சாய்ந்தமருதில் மு.கா.திட்டமிட்டு குழப்பங்களை ஏற்படுத்துகின்றது

மக்கள் சமாதானத்தை விரும்புகின்றனர் என்கிறார் ஹனீபா

0 615

சமா­தா­னத்தை விரும்பும், சமா­தா­ன­மாக மக்கள் வாழும் சாய்ந்­த­ம­ருதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் திட்­ட­மிட்டு குழப்­பத்தை ஏற்­ப­டுத்தி வரு­கி­றது. எங்­க­ளூரின் சமா­தா­னத்தைக் குலைத்து எம்மைப் பிள­வு­ப­டுத்த முயற்­சிப்­ப­வர்­களின் கனவு ஒரு­போதும் நிறை­வே­றாது என சாய்ந்­த­ம­ருது ஜும்ஆ பள்­ளி­வாசல் தலைவர் வை.எம். ஹனிபா தெரி­வித்தார்.

முன்னாள் கிழக்கு மாகாண சபையின் உறுப்­பி­னரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் இளைஞர் பிரிவு தேசிய அமைப்­பா­ள­ரு­மான ஆரிப் சம்­சு­தீனின் வாகனம் மற்றும் பிர­தேச அமைப்­பா­ளரின் வீடு என்­பன ஞாயிற்­றுக்­கி­ழமை இரவு தாக்­கப்­பட்­டுள்­ளமை தொடர்பில் ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே இவ்­வாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில்;

‘சாய்ந்­த­ம­ருது மக்கள் சுயேச்சைக் குழு­வான தோடம்­பழ சின்­னத்­தையே தொடர்ந்தும் ஆத­ரிப்­பார்கள். மக்­களை இதி­லி­ருந்தும் வேறு­ப­டுத்தி எடுக்க முடி­யாது. அமை­தி­யாக வாழும் மக்­களை பிள­வு­ப­டுத்த அர­சியல் கட்­சிகள் ஒரு­போதும் முயற்­சி­களை மேற்­கொள்­ளக்­கூ­டாது. ஊரில் திட்­ட­மிட்டு பிரச்­சி­னை­களை உரு­வாக்­கு­ப­வர்­க­ளுக்கு தேர்­தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்­டு­வார்கள்.

சாய்ந்­த­ம­ருது மக்கள் தங்­க­ளுக்­கென்று தனி­யான உள்­ளூ­ராட்சி மன்­ற­மொன்­றி­னையே இலக்­காகக் கொண்­டி­ருக்­கி­றார்கள். இதற்­கான முன்­னெ­டுப்­பு­களைத் தொடரும் நிலையில் அரசியல் கட்சிகள் மக்களைப் பிளவுபடுத்தும் முயற்சிகளில் ஈடுபடுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது’ என்றார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.