அமெ­ரிக்­காவில் முஸ்­லிம்கள் அதிக பாகு­பாட்டை எதிர்­கொள்­கின்­றனர்

கருத்­துக்­க­ணிப்பு தெரி­விப்பு

0 577

அமெ­ரிக்­காவில் ஏனைய மதக் குழு­வி­னரை விட முஸ்­லிம்­களே அதிக பாகு­பாட்டை எதிர்­கொள்­கின்­றனர் என கடந்த வெள்­ளிக்­கி­ழமை வெளி­யா­கிய பதிவு செய்­யப்­பட்ட வாக்­கா­ளர்­க­ளி­டையே மேற்­கொள்­ளப்­பட்ட கருத்­துக்­க­ணிப்பு தெரி­வித்­துள்­ளது.

ஹரீஸ்எக்ஸ் என்ற அர­சியல் இணை­யத்­த­ள­மொன்­றினால் மேற்­கொள்­ளப்­பட்ட கருத்­துக்­க­ணிப்பின் போது பதி­ல­ளித்த 85 வீத­மானோர் முஸ்­லிம்­களே அதிகம் பாகு­பாட்­டிற்கு உட்­ப­டுத்­தப்­ப­டு­வ­தாக தெரி­வித்­துள்­ளனர்.

அதே­வேளை 79 வீத­மானோர் யூதர்­களே அதிகம் பாகு­பாட்­டிற்­குட்­ப­டுத்­தப்­ப­டு­வ­தாக தெரி­வித்­துள்­ளனர்.

61 வீத­மானோர் கிறிஸ்­த­வர்­களே அதிகம் பாகு­பாட்­டிற்­குட்­ப­டுத்­தப்­ப­டு­வ­தாக தெரி­வித்­துள்ள அதே­வேளை 55 வீத­மானோர் நாத்­தி­க­வா­தி­களே அதிகம் பாகு­பாட்­டிற்­குட்­ப­டுத்­தப்­ப­டு­வ­தாக தெரி­வித்­துள்­ளனர்.

யூதர்­க­ளுக்கு எதி­ரான கருத்­துக்கள், இஸ்லாம் தொடர்­பான பீதி, மற்றும் ஏனைய சகிப்­புத்­தன்­மை­யற்ற வெறுப்­பு­ணர்வுக் கருத்­துக்­களைக் கண்­டிக்கும் தீர்­மானம் அமெ­ரிக்க காங்­கி­ரஸில் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட வாரத்­தி­லேயே இக் கருத்­துக்­க­ணிப்பு வெளி­யா­கி­யுள்­ளது.

வெறுப்­பு­ணர்வுக் கருத்­துக்­களைக் கண்­டிக்கும் தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­மை­யினை காங்­கி­ரஸின் மூன்று முஸ்லிம் உறுப்­பி­னர்­களும் ஒரு­மித்த குரலில் வர­வேற்­றுள்­ள­தோடு அனைத்து கோணங்­க­ளிலும் இது வர­லாற்று முக்­கி­யத்­துவம் வாய்ந்­தது எனத் தெரி­வித்­துள்­ளனர்.

எமது தேசத்தின் வர­லாற்றில் முதன்­மு­றை­யாக இஸ்­லாத்­திற்கு எதி­ரான வெறுப்­பு­ணர்­வினைக் கண்­டிக்கும் வகை­யி­லான தீர்­மா­ன­மொன்­றிற்கு வாக்­க­ளித்­துள்ளோம் என காங்­கிரஸ் பிர­தி­நிதி இல்ஹாம் ஒமர், றசீதா திலைப் மற்றும் அன்ரே கார்சன் ஆகியோர் அறிக்­கை­யொன்றில் தெரி­வித்­துள்­ளனர்.

காங்கிரஸின் முஸ்லிம் பிரதிநிதியான இல்ஹாம் ஒமர் இஸ்ரேலை விமர்சித்ததையடுத்து விமர்சகர்கள் வெகுண் டெழுந்ததன் பின்னணியில் வெறுப்புணர்வுக் கருத்துக்களைக் கண்டிக்கும் தீர்மானம் கொண்டுவரப் பட்டமை குறிப்பிடத்தக்கது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.