காஷ்மீர்: புல்வாமா உயிரிழப்புக்கள் நமக்கு உணர்த்துவது என்ன?

0 738

இந்­தி­யாவின் நிர்­வா­கத்தில் உள்ள காஷ்மீர் பகு­திக்கு 2018ஆம் ஆண்டு மிக மோச­மா­ன­தா­கவே இருந்­தது.

ஒரு பக்கம் இந்த தசாப்­தத்தில் அதி­க­பட்ச அளவில் உயிர்ப்­ப­லிகள் நடந்­தி­ருப்­பது – அங்கு நிலவும் மோதல்­களின் புதிய பரி­மா­ணத்தைக் காட்­டு­வ­தாக இருந்­தது. அடுத்­தது அங்கே நிலவும் அர­சியல் ஸ்திர­மற்ற நிலை.

கடந்­தாண்டில் காஷ்மீர் பள்­ளத்­தாக்குப் பகு­தியில் தீவி­ர­வா­திகள், இராணு­வத்­தினர் மற்றும் பொது மக்கள் என்று மொத்தம் 361 பேர் கொல்­லப்­பட்­டி­ருப்­ப­தாக இந்­திய உள்­துறை அமைச்சின் ஓர் அறிக்கை தெரி­விக்­கி­றது.

ஆனால் அங்கே செயற்­பட்டுக் கொண்­டி­ருக்கும் ‘ஜம்மு – காஷ்மீர் மக்கள் சமூ­கங்­களின் கூட்­டணி’ என்ற மனித உரி­மைகள் அமைப்பு இந்த எண்­ணிக்கை 586 என்று கூறி­யுள்­ளது.

2008இற்குப் பிறகு இதுதான் அதி­க­பட்ச எண்­ணிக்கை என்றும், அந்த ஆண்டில் 671 பேர் கொல்லப் பட்­டனர் என்றும் இந்த அமைப்பு குறிப்­பிட்­டுள்­ளது.

எந்த எண்­ணிக்கை சரி­யா­னது என்­பதைப் பற்றி கணக்கில் கொள்­ளாமல் பார்த்தால், கடந்த சில ஆண்­டு­களில் படித்த உள்ளூர் இளை­ஞர்கள் ஆயுதம் ஏந்தும் போக்கு அதி­க­ரித்து வரு­வதைக் காண­மு­டி­கி­றது.

மோதல் நடை­பெறும் சூழ்­நி­லை­களில் உள்ளூர் மக்கள் தீவி­ர­வா­தி­க­ளுக்குப் பாது­காப்­பாக மேற்­கொள்ளும் புதிய உத்­திகள், ஆயுதம் ஏந்­திய இராணு­வத்­தினர் ஏறத்­தாழ தினமும் தேடுதல் வேட்­டைகள் நடத்­து­வது ஆகி­யவை – தீவி­ர­மான அர­சியல் நெருக்­க­டியின் அறி­கு­றி­க­ளாகக் கரு­தப்­ப­டு­கின்­றன.

2016 ஆம் ஆண்டில் தீவி­ர­வா­தி­களின் கமாண்­ட­ராகக் கரு­தப்­பட்ட பர்ஹான் வானி கொல்­லப்­பட்ட பிறகு இந்தப் போக்­குகள் அதி­க­ரித்­துள்­ளன.

ஏன் வன்­மு­றைகள் அதி­க­ரித்துக் கொண்­டி­ருக்­கின்­றன?

இந்­தி­யாவின் நிர்­வா­கத்­தி­லுள்ள காஷ்மீர் பகு­தியில் நீண்ட கால­மா­கவே நிலவும் அர­சியல் ஸ்திர­மற்ற நிலை, 2018இல் உச்­ச­நி­லையை அடைந்­தது.

அந்தப் பகுதி குறித்து மத்­திய அரசின் கடி­ன­மான கொள்­கை­களே இதற்குக் காரணம். இதனால் வன்­மு­றைகள் அதி­க­ரித்­துள்­ளன.

