எமது அணி இணங்கினாலேயே கூட்டணியமைப்பது சாத்தியம்

எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ

0 532

கூட்டணியில் பயணிப்பது குறித்தோ அல்லது தனித்து தேர்தலில் களமிறங்குவது குறித்தோ தமது தரப்பு இன்னமும்  உறுதியான தீர்மானத்தை எட்டவில்லையென எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக் ஷ கூறுகின்றார். ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஏகமனதான தீர்மானம் என்னவோ அதனையே நான் செயற்படுத்துவேன்.எனது அணி இணக்கம் தெரி­வித்தால் கூட்­டணி அமைக்­கலாம் எனவும் கூறு­கின்றார்.

ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி,  – ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­னணி கட்­சிகள் இணைந்து கூட்­டணி அமைப்­பது குறித்து  ஆராய்ந்து வரு­கின்ற நிலையில் நேற்று முன்­தினம் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­யுடன் எதிர்க்­கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக் ஷ தலை­மை­யி­லான ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­னணி உறுப்­பி­னர்கள் பேச்­சு­வார்த்தை நடத்­தி­யி­ருந்­தனர். இந்த சந்­திப்பு குறித்து கருத்து தெரி­விக்­கும்­போதே அவர் இவ்­வாறு குறிப்­பிட்டார். அவர் மேலும் கூறு­கையில்,

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­யுடன் கூட்­ட­ணி­ய­மைப்­பது குறித்து ஆரா­யப்­ப­டு­கின்­றதே தவிர இப்­போது வரையில் இறுதித் தீர்­மா­ன­மொன்றை  எட்­ட­வில்லை. கூட்­டணி அமைப்­பது குறித்தோ அல்­லது தனித்து பய­ணிப்­பது குறித்தோ எமது தரப்பின் முழு­மை­யான இணக்­கப்­பாட்டின் அடிப்­ப­டையில் தான் தீர்­மா­னிக்­கப்­படும். இப்­போது வரையில் எமது தரப்பின் முழு­மை­யான இணக்­கப்­பாடு எட்­டப்­ப­ட­வில்லை.

கடந்த உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­தலில் நாம் தனித்து மிகப்­பெ­ரிய வெற்­றியை பெற்­றுள்ளோம்.  மாகா­ண­சபை தேர்­த­லிலும் தனித்து ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­ன­ணி­யாக கள­மி­றங்க வேண்­டு­மென கட்­சிக்குள் ஒரு­த­ரப்­பினர் கூறு­கின்­றனர். ஜனா­தி­பதி தேர்­தலில் கூட்­ட­ணி­ய­மைப்­பது குறித்து சிந்­திக்க  எமக்கு காலம் உள்­ளது. எனவே, ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­னணி எவ்­வா­றான தீர்வை எட்­டு­கின்­றதோ அதற்­க­மைய நான் செயற்­படத் தயா­ராக உள்ளேன். எமது கட்­சிக்­காக பாடு­பட்ட நபர்­களின் கருத்­துக்­களை என்னால் நிரா­க­ரிக்க முடி­யாது என்றார்.

இது­கு­றித்து பிர­சன்ன ரண­துங்க  எம்.பி. கருத்து கூறு­கையில்:- ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­யுடன் கூட்­டணி அமைத்­துக்­கொண்டு சகல தேர்­தல்­க­ளையும் முகங்­கொ­டுக்க வேண்­டு­மென எந்த அவ­சி­யமும் இப்­போது இல்லை. மாகா­ண­சபை தேர்­தலில் ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­ன­ணி­யாக நாம் போட்­டி­யிட வேண்டும் என்­பதே எமது நிலைப்­பா­டாக உள்­ளது.

ஜனா­தி­பதி தேர்­தலில் கூட்­டணி அமைப்­பதா இல்­லையா என்­பது குறித்து பின்னர் பார்த்­துக்­கொள்ள முடியும். ஆனால் இப்­போது அதற்­கான அவ­சி­ய­மில்லை. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் பலமான தனிக் கட்சி என்ற வகையில் அவர்களும் தனித்துக் களமிறங்கி தம்மை உறுதிப்படுத்திக்கொண்டால் கூட்டணி அமைக்கும்போது அது மேலும் பலமாக அமையும் என்றார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.