த.தே.கூ.-ஐ.தே.க. இணைந்து நாட்டை நாசமாக்கியுள்ளன

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ

0 627

தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­புடன் கூட்­டணி அமைத்­துக்­கொண்டு ஐக்­கிய தேசியக் கட்சி நடத்தும் இந்த நான்கு ஆண்­டு­கால அர­சாங்­கமே நாட்டை நாச­மாக்­கி­யுள்­ளது.

தேசிய உற்­பத்­தி­களை வீழ்த்தி, சர்­வ­தேச முத­லீ­டு­களை தடுத்து ஆசி­யாவின் கீழ்­மட்ட நாடக இலங்­கையை மாற்­றி­யுள்ள நிலையில் இனியும் இந்த ஆட்­சிக்கு இட­ம­ளிக்க முடி­யாது. ஆகவே, ஆளும் கட்­சியின் பின்­வ­ரிசை உறுப்­பி­னர்கள் எம்­முடன் இணைந்து புதிய ஆட்­சிக்கு உத­வுங்கள் என எதிர்க்­கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக் ஷ தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை வரவு செல­வுத்­திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான இறு­திநாள் விவா­தத்தில் உரை­யாற்­றி­ய­போதே அவர் இதனைக் குறிப்­பிட்டார். அவர் மேலும் கூறு­கையில்,

இலங்­கையின் பொரு­ளா­தார நெருக்­க­டிக்கு எமது கையில் இருந்த 50 நாட்கள் அர­சாங்கம் தான் கார­ண­மென நிதி­ய­மைச்சர் தனது வரவு செல­வுத்­திட்ட உரையில் கூறினார். அதா­வது, கடந்த 2015 ஆம் ஆண்டு ஜன­வரி 8 ஆம் திக­தி­யி­லி­ருந்து 2019 மார்ச் 5ஆம் திகதி வரையில் வரவு செல­வுத்­திட்டம் முன்­வைக்கும் வரையில் இந்த அர­சாங்­கத்தின் 1516 நாட்­களில், 1464 நாட்கள் பிர­த­ம­ராக இருந்த ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் நிரு­வா­கத்தை விடவும், 52 நாட்கள் பிர­த­ம­ராக செயற்­பட்ட எனது ஆட்­சியில்தான் இந்த நாட்டின் பொரு­ளா­தாரம் வீழ்ச்சி கண்­டுள்­ள­துடன், நாடும் வீழ்ச்சி கண்­டுள்­ளது என்­பதே நிதி­ய­மைச்சர் முன்­வைத்­துள குற்­றச்­சாட்­டாகும். கடந்­தாண்டு ஒக்­டோபர் 26 ஆம் திகதி ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி தேசிய அர­சாங்­கத்­தி­லி­ருந்து வெளி­யே­றி­ய­தை­ய­டுத்து அர­சாங்கம் வீழ்ச்சி கண்­டது. அதன் பின்­னரே ஜனா­தி­பதி என்னை பிர­த­ம­ராக நிய­மித்து புதிய அர­சாங்­க­மொன்­றினை உரு­வாக்­கினார். இந்த அர­சாங்­கத்தை வீழ்த்த ஜனா­தி­பதி முன்­வைத்த கார­ணி­களில் பிர­தான குற்­றச்­சாட்­டாக முன்­வைத்த கார­ணி­களில் ஒன்று, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் தலை­மையில் கொண்­டு­செல்லும் இந்த அர­சாங்கம் பொரு­ளா­தார ரீதியில் பாரிய பின்­ன­டைவை கண்­டுள்­ளது. ஆகவே தேசிய அர­சாங்­க­மாக தொடர்ந்தும் பய­ணிக்க முடி­யாது என்ற கார­ணத்­தையே ஜனா­தி­பதி முன்­வைத்தார்.

