நேபாளத்தில் உலங்குவானூர்தி விபத்தில் சுற்றுலா துறை அமைச்சர் உட்பட 7 பேர் பலி

0 650

நேபா­ளத்தில் தப்­ளேஜங் மாவட்­டத்தில் நேற்று மலை­யுடன் மோதி உலங்கு வானூர்தி­யொன்று விபத்­துக்­குள்­ளா­னதில் நேபாள சுற்­று­லாத்­துறை அமைச்சர் உட்­பட 7 பேர் உயி­ரி­ழந்­துள்­ளனர்.

அதன்­படி உலங்கு வானூர்­தியில் புறப்­பட்ட போது, பதி­பாரா  பகு­தியில் உள்ள மலைப்­ப­கு­தியில் விழுந்து, நொறுங்கி விபத்­துக்­குள்­ளா­னது. அந்த பகு­தியில் உலங்கு வானூர்தி பறந்­ததைப் பார்த்த பொது­மக்கள், சில நிமி­டங்­களில் அந்த இடத்­தி­லி­ருந்து மிகப்­பெ­ரிய அளவு தீப்­பி­ழம்பு  வெளி­யா­னதைக் கண்டு அரச அதி­கா­ரி­க­ளுக்கும், தப்­ளேஜங் மாவட்ட அதி­கா­ரி­க­ளுக்கும் தகவல் அளித்­தனர்.

அவர்கள் விரைந்து வந்து, சம்­பவம் நடந்த இடத்தை ஆய்வு செய்த போது, அங்கு உலங்கு வானூர்தி விழுந்து விபத்­துக்­குள்­ளா­னதை உறுதி செய்­தனர்.  இந்த விபத்தில், சுற்­று­லாத்­துறை அமைச்சர் ரபிந்­திர அதி­காரி, பிர­தமர் உத­வி­யாளர் கே.பி. சர்மா, பிரேந்­திர பிரசாத் ஷிரேஸ்தா, யுவ்ராஜ் தாஹல், அங் செரிங் செர்பா ஆகிய அதி­கா­ரிகள் பயணம் செய்­தனர். உலங்கு வானூர்தியில் பய­ணித்த அனை­வரும் பலி­யா­னார்கள் என விமானப் போக்­கு­வ­ரத்துத் துறை அதி­கா­ரிகள்  சார்பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இது குறித்து தப்­ளேஜங் மாவட்ட ஆட்­சியல் அனுஜ் பண்­டாரி கூறு­கையில், ” பதி­பாரா பகு­தியில் உலங்கு வானூர்தி சென்­ற­போது, திடீ­ரென மிகப்­பெ­ரிய சத்­தத்­துடன் கூடிய தீப்­பி­ழம்பு புகை ஏற்­பட்­டதை அப்­ப­குதி மக்கள் பார்த்­துள்­ளனர். அங்கு சென்று பார்த்த போது, உலங்கு வானூர்தி விபத்­துக்­குள்­ளாகி இருந்­தது. அதி­கா­ரிகள், தீய­ணைப்பு, மீட்­புப்­ப­டை­யினர் சம்­பவ இடத்­துக்குச் சென்­றுள்­ளனர் ” எனத் தெரி­வித்தார்.

இந்த விபத்தைத் தொடர்ந்து நேபாள பிரதமர், உடனடியாக அவசர அமைச்சரவைக் கூட்டத்துக்கு தனது இல்லத்தில் ஏற்பாடு செய்துள்ளார்.
-விடிவெள்ளி

Leave A Reply

Your email address will not be published.