திண்மக்கழிவு திட்டத்தை நிறுத்த ஒத்துழையுங்கள்

எதிர்க்கட்சித் தலைவரிடம் கோரிக்கை

0 695

அர­சாங்கம் முன்­னெ­டுத்­துள்ள புத்­தளம் அறு­வாக்­காடு திண்­மக்­க­ழிவு முகா­மைத்­துவத் திட்­டத்தை நிறுத்­து­வ­தற்கு ஒத்­து­ழைக்­கு­மாறு கோரி கிளீன் புத்­தளம் அமைப்பு மற்றும் முஸ்லிம் உரி­மை­களைப் பாது­காக்கும் அமைப்பு என்­பன எதிர்க்­கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக் ஷவிடம் நேற்று மக­ஜ­ரொன்­றினைக் கைய­ளித்­துள்­ளன.

அறு­வாக்­காடு திண்­மக்­க­ழிவு முகா­மைத்­துவ திட்­டத்தின் கீழ் புத்­த­ளத்தில் கொழும்பு குப்­பைகள் கொட்­டப்­ப­டு­வதால் சூழல் பாதிப்­ப­டை­வ­துடன் அப்­ப­குதி மக்கள் பல்­வேறு சுகா­தார பிரச்­சி­னைகள் எதிர்­நோக்­கு­வார்கள் என குறிப்­பிட்ட அமைப்­புகள் எதிர்க்­கட்சி தலை­வ­ரிடம் முறைப்­பா­டு­களை முன்­வைத்­தன.

கிளீன் புத்­தளம் மற்றும் முஸ்­லிம்­களின் உரி­மை­களைப் பாது­காக்கும் அமைப்பின் பிர­தி­நி­தி­க­ளுக்குப் பதி­ல­ளித்த எதிர்க்­கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக் ஷ ‘இத்­திட்டம் அப்­ப­குதி மக்­க­ளுக்குப் பாதிப்­பா­னது என பலத்த எதிர்ப்­புகள் வெளி­யி­டப்­பட்­டுள்­ளன. இது தொடர்பில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் கலந்­து­ரை­யாடி சுமு­க­மான தீர்­வொன்­றினைப் பெற்­றுக்­கொ­டுக்கும் முயற்­சி­களை முன்­னெ­டுக்­க­வுள்ளேன். அத்­தோடு இத்­திட்டம் தொடர்­பாக பாரா­ளு­மன்­றத்தில் எமது பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் விவா­த­மொன்­றி­னையும் கோர­வுள்­ளார்கள் என்றார்.

எதிர்க்­கட்சித் தலை­வரின் காரி­யா­ல­யத்தில் இடம்­பெற்ற இச்­சந்­திப்பில் கிளீன் புத்­தளம் அமைப்பின் சார்பில் இல்ஹாம் மரிக்கார், டாக்டர் சராபத், மொஹமட் மௌபீர், சாஜஹான் ஆகி­யோரும் முஸ்லிம் உரி­மை­க­ளுக்­கான அமைப்பின் சார்பில் ஐ.என்.எம்.மிப்லால் ஆகியோர் கலந்து கொண்­டி­ருந்­தனர்.

இதே­வேளை எதிர்­வரும் 19 ஆம் திகதி அறுவாக்காடு குப்பைத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனாதிபதி செயலகத்தின் முன்னால் புத்தளம் மக்களால் ஆர்ப்பாட்டம் ஒன்றிணையும் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.