”ஜம்மு -காஷ்­மீரில், குறிப்­பாக காஷ்மீர் பள்­ளத்­தாக்குப் பகு­தியில் இப்­போ­துள்ள சூழ்­நி­லை­யா­னது, அர­சியல் அணு­கு­மு­றையில் உள்ள குழப்­பத்தால் என்ன விளைவு ஏற்­படும் என்­ப­தற்கு தெளி­வான உதா­ர­ண­மாக உள்­ளது” என்று டெல்­லியைச் சேர்ந்த ‘த பிரிண்ட்’ (The Print) இணை­ய­த­ளத்தின் கட்­டு­ரையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

2015ஆம் ஆண்டில் மக்கள் ஜன­நா­யகக் கட்­சியும் (பி.டி.பி.), மத்­தியில் ஆளும் பார­திய ஜனதா கட்­சியும் (பா.ஜ.க.) சேர்ந்து அந்த மாநி­லத்தில் கூட்­டணி ஆட்சி அமைத்­த­தி­லி­ருந்தே வன்­மு­றைகள் அதி­க­ரித்து வரு­கின்­றன.

இரு கட்­சி­களும் கொள்கை ரீதியில் எதிர் துரு­வங்­க­ளாக இருப்­பவை.  இந்­திய அர­சியல் சாசன வரம்­புக்­குட்­பட்டு காஷ்மீர் மக்கள் விரும்பும் தன்­னாட்சி நிலை என்­பதை ஆத­ரிக்­கி­றது பி.டி.பி. ஆனால், அது­போன்ற எந்த தனிப்­பட்ட அந்­தஸ்தும் தரக் கூடா­தென்ற கொள்­கையைக் கொண்­டி­ருப்­பது பா.ஜ.க.

காஷ்மீர் மாநி­லத்­துக்கு சிறப்பு அந்­தஸ்து அளிக்க வகை செய்யும், இந்­திய அர­சியல் சாச­னத்தின் 370ஆவது பிரிவை ரத்து செய்­வ­தற்கு பா.ஜ.க. மேற்­கொண்ட முயற்சி கார­ண­மாக, இந்­திய ஆட்­சிக்கு எதி­ராகப் போராட்­டங்கள் அதி­க­ரித்­தன. இதனால் 2018 ஜூன் மாதம் பி.டி.பி. உட­னான கூட்­டணி முறிந்து, கூட்­டணி ஆட்சி கவிழ்ந்­தது.

அதன் பிறகு காஷ்மீர் மாநிலம் மத்­திய ஆட்­சியின் கீழ் வந்­தது. ஆனால் வன்­முறை மேலும் மோச­மா­கி­விட்­டது – “ஆப்­ப­ரேசன் ஆல் அவுட்” என்ற பெயரில் தீவி­ர­வா­தி­களை ஒழிப்­ப­தற்கு புதிய ஆட்சி நிர்­வாகம் கடு­மை­யான நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டதே இதற்குக் கார­ண­மென சில அர­சி­யல்­வா­திகள் கூறு­கின்­றனர். இந்தத் தீவி­ர­வா­தி­களில் பலரும் உள்ளூர் இளை­ஞர்­க­ளாக இருக்­கின்­றனர்.

ஆனால், அது­போன்ற எந்த நட­வ­டிக்­கையும் எடுக்­கப்­ப­ட­வில்லை என்று, காஷ்­மீ­ரி­லுள்ள மத்­திய ஆட்சி நிர்­வா­கத்தின் மூத்த பொறுப்­பி­லி­ருக்கும் ஆளுநர் சத்­யபால் மாலிக் மறுப்புத் தெரி­வித்­துள்ளார்.

”இந்தக் குழந்­தைகள் (தீவி­ர­வா­திகள்) திரும்ப வர­வேண்டும் என்று நாங்கள் விரும்­பு­கிறோம். அவர்­க­ளுக்­காக என்ன செய்ய முடி­யுமோ அவற்றைச் செய்ய நாங்கள் தயா­ராக இருக்­கிறோம்,” என்று 2019 ஜன­வரி 15 ஆம் திகதி பி.டி.ஐ. செய்தி நிறு­வ­னத்­திற்கு மாலிக் கூறி­ய­தாக சுட்­டிக்­காட்­டப்­ப­டு­கி­றது.

