ஈராக்கின் மேற்கு அன்பார் மாகாணத்தில் 180 ஐ.எஸ்.அங்கத்தவர்களை ஈராக் பாதுகாப்புப் படையினர் கைது செய்ததாக கடந்த திங்கட்கிழமை அந்நாட்டின் உள்துறை அமைச்சு தெரிவித்தது.
தாம், எல்பு நெம்ர் பழங்குடியைச் சேர்ந்த பொதுமக்கள் பலரையும், முஸ்தபா எல்- அஸ்ஸாரி என்ற இராணுவ வீரரையும் பயங்கரவாதிகள் கொன்றதாகவும் பொதுமக்கள் மற்றும் இராணுவத்தினரை இலக்கு வைத்து குண்டுத் தாக்குதல்களை மேற்கொண்டதாகவும் பயங்கரவாதிகள் ஏற்றுக்கொண்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து அனைத்து பயங்கரவாதிகளுக்கும் மரணதண்டனை விதிக்கப்பட்டதாக உள்துறை அமைச்சுப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
2014 ஆம் ஆண்டு கோடை காலத்தின் போது ஈராக்கின் இரண்டாவது பெரிய நகரமான மௌசூல் உள்ளடங்கலாக வடக்கு மற்றும் மேற்கு ஈராக்கின் பெரும்பாலான பகுதிகளை ஐ.எஸ்.பயங்கரவாதிகள் கைப்பற்றினர்.
2017 ஆம் ஆண்டு பயங்கரவாதக் குழுவுக்கும் அமெரிக்க கூட்டுப் படையின் ஆதரவுடனான ஈராக்கிய இராணுவத்தினருக்கும் இடையேயான மூன்றாண்டு கால யுத்தத்தினைத் தொடர்ந்து ஐ.எஸ். தோற்கடிக்கப்பட்டதாக பக்தாதில் அதிகாரிகள் பிரகடனம் செய்தனர்.
-Vidivelli