இத­னை­ய­டுத்தே ஜனா­தி­பதி பொதுத் தேர்தல் ஒன்­றி­னையும் நடத்­தக்­கோ­ரினார். அதனை எதிர்த்து எதிர்த்­த­ரப்­புகள் நீதி­மன்றம் சென்­றனர், நீதி­மன்­றத்தில் தீர்ப்­பொன்று வழங்­கப்­பட்­டது. அதி­லி­ருந்து அர­சாங்கம் செயற்­ப­ட­மு­டி­யாது போய்­விட்­டது. ஆகவே எனது கையில் பிர­தமர் பத­வியை கொடுத்து சரி­யாக 19 நாட்­களில் அந்த ஆட்சி கலைக்­கப்­பட்­டது. இந்த 19 நாட்­களில் எம்மால் முழு­மை­யான பொரு­ளா­தார வேலைத்­திட்டம் ஒன்­றினை முன்­வைக்க முடி­யாது போய்­விட்­டது. எனினும் எம்­மிடம் இருந்த 19 நாட்­களில் மக்க­ளுக்கு எம்­மா­லான சலு­கை­களை கொடுத்து மக்­களின் வாழ்­வா­தார சுமை­களை குறைக்க முடிந்­தது. குறிப்­பாக இரண்டு தட­வைகள் எண்ணெய் விலையை குறைத்தும், விவ­சா­யி­க­ளுக்­கான உர மானியம் கொடுத்தும் நெருக்­க­டி­களை குறைக்க முடிந்­தது. அதேபோல் குறித்த சில காலத்தில் சர்­வ­தேச முத­லீட்­டா­ளர்­களை கூட இலங்­கைக்குள் வர­வ­ழைக்க முடிந்­தது. எனினும் அதன் பின்­ன­ரான அர­சியல் நெருக்­க­டியை அடுத்து அவர்கள் தமது முடி­வு­களை மாற்­றிக்­கொண்­டனர். ஐக்­கிய தேசிய கட்சி -– தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு கூட்­ட­ணியே இந்த வாய்ப்­பு­களை இல்­லாது செய்­தன.

எனது ஆட்­சியில் 9 ஆண்­டு­களில் யுத்­தத்தை நடத்­தி­ய­துடன் நாட்டின் பொரு­ளா­தா­ரத்தை 6.4 வீத­மாக உயர்த்­தினோம். இலங்­கையில் பொரு­ளா­தார வளர்ச்­சியில் அதிக உயர்­வு­கொண்ட காலம் இது­வே­யாகும். இந்தக் கால­கட்­டத்தில் சர்­வ­தேசம் எதிர்­கொண்ட எண்ணெய் நெருக்­கடி, கடன் நெருக்­கடி, சர்­வ­தேச அழுத்தம் என பல நெருக்­க­டி­க­ளுக்கு நாம் முகங்­கொ­டுத்தோம். இந்தக் காலத்தில் நாட்டின் வளங்கள் முழு­மை­யாக நாச­மாகும் அள­விற்கு மோச­மான யுத்தம் ஒன்றும் இடம்­பெற்றுக் கொண்­டி­ருந்­தது என்­பதை மறந்­து­வி­டக்­கூ­டாது. ஆனால் இந்த நெருக்­க­டி­களின் விளை­வு­களை மக்கள் அனு­ப­விக்க நாம் இட­ம­ளிக்­க­வில்லை. இன்­றைய தலை­வர்கள் போல் மக்கள் முன்னால் அழுது, முன்­னைய ஆட்­சி­யா­ளர்­களை குறை­கூறி எமது இய­லா­மையை வெளிப்­ப­டுத்­த­வில்லை. பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வை எட்­டினோம், நாட்­டி­னையும் கட்­டி­யெ­ழுப்­பினோம். ஐக்­கிய நாடக மாற்­றினோம்.

