ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் இடம்பெற்ற தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 18 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 44 பேர் காயமடைந்துள்ளனர்.
லேத்போரா எனும் இடத்துக்கு அருகில் ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில், மத்திய ரிசர்வ் பொலிஸ் படையைச் சேர்ந்த வாகனங்கள் சென்றபோது அங்கு ஐ.ஈ.டி குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.
70 பேருந்துகளில் சுமார் 2500 படையினர் பயணித்தாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது என ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது. இந்தத் தாக்குதலுக்கு ஜெய்ஷ்-, -மொஹமத் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
வெடிபொருட்கள் நிரம்பிய வாகனம் ரிசர்வ் பொலிஸ் வாகனங்கள் மீது மோதி இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், பொலிஸார் அடையாளம் கண்டுள்ளதாக பி.டி.ஐ செய்தி தெரிவிக்கிறது.
300 மைல் நீளமுள்ள அந்த நெடுஞ்சாலை பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்தது.
இந்தியாவின் மத்திய உள்துறை அமைச்சகத்தின் புள்ளிவிபரங்களின்படி, இந்த ஆண்டில் கடந்த ஆறு வாரங்களில் 20 போராளிகள் காஷ்மீரில் கொல்லப்பட்டுள்ளனர்.
அந்த மாநிலத்தில் 2018 ஆம் ஆண்டு குறைந்தது 250 போராளிகள், 84 பொலிஸ் படையினர் மற்றும் சுமார் 150 பொதுமக்கள் தாக்குதல் சம்பவங்களில் கொல்லப்பட்டுள்ளனர்.
-Vidivelli