49 ஆவது வார­மாகத் தொடரும்  காஸா மக்­களின் போராட்டம்

0 574

காஸா பள்­ளத்­தாக்கில் பல ஆண்­டு­க­ளாக நீடித்­து­வரும் இஸ்­ரே­லிய ஆக்­கி­ர­மிப்­புக்கு எதி­ராக 49 ஆவது வார­மாக நடை­பெற்­று­வரும் எதிர்ப்பு ஆர்ப்­பாட்­டங்­களில் பங்­கேற்­ப­தற்­காக கடந்த வெள்­ளிக்­கி­ழமை காஸா – இஸ்ரேல் பாது­காப்பு எல்­லையில் பலஸ்­தீ­னர்கள் ஒன்­று­கூ­டினர்.

தடை­யினைத் தகர்ப்­ப­தற்­கான காஸா தேசிய அதி­கா­ர­ச­பையின் அறிக்­கை­யொன்றில் வெள்­ளிக்­கி­ழமை ஆர்ப்­பாட்­டத்தில் பங்­கு­பற்­று­மாறு காஸா மக்­க­ளிடம் வேண்­டுகோள் விடுக்­கப்­பட்­டி­ருந்­தது.

ஊர்­வ­லங்­களில்  பொது­மக்கள் பங்­கு­பற்­று­தலைப் பார்க்­கும்­போது தடைகள் தகர்க்­கப்­படும் வரை அவர்கள் தமது போராட்­டங்­க­ளி­லி­ருந்து பின்­வாங்க மாட்­டார்கள் என்­பது புல­னா­கின்­றது என 2007 ஆம் ஆண்டு தொடக்கம் காஸாவை ஆட்சி செய்து வரும் ஹமாஸின் பேச்­சா­ள­ரான ஹாஸெம் காசிம் தெரி­வித்தார்.

கடந்த வருடம் மார்ச் மாதம் ஆர்ப்­பாட்­டங்கள் ஆரம்­பிக்­கப்­பட்­ட­தி­லி­ருந்து தடை­செய்­யப்­பட்ட பகு­தி­களில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டி­ருந்த இஸ்­ரே­லியப் படை­யி­னரால் 250 இற்கும் மேற்­பட்ட பலஸ்­தீ­னர்கள் கொல்­லப்­பட்­டுள்­ளனர்.

பலஸ்­தீன மனித உரி­மைகள் மத்­திய நிலை­யத்தின் தக­வல்­களின் படி 2018 ஆரம்பம் தொடக்கம் இஸ்­ரே­லியப் படை­யினர் 54 சிறு­வர்கள் உட்­பட 310 பலஸ்­தீ­னர்­களைக் கொன்­றுள்­ள­தோடு 900 இற்கும் மேற்­பட்­டேரைக் கைது செய்­துள்­ளனர்.

ஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட ஆள்­புலப் பிர­தே­சத்­தி­லி­ருந்து காஸா பள்­ளத்­தாக்கைப் பிரிக்கும் எல்லை வேலிக்கு அருகில் மீளத் திரும்­பு­வ­தற்­கான மாபெரும் பேரணி கடந்த மார்ச் 30 ஆம் திகதி ஆரம்­பிக்­கப்­பட்­ட­தி­லி­ருந்து அப் பகு­தியில் பதற்­ற­நிலை மேலும் அதி­க­ரித்­துள்­ளது.

இஸ்ரேல் என்ற நாட்­டினை உரு­வாக்­கு­வ­தற்­காக 1948 ஆம் ஆண்டு தாம் விரட்­டி­ய­டிக்­கப்­பட்ட தமது வாழ்­வி­டங்­க­ளுக்கு திரும்­பு­வ­தற்­கான உரி­மைக்­காக பலஸ்­தீன மக்கள் போராட்­டங்­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றனர்.

காஸா கரை­யோரப் பகு­தி­யினை பொரு­ளா­தார ரீதி­யாக மிகவும் பாதிப்­புக்­குள்­ளாக்­கி­யுள்­ளதும், சுமார் இரண்டு மில்­லியன் மக்­களின் அடிப்­படைத் தேவை­களைப் பெற்­றுக்­கொள்ள முடி­யா­ம­லா­கி­யுள்­ள­து­மான 12 வருட கால இஸ்­ரே­லியத் தடை­யினை நீக்­கு­மாறும் அவர்கள் கோரு­கின்­றனர்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.