எனினும் இந்த அர­சாங்கம் கடந்த நான்கு ஆண்­டு­களில் வளர்ச்­சியை குறைத்­துக்­கொண்­டுதான் வந்­துள்­ளது. கடந்த ஆண்டில் பொரு­ளா­தார வளர்ச்சி 3 வீதத்­துடன் நின்­று­விட்­டது. சர்­வ­தேச கருத்­துக்­க­ணிப்பின் பிர­காரம் 2014 ஆம் ஆண்டு இலங்கை, ஆசி­யாவில் முதலாம் இடத்­தி­லி­ருந்­தது. எனினும் 2017 ஆம் ஆண்டு அதே கணிப்பின் பிர­காரம் இலங்கை ஆசி­யாவில் இறுதி இடத்தை வகிக்­கின்­றது. ஆப்­கா­னிஸ்தான் மட்­டுமே எம்மை விடவும் பின்­தங்­கிய நாடாக உள்­ளது. 2018 ஆம் ஆண்டின் அறிக்­கையில் ஒரு­வேளை இலங்கை இறு­தி­யான நாடாக மாறி­னாலும் ஆச்­ச­ரி­யப்­ப­டு­வ­தற்கு ஒன்­று­மில்லை. இன்று இலங்­கையின் வியா­பா­ரிகள் அனை­வரும் நெருக்­க­டி­களை சந்­திக்கும் நிலைமை உரு­வா­கி­யுள்­ளது. அதேபோல் கடன்­களை கூட பெற்­றுக்­கொள்ள முடி­யாத நிலைமை உள்­ள­தாகக் கூறு­கின்­றனர். வாங்­கிய கடன்­களை திரும்ப செலுத்­தக்­கூட முடி­யாது வியா­பாரம் வீழ்ச்சி கண்­டுள்­ள­தாக கூறு­கின்­றனர்.

இந்த நாட்டில் கடந்த நான்கு ஆண்­டு­களில் அரசு வரி­களை மட்­டுமே அற­விட்டு வரு­கின்­றது. ஆனால் வரு­மானம் அதி­க­ரிக்­க­வில்லை. தேசிய உற்­பத்தி இல்­லாது இந்தக் காலத்தில் கடன் அதி­க­ரித்­துள்­ளது. எமது காலத்தில் நாம் யுத்­தத்தை வெற்­றி­கொள்­ளவும், நாட்­டினை அபி­வி­ருத்­தியின் பக்கம் கொண்டு செல்­ல­வுமே கடன்­களை வாங்­கினோம். ஆனால் கடன் சுமை 71 வீத­மாக நாம் குறைத்தோம். ஆனால் இன்று கடன் சுமை 86 வீத­மாக மாறி­யுள்­ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு வரையில் இலங்­கையின் மொத்தக் கடன் தொகை 7391 பில்­லி­ய­னாக இருந்­தது. ஆனால் எமது காலத்தில் தேசிய உற்­பத்­திகள் வெகு­வாக அபி­வி­ருத்தி கண்­டது. ஆனால் ஆட்சி மாற்­றத்தின் பின்னர் இப்­போது வரையில் நாட்டின் கடன் தொகை 12 ட்ரில்­லி­ய­னாக உள்­ளது. இன்று தேசிய உற்­பத்­திக்கு இணை­யாக நாட்டின் கடன்­சுமை 91 வீத­மாக அதி­க­ரித்த அச்­சு­றுத்தல் நிலைமை காணப்­ப­டு­கின்­றது. பிர­த­மரும், மத்­திய வங்கி ஆளு­நரும் நாட்டின் கடன்­களை செலுத்­து­வது கடி­ன­மாக உள்­ளது என்ற கார­ணி­க­ளையே கூறு­கின்­றனர். இன்று எமது நாட்டில் வேலை­வாய்­ப்புகள் அதி­க­ரிக்­க­வில்லை. மாறாக வேலைகள் பறிக்­கப்­படும் நிலை­மையே காணப்­ப­டு­கின்­றது. இந்த கால­கட்­டத்தில் 6 இலட்­சத்து 54 ஆயிரம் வேலைகள் பறி­போ­யுள்­ளன. ஆனால் இவை குறித்து நிதி­ய­மைச்சர் ஒரு வார்த்­தை­கூடக் கூற­வில்லை. மாறாக இவர்கள் பொய்­களை கூறிக்­கொண்டு மக்­களை ஏமாற்றி வரு­கின்­றனர்.