இருந்­த­போ­திலும், ”இளை­ஞர்கள் இந்த தேசத்தை மிகக் கவ­ன­மாக நோக்­கு­கி­றார்கள். அவர்கள் படித்­தி­ருப்­பதால், தீவி­ர­வா­தி­யாக மாறு­வது என்­ப­துதான் முதலில் அவர்­க­ளு­டைய மன­துக்குத் தோன்­று­கி­றது” என்று காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்­துல்லா டெல்­லியைச் சேர்ந்த ‘ஹிந்­துஸ்தான்’ பத்­தி­ரி­கைக்கு அளித்த பேட்­டியில் கூறி­யுள்ளார்.

இந்த நெருக்­கடி காஷ்மீர் இளை­ஞர்­களை எந்த வகையில் பாதிக்­கி­றது?

இளை­ஞர்­க­ளிடம் நம்­பிக்­கையை உரு­வாக்கும் வகையில் மத்­திய அர­சிடம் கொள்­கைகள் இல்­லா­தது அல்­லது மாநிலத் தலை­வர்கள் இல்­லா­தது ஆகிய கார­ணங்­களால் இளை­ஞர்­களின் கோபம் அதி­க­ரித்­துள்­ளது. காஷ்மீர் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகு­தி­யினர் இளை­ஞர்­க­ளாக இருக்­கின்­றனர்.

”இன்­றைக்கு காஷ்மீர் இளை­ஞர்­க­ளுக்கு, தங்­களை அடை­யா­ளப்­ப­டுத்திக் கொள்­வதில் சிக்கல் ஏற்­பட்­டுள்­ளது,” என்று ஸ்ரீந­கரைச் சேர்ந்த கிரேட் காஷ்மீர் (Great Kashmir) என்ற பத்­தி­ரிகை கூறி­யுள்­ளது.

”உதட்­ட­ளவில் கூறப்­படும் உறு­தி­மொ­ழி­களைக் கேட்டு இளை­ஞர்கள் வெறுப்­ப­டைந்­து­விட்­டனர். வாழ்­வ­தற்கு நல்ல இட­மாக காஷ்­மீரை மாற்­று­வ­தற்கு உறு­தி­யான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட வேண்டும் என்று அவர்கள் விரும்­பு­கி­றார்கள்,” என்று வேறொரு கட்­டு­ரையில் அந்தப் பத்­தி­ரிகை கூறி­யுள்­ளது.

காஷ்மீர் மக்கள் பலரின் நம்­பிக்­கையைப் பெற்­றி­ருந்த பிரி­வி­னை­வாத இயக்­க­மான ஹுரியத் மாநாட்டு கூட்­டணி தலை­வர்கள் மீது கடந்த சில ஆண்­டு­க­ளாக வெறுப்பு ஏற்­பட்­டுள்­ளது.

”ஹுரியத் தலை­வர்கள் திரும்பத் திரும்பத் தோல்வி அடைந்­து­விட்­டார்கள். பெரும்­பா­லான காஷ்மீர் மக்கள் அதை அறிந்­தி­ருக்­கி­றார்கள்” என்று தேசிய அள­வி­லான டெய்லி ஒ (Daily O) என்ற இணை­ய­த­ளத்தில் வெளி­யான ஜுனைத் கத்­ஜுவின் கட்­டு­ரையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

பிரி­வி­னை­வா­திகள் சிலர் இதை ஒப்­புக்­கொள்­கின்­றனர். ”இந்தச் சூழ்­நி­லையின் முன்­ன­ணியில் இருக்கும் இளை­ஞர்­களை எங்­களால் கட்­டுப்­ப­டுத்த முடி­ய­வில்லை” என்று பிரி­வி­னை­வாதத் தலைவர் மிர்வாஸ் உமர் பாரூக் கூறி­ய­தாக த பிரிண்ட் (The Print) தெரி­வித்­துள்­ளது.

