட்ட ஜீபும்­பா­வுக்கு 12 மாத சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

அத்­துடன் கடந்த 2011 இல் கொட்­டாஞ்­சே­னையில் இளைஞர் ஒரு­வரைக் கடத்திச் சென்று சித்­தி­ர­வதை செய்து படு­கா­ய­மேற்­ப­டுத்­தி­யமை தொடர்­பிலும் அவர் கைது செய்­யப்­பட்டு அந்த சம்­பவம் தொடர்­பிலும் 12 மாத சிறைத் தண்­ட­னைக்கு ஜீபும்பா உள்­ளாக்­கப்­பட்­டி­ருந்தார். இத­னை­விட 2014 ஏப்ரல் 2 ஆம் திகதி மாளி­கா­வத்­தையில் சட்­ட­வி­ரோத ஆயு­தங்­க­ளுடன் கைது செய்­யப்­பட்­டி­ருந்த ஜீபும்­பா­வுக்கு அந்த வழக்கில் பிடி­யாணை பிறப்­பிக்­கப்­பட்­டி­ருந்­தது.

அதன்படி இலங்கையில் ஐ.ஆர்.சி. எனப்படும் பதிவு செய்யப்பட்ட குற்றவாளியான ஜீபும்பா, நேற்று நண்பகல் வரை இடம்பெற்ற விசாரணைகளில், அபுதாபியில் கைதாகி தற்போது டுபாயில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கஞ்சிபான இம்ரான், வழங்கும் ஒப்பந்தங்களின் அடிப்படையில் கொலைகளை முன்னெடுக்கும் ஒப்பந்தக் கொலையாளி என்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் துப்பாக்கிச் சூடுகளுக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் உள்ளிட்டவற்றை மீட்கவும் ஏனைய விடயங்கள் குறித்து வெளிப்படுத்தவும் ஜீபும்பா தொடர்பில் மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.