எமது நாட்டின் பொரு­ளா­தார வளர்ச்சி குறித்து சர்­வ­தேச நாடு­களின் நிலைப்­பாடு இருக்­க­வில்லை. ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் சலு­கை­களை பெற்­றுக்­கொள்ள பார­தூ­ர­மான உடன்­ப­டிக்­கை­க­ளுக்கு அர­சாங்கம் இணக்கம் தெரி­வித்­தது. விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கு சாத­க­மான சூழலை உரு­வாக்கி, இரா­ணு­வத்தை தண்­டித்து, அதேபோல் புலி­க­ளுக்கு நிவா­ரணம், புலி­களை விடு­தலை செய்தல் என்ற சகல உடன்­ப­டிக்­கை­யையும் ஏற்­றுக்­கொண்­டது. ஆனாலும் இலங்­கைக்கு சாத­க­மான பொரு­ளா­தார வளர்ச்சி எது­வுமே இருக்­க­வில்லை. இருந்த நிலையை விடவும் மோச­மான நிலை­மைக்கே இன்று இலங்கை தள்­ளப்­பட்­டுள்­ளது. 2014 ஆம் ஆண்டு ஆசி­யாவில் பல­மான பங்­குகள் இலங்­கையே வைத்­தி­ருந்­தது . ஆனால் இன்று அந்த நிலை­மையும் இல்லை. ஆகவே இலங்கை தொடர்பில் சர்­வ­தேச முத­லீட்­டா­ளர்­க­ளுக்கு நம்­பிக்கை இருக்­க­வில்லை. மத்­திய வங்­கியில் அர­சாங்­கமே களவு செய்­யும்­பொது சர்­வ­தேசம் எம்மை நிரா­க­ரிப்­பது பெரிய விட­ய­மல்ல. எமது ஆட்­சியில் இலங்­கையின் ரூபாவின் பெறு­ம­தியை தக்­க­வைத்தோம், ஆனால் இந்த ஆட்­சி­யில்தான் இலங்­கையின் ரூபாவின் விலை வீழ்ச்­சி­ய­டைந்­தது. 39 வீதத்தால் ரூபாவின் விலை வீழ்ச்­சி­கண்­டது. அரச கடன் அதி­க­ரித்­துள்­ளது. ஆகவே எந்­த­வொரு அடிப்­படை கட்­டுப்­பாடும் இல்­லாத ஆட்­சியே இன்று முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றது என்­பது இதன் மூல­மாக வெளிப்­ப­டு­கின்­றது.

எமது ஆட்­சியில் நானும் எமது நிதி அமைச்­சர்­களும் நாட்டின் இலக்கை நோக்­கிய வரவு செல­வுத்­திட்­டத்தை வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்தோம். வரவு செல­வுத்­திட்டம் என்றால் அவ்­வாறே அமைய வேண்டும். நாட்டின் இலக்கை வெளிப்­ப­டுத்த வேண்டும், மக்­களின் நம்­பிக்­கையை உரு­வாக்க வேண்டும். ஆனால் இந்த வரவு செல­வுத்­திட்­டத்தில் அவ்­வாறு ஒன்றும் இல்லை. நாட்டின் பிர­தான பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு இல்லை. தேசிய உற்­பத்­தியை கட்­டி­யெ­ழுப்ப எந்த யோச­னையும் முன்­வைக்­க­வில்லை. வெறு­மனே கனவு மாளிகை திட்டம் மட்­டுமே உள்­ளது. நாம் உரு­வாக்­கிய வேலைத்­திட்­டத்தை விற்று ஆட்சி நடத்­தவே இவர்கள் முயற்­சித்து வரு­கின்­றனர். இந்த நான்கு ஆண்­டு­களில் ஐக்­கிய தேசிய கட்சி முன்­னெ­டுத்த ஆட்சி எவ்­வாறு என்­பதை கூறு­கின்றேன்.