இளை­ஞர்கள் எந்த வகையில் புதிய வடி­வி­லான வன்­மு­றையைக் கையில் எடுக்­கி­றார்கள்?

பல இளை­ஞர்கள் இப்­போது வெளிப்­ப­டை­யா­கவே தீவி­ர­வா­தி­களை ஆத­ரிக்­கி­றார்கள் – சமூக வலைத்­த­ளங்­களில் மட்டும் அவர்கள் நிற்­க­வில்லை

இராணு­வத்­தி­ன­ருடன் மோதல் ஏற்­ப­டும்­போதும் ஆத­ர­வ­ளிக்­கி­றார்கள். தாக்­கு­தலில் சிக்கிக் கொள்ளும் தீவி­ர­வா­தி­களை மீட்­ப­தற்கு முயற்­சிக்­கி­றார்கள், அப்­போது நடை­பெறும் சண்­டையில் உயி­ரி­ழக்­கவும் செய்­கி­றார்கள்.

உண்­மையில் தீவி­ர­வாதக் குழுக்­களில் சேரும் இளை­ஞர்­களின் எண்­ணிக்கை அதி­க­ரித்­துள்­ளது.

“2017 ஆம் ஆண்டில் காஷ்மீர் இளை­ஞர்கள் 128 பேர் தீவி­ர­வாத குழுக்­களில் இணைந்­தனர். 2016இல் இது 84 ஆகவும், 2015இல் இது 83 ஆகவும், 2014இல் இது 63 ஆகவும் இருந்­தது” என்று தேசிய அளவில் வெளி­யாகும் பைனான்­சியல் எக்ஸ்­பிரஸ் பத்­தி­ரிகை தெரி­வித்­துள்­ளது.

மேலும், 2018 ஆம் ஆண்டில் மட்டும் உயர்­கல்வித் தகு­தி­பெற்ற சிலர் தீவி­ர­வாத குழுக்­களில் சேர்ந்து, மோதல்­க­ளின்­போது கொல்­லப்­பட்­டி­ருக்­கி­றார்கள் என்று, தேசிய அளவில் வெளி­யான செய்­தி­களை மேற்கோள் காட்­டு­கி­றார்கள்.

இந்த சூழ்­நி­லையை தங்­க­ளுக்கு சாத­க­மாகப் பயன்­ப­டுத்திக் கொண்டு, மாநில இளை­ஞர்­களை தீவி­ர­வாத குழுக்­க­ளுக்கு தேர்வு செய்­வ­தற்கு, உல­க­ளவில் இயங்கும் ஐ.எஸ். மற்றும் அல்-­கொய்தா போன்ற தீவி­ர­வாத அமைப்­புகள் முயற்சி செய்­கின்­றன.

கடந்த சில ஆண்­டு­களில் சில இளை­ஞர்கள் இந்த இரு ஜிஹாதி அமைப்­பு­க­ளிலும் சேர்ந்­துள்­ளனர். காஷ்மீர் பிரச்­சி­னையை தேசிய இயக்கம் என்ற நிலையில் இருந்து ஷரீஆ சட்­டத்தை நிர்­மா­ணிக்கும் பிரச்­சி­னை­யாக மாற்­று­வ­தற்கு தீவி­ர­வாத அமைப்­புகள் மிகவும்0 சிர­மப்­பட வேண்­டி­யி­ருக்கும் என்று நிபு­ணர்கள் பலர் கூறி­னாலும், இளை­ஞர்கள் இந்த அமைப்­பு­களில் சேர்ந்­துள்­ளனர்.

பூகோள ரீதி­யி­லான அமைப்பு கார­ண­மா­கவும் சூழ்­நிலை சிக்­க­லாக இருக்­கி­றது. காஷ்மீர் எல்லை பிரச்­சினை குறித்து இந்­தியா, பாகிஸ்தான் இடையே பலன்­தரக் கூடிய தீர்வு ஏற்­ப­டா­ததால், எந்த முன்­னேற்­றமும் ஏற்­ப­டா­ததும் இதற்குக் கார­ண­மாகக் கரு­தப்­ப­டு­கி­றது.

