அரச ஹஜ் குழுவில் சுயாதீன தன்மை இருக்க வேண்டும்

சிவில் பிரதிநிதிகள் வலியுறுத்து

0 590

எதிர்­கா­லத்தில் நிய­மிக்­கப்­படும் அரச ஹஜ் குழுக்கள் அர­சியல் சார்­பா­ன­தாக இல்­லாது சுயா­தீன குழுக்­க­ளாக அமைய வேண்டும். அரச ஹஜ் குழு வரைபு செய்­துள்ள ஹஜ் சட்ட மூல சிபா­ரி­சுகள் மூலம் ஹஜ் குழு எதிர்­கா­லத்தில் அர­சியல் சார்­பா­ன­தாக அமை­வ­தற்கு வாய்ப்­புகள் உள்­ளன.

அத்­தோடு ஹஜ் முக­வர்­களில் சிலர் கடத்தல் நட­வ­டிக்­கை­க­ளிலும் ஊழல்­க­ளிலும் ஈடு­ப­டு­கின்­றனர். அவ்­வா­றா­ன­வர்கள் தண்­டிக்­கப்­பட வேண்டும். அவ்­வா­றா­ன­வர்­களின் அனு­ம­திப்­பத்திம் ரத்துச் செய்­யப்­பட வேண்டும் என சிவில் சமூக பிர­தி­நி­தி­களும் ஹஜ் முக­வர்­களும் ஹஜ் சட்ட மூல வரை­பினை மீளாய்வு செய்து இறுதி தீர்­மானம் மேற்­கொள்­வ­தற்­காக நிய­மிக்­கப்­பட்­டி­ருக்கும் குழு­விடம் வேண்­டுகோள் விடுத்­தனர்.

அரச ஹஜ் குழு­வினால் வரைபு செய்­யப்­பட்டு அமைச்சர் ஹலீ­மி­டமும், அமைச்சின் செய­லா­ள­ரி­டமும் கைய­ளிக்­கப்­பட்­டுள்ள ஹஜ் சட்ட மூல சிபா­ரி­சுகள் தொடர்­பாக மீளாய்வு செய்யும் கூட்டம் கடந்த சனிக்­கி­ழமை கொழும்பு அஞ்சல், அஞ்சல் சேவைகள் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடை­பெற்­றது.

அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவ­கார அமைச்சின் செய­லாளர்  ஜனாபா எஸ்.எம். மொஹமட் தலை­மையில் இந்தக் கூட்டம் நடை­பெற்­றது.

ஹஜ் சட்ட மூல வரைபு தொடர்­பாக மீளாய்வு செய்­வ­தற்­காக நிய­மிக்­கப்­பட்­டுள்ள குழுவின் தலை­வ­ராக அமைச்சின் செய­லாளர் ஜனாபா எஸ்.எம். மொஹ­மதே பதவி வகிக்­கிறார்.

நிகழ்வில் அகில இலங்கை ஜம்­மி­யத்துல் உலமா சபை, தேசிய சூரா சபை, வை.எம்.எம்.ஏ., ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சில், இஸ்­லா­மிய இயக்­கங்கள், தரீக்­காக்கள், ஹஜ் முகவர் சங்­கங்­களில் பிர­தி­நி­திகள் என சுமார் 90 பேர் கலந்து கொண்­டனர்.

40 சிவில் சமூக அமைப்­பு­களின் பிர­தி­நி­திகள் இதில் உள்­ளடங்­கி­யி­ருந்­தனர்.ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்­ஸிலின் உப தலைவர் ஹில்மி அஹமட் நிகழ்வில் கருத்து தெரி­விக்­கையில்;

ஹஜ் குழு வடி­வ­மைத்­துள்ள வரைபில் எதிர்­கா­லத்தில் அரச ஹஜ் குழு­வுக்கு 9 பேர் நிய­மிக்­கப்­பட வேண்டும். அவர்­களில் இருவர் பதவி நிலையில் உள்­வாங்­கப்­பட வேண்டும். ஒருவர் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர், அடுத்­தவர் முஸ்லிம் சமய விவ­கா­ரங்­க­ளுக்குப் பொறுப்­பான அமைச்சின் செய­லாளர். செய­லாளர் மாற்று மதத்­த­வ­ராக இருந்தால் அவ­ரது பிர­தி­நி­தி­யென்றும் தெரி­வித்­துள்­ள­துடன் ஏனைய 7 பேரும் அமைச்­ச­ரினால் தெரிவு செய்­யப்­பட வேண்­டு­மெ­னவும் ஹஜ் சட்ட வரைபு தெரி­விக்­கி­றது.

பிரே­ரிக்­கப்­பட்­டுள்ள சிபா­ரி­சின்­படி ஹஜ் குழு எதிர்­கா­லத்தில் அர­சியல் மயப்­ப­டு­வ­தற்கு வாய்ப்­பி­ருக்­கி­றது. எனவே ஹஜ் குழு அமைச்சின் தலை­யீ­டின்றி சுயா­தீ­ன­மாக நிய­மிக்­கப்­பட வேண்டும் என்று கூறினார். அவ­ரது கருத்­தினை பலர் ஆத­ரித்துப் பேசி­னார்கள்.

ஹஜ் முக­வர்கள் சிலர் ஊழலில் ஈடு­ப­டு­வ­தா­கவும், கடத்­தலில் ஈடு­ப­டு­வ­தா­கவும் குற்றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது. அவ்­வா­றான நட­வ­டிக்­கை­களில் ஈடு­படும் ஹஜ் முக­வர்­களின் அனு­ம­திப்­பத்­திரம் ரத்துச் செய்­யப்­ப­டு­வ­துடன் அவர்­க­ளுக்கு தண்­டனை வழங்­கப்­ப­ட­வேண்­டு­மெ­னவும் வலி­யு­றுத்­தப்­பட்ட­டுள்­ளது. அத்­தோடு தற்­போது சுமார் 100 ஹஜ் முக­வர்கள் அனு­ம­திப்­பத்­திரம் பெற்­றுள்­ளார்கள். இலங்­கைக்கு வரு­டாந்தம் 3000 ஹஜ் கோட்­டாவே வழங்­கப்­ப­டு­கி­றது. சுமார் 30 கோட்­டாவே ஒரு­வ­ருக்கு வழங்கும் நிலை­யுள்­ளது. எனவே ஊழல்கள் புரியும் ஹஜ் முக­வர்கள் நீக்­கப்­ப­டு­வ­துடன் ஹஜ் முக­வர்­களின் எண்­ணிக்கை குறைக்­கப்­பட வேண்டும் எனவும் கருத்­துகள் பரி­மா­றப்­பட்­டன.

பொது மக்­களின் கருத்­து­க­ளையும் பெற்­றுக்­கொண்டு ஹஜ் சட்ட மூல வரைபின் இறுதி வடி­வ­மைப்­பினைப் பூர்த்தி செய்­வ­தென தீர்­மா­னிக்­கப்­பட்­டது. ஹஜ் சட்ட வரைபு தொடர்­பாக மீளாய்வு செய்யும் குழுவின் செய­லா­ள­ராக முஸ்லிம் சமய விவ­கார அமைச்சின் பணிப்­பாளர் ஏ.பி.எம். அஷ்ரப் செயற்­பட்டு வரு­கிறார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.