தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டாலும் அமைச்சரவை எண்ணிக்கை அதிகரிக்காது

உடன்பாடு எட்டப்படவில்லை என்கிறார் எரான்

0 599

நாட்டின் நலன் கருதி தேசிய அர­சாங்கம் அமைக்­கப்­பட்டால் அதனை தவ­றெனக் கூற­மு­டி­யாது. ஆனால் அமைச்­ச­ர­வையின் எண்­ணிக்­கையை அதி­க­ரிப்­ப­தற்­காக தேசிய அர­சாங்கம் அமைக்­கப்­ப­டு­மாக இருந்தால் அதில் தனக்கு உடன்­பா­டில்­லை­யென இரா­ஜாங்க நிதி அமைச்சர் எரான் விக்­ர­ம­ரத்ன தெரி­வித்தார்.

தேசிய அர­சாங்கம் அமைக்­கப்­பட்டால் அமைச்­ச­ர­வையின் எண்­ணிக்­கையை அதி­க­ரிக்க முடி­யு­மென 19 ஆவது அர­சி­ய­ல­மைப்பு சீர்­தி­ருத்­தத்தில் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளது. தற்­போது அத­னை­யொரு தடை­யா­கவே நான் கரு­து­கின்றேன். அமைச்­ச­ர­வையின் எண்­ணிக்­கையை அதி­க­ரிப்­பதை மாத்­திரம் நோக்­காகக் கொண்டு தேசிய அர­சாங்கம் அமைக்­கப்­ப­டுதல் தவ­றா­ன­தொரு விட­ய­மாகும்.

கடந்த காலங்­களில் திட்­ட­மி­டப்­பட்­ட­வாறு பூர்த்தி செய்­யப்­ப­டாத அபி­வி­ருத்தி திட்­டங்­களை முழு­மை­யாக நிறைவு செய்­வ­தற்கு அர­சாங்­கத்­திற்கு மிகக் குறு­கிய காலமே காணப்­ப­டு­கின்­றது. எனவே அவற்றை முழு­மை­யாக செய்து முடிப்­ப­தற்­காக தேசிய அர­சாங்கம் அமைக்­கப்­பட்டால் அதனை ஏற்றுக் கொள்­ளலாம் எனவும் அவர் மேலும் தெரி­வித்தார்.

மேலும், பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஒருவர் வேறு தொழில்­க­ளிலும் ஈடு­பட முடியும். எனினும் அவர் அமைச்­ச­ரா­கவும் இருப்பின் வேறெந்த தொழில்­க­ளிலும் ஈடு­பட முடி­யாது என்ற நிலை­யொன்று உரு­வாக்­கப்­பட வேண்டும். இவ்­வி­டயம் குறித்தும் கவனம் செலுத்த வேண்­டு­மென எதிர்­பார்ப்­ப­தா­கவும் அவர் தெரி­வித்தார்.

இதன் போது ட்ரான்ஸ்­பெ­ரன்சி இன்­டர்­நெ­ஷனல் அமைப்­பினால் கோரப்­பட்­ட­தற்­க­மைய தமது சொத்து விப­ரங்­களை பகி­ரங்­க­மாக அறி­வித்­தி­ருந்­தமை தொடர்பில் தெரி­வித்த அவர், அர­சி­யலில் ஈடு­ப­டு­வதன் மூலம் பொதுச் சொத்­துக்­களை கொள்­ளை­யி­டவும், ஊழலில் ஈடு­ப­டவும் முடியும் என்­பதே பலரின் அபிப்­பி­ரா­ய­மாக உள்­ளது. எனினும் அத்­த­கை­ய­தொரு அர­சியல் கலா­சா­ரத்தில் மாற்­றத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்கே நாங்கள் அனை­வரும் தற்­போது முன்­வந்­தி­ருக்­கின்றோம். நாங்கள் வெவ்­வேறு கட்­சி­களைச் சேர்ந்­த­வர்கள். எமக்குள் கொள்கை ரீதி­யான வேறு­பா­டுகள் இருக்­கின்­றன. எனினும் ஊழலை ஒழிக்க வேண்டும் என்ற நிலைப்­பாட்டில் எம்­ம­னை­வ­ருக்கும் மாற்­றுக்­க­ருத்­துக்கள் இல்லை.

அத்­தோடு வரு­டாந்தம் சமர்ப்­பிக்­கப்­ப­டு­கின்ற பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் சொத்து விப­ரங்­களைப் பொறுத்­த­வரை, அவர்கள் அமைச்சரவை அமைச்சர்களாக இருப்பின் தமது விபரங்களை ஜனாதிபதியிடமும், பாராளுமன்ற உறுப்பினராக மாத்திரம் இருப்பின் தமது விபரங்களை பாராளுமன்றத்திற்கும் சமர்ப்பிக்க வேண்டியுள்ளது. இந்நிலையிலும் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.