இந்த ஆண்டின் பிற்­ப­கு­தியில் தேர்­தலை எதிர்­நோக்­கி­யுள்ள காஷ்­மீரில்,  தேர்தல் திகதி இன்னும் அறி­விக்­கப்­ப­ட­வில்லை என்­றாலும்  தேர்­த­லுக்கு முன்­ன­தாக வன்­மு­றைகள் தொடரும் அல்­லது மோச­மாகும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

இந்த நெருக்­கடி, “கட்­டுப்­ப­டுத்த முடி­யாத அள­வுக்கு புதிய, மோச­மான நிலையை ஏற்­ப­டுத்தும், அச்­சு­றுத்­த­லாக உரு­வாகும்” என்று த வெயர் (The Wire) இணை­ய­தளம் கூறி­யுள்­ளது.

அதி­ருப்­தியில் இருக்கும் காஷ்மீர் இளை­ஞர்­க­ளுக்­கான, மத்­திய அரசின் கொள்­கைகள் எதுவும் இல்லை.

ஜன­வரி 9ஆம் திகதி காஷ்­மீரைச் சேர்ந்த ஷா பசல் என்ற இளைஞர், செல்­வாக்கு மிகுந்த இந்­திய ஆட்சிப் பணி பொறுப்பில் இருந்து ராஜி­நாமா செய்து, புதிய விவா­தத்தை தொடங்கி வைத்­துள்ளார்.

இந்­தி­யா­வுடன் இருக்கும் வரை காஷ்மீர் மக்­க­ளுக்கு நல்ல எதிர்­காலம் கிடைக்­காது என்று அவர் கூறி­யுள்ளார்.

ஆட்சிப் பணியில் சேர விரும்பும் காஷ்மீர் இளை­ஞர்கள் பல­ருக்கு பசல் முன்­மா­தி­ரி­யான நப­ராக முன்பு கரு­தப்­பட்டார்.

ஆனால் காஷ்­மீரில் ”தொடர்ந்து நடை­பெறும் கொலைகள்” சம்­ப­வங்­க­ளுக்கு எதிர்ப்பு தெரி­விப்­ப­தாகக் கூறி அவர் ராஜி­நாமா செய்­துள்ளார். ஆனால் இது ”பொய்­களின் மூட்டை” என்று கூறி பா.ஜ.க. மறுப்பு தெரி­வித்­துள்­ளது.

ஆனால், “அவ­ரு­டைய அறிக்­கையில் ஒவ்வொரு வார்த்தையும் உண்மையானவை. பா.ஜ.க. அரசின் மீது குற்றஞ்சாட்டுபவை. அவருடைய கவலை மிகுந்த, உறுதியான குரலை உலகம் கவனத்தில் எடுத்துக் கொள்ளும்” என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப. சிதம்பரம் கூறியுள்ளார்.

காஷ்மீர் தேர்தலுக்குப் பிறகு எப்படி இருக்கும் என்று இந்தியாவில் தேசிய அளவிலான Times Now தொலைக்காட்சி இணையதளத்தில் வெளியிட்டுள்ள கட்டுரையில், “முந்தைய அனுபவங்களை வைத்துப் பார்த்தால், தேர்தல்மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு வந்தால் பெரிதாக எதுவும் நடந்துவிடாது” என்று கூறியுள்ளது.

அரசியல்வாதிகளும், பிரிவினைவாதிகளும், ஒருவர் மீது இன்னொருவர் மீண்டும் ஒருமுறை குற்றச்சாட்டுகளைக் கூறுவார்கள்.

உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று இருதரப்பினரும் குற்றஞ்சாட்டுவார்கள். காஷ்மீரின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் மந்திரக்கோல் தங்களிடம் இருப்பதாக இருதரப்பினரும் கூறுவார்கள்” என்று அந்தக் கட்டுரை முடிகிறது.

நன்றி : பி.பி.சி.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.