நாட்டில் சமயத் தலைவர்களும் போதைப்பொருள் பாவிக்கிறார்கள்

இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க

0 518

‘அர­சி­யல்­வா­திகள் மாத்­தி­ர­மல்ல சம­யத்­த­லை­வர்­களும் போதைப்­பொருள் பாவ­னையில் ஈடு­ப­டு­வ­தாக தக­வல்கள் கிடைத்­துள்­ளன. கொகெய்ன் பாவனை செய்யும் முஸ்லிம் சம­யத்­த­லை­வர்­க­ளான லெப்­பே­மாரும்  இருக்­கின்­றனர். அவர்கள் பள்­ளி­வா­சல்­க­ளி­லி­ருந்தும் துரத்­தி­ய­டிக்­கப்­பட வேண்டும். கொகெய்ன் மற்றும் போதைப்­பொருள் பாவனை செய்யும் அர­சாங்க மற்றும் எதிர்க்­கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் 24 பேரின் விப­ரங்­களை சபா­நா­ய­க­ரி­டமும், சி.ஐ.டியி­ன­ரி­டமும் கைய­ளித்­தி­ருக்­கிறேன்’ என பெருந்­தெ­ருக்கள் மற்றும் வீதி அபி­வி­ருத்தி இரா­ஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராம­நா­யக்க தெரி­வித்தார்.

மாதி­வெ­ல­யி­லுள்ள இரா­ஜாங்க அமைச்­சரின் உத்­தி­யோ­க­பூர்வ இல்­லத்தில் நடை­பெற்ற ஊடக சந்­தி­பொன்றில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யிலே அவர் இவ்­வாறு கூறினார். நேற்று முன்­தினம் நடை­பெற்ற இச்­சந்­திப்பில் அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில் தெரி­வித்­த­தா­வது, ‘பௌத்த மத­குரு ஒருவர் களு­போ­வில வைத்­தி­ய­சாலை கழி­வ­றையில் கொகெய்ன் பாவ­னையில் ஈடு­பட்­டி­ருந்­த­போது கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்ளார்.

அமைச்­சர்கள், இரா­ஜாங்க, பிரதி அமைச்­சர்கள் மற்றும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், மாகா­ண­சபை, உள்­ளூ­ராட்­சி­மன்ற உறுப்­பி­னர்­களும் போதைப்­பொருள் பாவனை செய்­ப­வர்கள் மத்­தியில் இருக்­கின்­றார்கள். அத்­தோடு உயர்­ப­தவி வகிப்­ப­வர்­களும் இதில் அடங்­கி­யுள்­ளார்கள். விசா­ர­ணை­க­ளுக்குப் பாதிப்பு ஏற்­ப­டு­மென்­பதால் அவ்­வா­றா­ன­வர்­களின் பெயர்­களை என்னால் பகி­ரங்­கப்­ப­டுத்த முடி­யாது.

கொகெய்ன் உட்­பட 11 போதைப்­பொ­ருட்கள் பாவனை செய்­யப்­பட்­டுள்­ளதா என கண்­ட­றியும் இரத்தப் பரி­சோ­த­னையை மேற்­கொள்­வ­தற்கு 4200 ரூபா தேவைப்­படும். நான் விரைவில் எனது இரத்தப் பரி­சோ­தனை அறிக்­கையை சபா­நா­ய­க­ரிடம் சமர்ப்­பிப்பேன். ஏனைய பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் தங்­க­ளது இரத்தப் பரி­சோ­தனை அறிக்­கையை சபா­நா­ய­க­ரிடம் கைய­ளிக்க வேண்டும். ஐக்­கிய தேசிய கட்­சியைச் சேர்ந்த பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் சிலரும் போதைப்­பொருள் பாவ­னை­யுடன் தொடர்­பு­டை­ய­வர்­க­ளாக இருக்­கி­றார்கள்.

கொகெய்ன் பாவனை இந்­த­ள­வுக்கு அதி­க­ரிப்­ப­தற்கு  அர­சி­யல்­வா­தி­களின் தொடர்பே கார­ண­மாக இருக்க வேண்டும்.

போதைப்­பொ­ருளை ஒழிப்­ப­தற்கு ஜனா­தி­பதி மேற்­கொள்ளும் நட­வ­டிக்­கை­க­ளுக்கு முழு­மை­யான பங்­க­ளிப்­பினை வழங்­குவேன்.

தோட்டத் தொழி­லா­ளர்­களைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் ஒரு பிர­பல பாரா­ளு­மன்ற   உ-றுப்­பினர் கொகெய்ன் பாவ­னை­யா­ள­ராவார். அவரை ஐந்து நட்­சத்­திர ஹோட்­டலில் ரஷ்ய பெண்­க­ளுடன் காண முடியும். மக்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த உறுப்பினர்களே போதைப்   பொருளிலிருந்தும் தவிர்ந்திருக்கிறார்கள்.

அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பதவியிலுள்ள சிலர் போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புபட்டு கொழும்பில் மாடி வீடுகளுக்குச் சொந்தக்காரர் களாகவும் இருக்கிறார்கள் என்றார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.