மத்­திய வங்கி பிணை­முறி ஊழலில் பிணை­களை சட்ட விரோ­த­மாக மாற்­றி­ய­மைக்க அப்­போ­தைய மத்­திய வங்கி ஆளு­ந­ருக்கு ஆலோ­சனை வழங்கி நாட்­டுக்கு 10 பில்­லியன் நட்­டத்தை ஏற்­ப­டுத்­தி­யமை. இலங்­கையில் 2001 ஆம் ஆண்­டுக்கு பின்­ன­ரான நாட்டின் பொரு­ளா­தார வளர்ச்­சியை 3 வீத­மாக தக்க வைத்து தமது இய­லா­மையை வெளிப்­ப­டுத்­தி­யமை. கடந்த 2014 ஆம் ஆண்டு ஆசி­யாவில் வேக­மாக வளர்ச்சி கண்ட நாடான இலங்­கையில் 2018 ஆம் ஆண்டில் இறு­தி­யான நாடாக அல்­லது ஆப்­கா­னிஸ்தான் நாட்­டுடன் ஒப்­பிடும் அள­விற்கு கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளமை. மத்­திய தர வரு­மா­னத்தை பெற்ற எமது நாட்­டினை மீண்டும் குறைந்த வரு­மானம் பெரும் நாடாக மாற்­றி­யமை. கடந்த நான்கு ஆண்­டு­களில் வரிச் சுமையை இரண்டு மடங்­காக அதி­க­ரித்து மக்கள் மீது வரிச்­சு­மையை சுமத்தி அதனை பாரிய வெற்­றி­யெ­னவும் மார்­தட்­டிக்­கொண்­டமை. நான்கு ஆண்­டு­களில் நாட்டின் கடனை ஐந்து ட்ரில்­லியன் ரூபாவால் அதி­க­ரித்து 12 ட்ரில்­லியன் ரூபா­வாக கொண்டு சென்­றுள்­ளமை. 71 வீதத்தில் இருந்த நாட்டின் வரிச் சுமையை நான்கு ஆண்­டு­களில் 90 வீத­மாக அதி­க­ரிக்கச் செய்து நாட்டின் கடன் சுமையை அதி­க­ரித்­தமை.  இலங்­கையின் ரூபாவின் பெறு­ம­தியை வீழ்ச்­சி­ய­டையச் செய்து இது­வரை வர­லாற்றில் இல்­லா­த­ளவு மோச­மான நிலைமையை உருவாக்கியமை. நான்கு ஆண்டுகளில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாகக் கூறி இருந்த வேலைகளையும் பறித்தமை. சர்வதேச முதலீடுகளை கொண்டுவராதும் தேசிய ரீதியில் இருந்த முதலீட்டாளர்களையும் நாட்டை விட்டு வெளியேற்றி நாட்டின் வருமானத்தை வீழ்த்தியமை. சிங்கப்பூர் போன்ற நாடுகளுடன் வர்த்தக உடன்படிக்கைகளை செய்து இலங்கையின் வியாபாரத்தை நாசமாக்கி யமை. ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை விற்று அந்த கடனை சீனாவுக்கு கொடுத்து கடனை அடைக்காது அதனையும் களவெடுத்து மேலும் எம்மை கடனில் தள்ளியமை. இவ்வாறே கடந்த நான்கு ஆண்டுகளில் ஆட்சியை கொண்டு நடத்தினர். ஆகவே, இவ்வாறான ஆட்சியையே இந்த நான்கு ஆண்டுகளில் கொண்டு நடத்தி மக்களை ஏமாற்றி நாட்டை நாசமாக்கியது போதும். ஆகவே இனியும் இந்த ஆட்சிக்கு இடமளிக்க வேண்டாம். நாம் பொறுத்தது போதும். ஆகவே இந்த ஆட்சியை வீழ்த்த சகல தரப்பின் ஒத்துழைப்புகளை தாருங்கள். ஆளும் கட்சியின் பின்வரிசை உறுப்பினர்களின் ஆதரவையும் தாருங்கள் என்றார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.